(Reading time: 13 - 26 minutes)

07. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

உன்னாலே உன்னாலே

விண்ணாளச்சென்றேனே

உன் முன்னே உன் முன்னே

மெய் காண நின்றேனே

ஒரு சொட்டு கடலும் நீ

ஒரு போட்டு வானம் நீ

ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்

ஹோ ஒளி வீசும் இரவும் நீ

உயிர் கேட்கும் அமுதம் நீ

இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

 

ஒரு பார்வை நீளத்தை

ஒரு வார்த்தையின் ஆழத்தை

தாங்காமல் விழ்தேனே

தூங்காமல் வாழ்வேனே

நதிமீது சருகைப்போல்

உன் பாதை வருகின்றேன்

கரை தேற்றி விடுவாயோ

கதி மோட்சம் தருவாயோ

மொத்தமாய் மொத்தமாய்

நான் மாறிப்போனேனே

சுத்தமாய் சுத்தமாய்

தூள் தூளாய் ஆனேனே..”

வீட்டை சுற்றிபார்க்கும் சாக்கில் இளையவர்கள் ஒதுங்கி கொள்ள பெரியவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்..சஹானா தனதறைக்கு கார்த்திக்கை அழைத்து சென்று தன் சிறிய வயது புகைப்படங்களை காண்பித்து கொண்டிருந்தாள்..அதை பார்ப்பதை போன்ற பாவனையோடு தன்னருகில் இருப்பவளை ரசித்து கொண்டிருந்தான் கார்த்திக்..தற்செயலாய் அவன்புறம் திரும்பியவள்,

ஏய் கார்த்திக் உனக்கு சைட்கூட அடிக்க தெரியுமா??

அடிப்பாவி என்ன பாத்தா என்ன முற்றும் துறந்த முனிவர் மாறியா தெரியுது..

அவ்ளோ மோசமில்ல தான் இருந்தாலும் இப்படி கண்சிமிட்டாம என்ன பாக்குறியே அதுலதான் டவுட் முன்னாடிலா என்ன ஒழுங்காகூட பாக்க மாட்டல..

யாரு சொன்னது நா உன்ன பாத்ததில்லநு??ஒரு நிமிஷம் இத பாரு என தன் பேக்கிலிருந்து ஒரு சுருட்டியபடி இருந்த சாட் பேப்பரை அவளிடம் கொடுத்தான்..ஆர்வமாய் அதை வாங்கி பார்த்தவள் இமைக்கவும் மறந்து இருந்தாள்..அவளை முதன்முதலாய் ரயில் நிலையத்தில் பார்த்ததை தத்ரூபமாய் வரைந்திருந்தான்..அவள் அன்று அணிந்திருந்த உடை நிறம்கூட மாறவில்லை..

கார்த்திக்…

ம்ம்ம் நா உன்ன முதன்முதலா பாத்தப்போ இப்படிதான் இருந்த சஹி..அன்னைக்கே ஏதோ ஒரு பீல் பட் அத நா பெருசா எடுத்துக்கல..பட் அப்போவே நீ எனக்குள்ள அப்படியே பதிஞ்சுட்ட..

வெரி நைஸ் பெய்ண்டிங் தேங்க் யு சோ மச் கார்த்திக் என அவன் கன்னத்தில் இதழ் பதித்து ஓடிவிட்டாள்..திடீரென்று கிடைத்தபரிசில் திக்குமுக்காடி போனவன் கன்னத்தை தடவியவாறே குறுஞ்சிரிப்போடு அவளை பின் தொடர்ந்தான்..

ஹாலில் துளசியின் பின் ஒன்றும் தெரியாவளாய் நின்று கொண்டவளை பார்த்தவனுக்கு சிரிப்பு இன்னும் அதிகரித்தது..பேச்சும் சிரிப்புமாய் பொழுது கழிய கிளம்பும் வேளையில் கீதா,சேகர் குடும்பத்தை வரும் ஞாயிற்றுகிழமை விருந்திற்கு அழைத்தார்..சிவா குடும்பத்தையும் கண்டிப்பாக வர வேண்டும் என அன்பு கட்டளையிட்டு சென்றார்..

றுநாள் மாலை ஷரவந்தி பள்ளி முடிந்து வெளியே வர அங்கே சற்று தள்ளி காரில் சாய்ந்தவாறு நின்றிருந்த சிவாவை கண்டு ஆச்சரியம் கலந்த சிநேக புன்னகையை உதிர்த்தாள்..

ஹாய் சிவா என்ன இந்தபக்கம்??

உங்கள பாக்கதான் வந்தேன் ஷரவந்தி..எனக்காக ஒரு ஆப் அன் அவர் ஸ்பெண்ட் பண்ண முடியுமா??

என்ன சொல்வதென்று தெரியாமல் யோசித்தவள் பின் சரி வாங்க போலாம்..என்று கூற அருகிலிருந்த கோவிலில் சென்று சற்று நிழல் பகுதியில் அமர்ந்தனர்..ஓரிரு நிமிடம் மௌனத்திலிலே கரைய சிவாவே பேச்சை ஆரம்பித்தான்..

தேங்க்ஸ் என்ன மதிச்சு நா கூப்டவுடனே வந்ததுக்கு..

நோ பார்மாலிட்டீஸ் சிவா..சொல்லுங்க என்ன பேசனும் எதாவது அட்மிஷன் விஷயமா??யாருக்காவது ஹெல்ப் பண்ணணுமா??

ம்ம்ம் ரொம்ப தேவைதான் எனக்கு வேற வேலை வெட்டி இல்ல பாரு ரொம்ப கஷ்டம் என தனக்குள் நொந்தவன்,

அட நா என்ன ஸ்சோஷில் சர்வீஸ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னேனா??அதெல்லாம் இல்ல இது கொஞ்சம் பர்சனல்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.