(Reading time: 13 - 26 minutes)

ழைப்பு ஒருமைக்கு மாறியதை கண்டும் காணாமல் அவனே பேசட்டும் என அமைதி காத்தாள்..

ஷரவ் எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது நேராவே கேக்குறேன்..ஐ லவ் யு சோ மச்..வில் யு மேரி மீ??அவள் கண்களில் கண்டது என்ன கோபமா பயமா படபடப்பா தெரியவில்லை அவனுக்கு  ஆனால் அதை வெகுவாய் ரசித்தான்..

ஒரு நொடி அதிர்ந்தவள் தன்னை சமாளித்து கொண்டு,ஐ அம் சாரி சிவா இதுக்குதான் கூப்டீங்கநு தெரிஞ்சுருந்தா நா வந்துருக்கவே மாட்டேன்..நாம ஒரு த்ரி டைம்ஸ் பாத்துருப்போமா அதுக்குள்ள இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் முளைச்சுருச்சா எனக்கு இதெல்லாம் பிடிக்காது..நீங்க என் வருங்கால அண்ணியோட ப்ரதர்ங்கிற மரியாதைல தான் நீங்க கூப்டவுடனே வந்தேன்..மத்தபடி வேற ஒண்ணுமில்லை..நா எதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுருங்க நா கிளம்புறேன்..என எழ முயல அவள் கையை பிடித்து தடுத்தான் சிவா..காரமாய் ஒரு பார்வை அவளிடத்தில்..

சாரி ஷரவ் நா சொல்றத முழுசா கேட்டுட்டு அப்பறம் உன் முடிவ சொல்லு..ப்ளீஸ்ஸ்..

சற்றே தள்ளி அமர்ந்தவள் அமைதியாய் எங்கோ பார்த்தபடி இருந்தாள் சிவாவே தொடர்ந்தான்..ஷரவ் நீ வேணா என்ன இப்போதான் பாத்திருக்கலாம் ஆனா நா உன்ன ரெண்டு வருஷமா தேடிட்டு இருக்கேன்..

இதென்ன புதுக்கதை என அவள் சந்தேகமாய் பார்க்க,

சத்தியமாடா நா உன்ன முதன்முதலா பாத்தது குன்னூர்ல தான்..அந்த நாளின் நினைவுகளில் கரைந்தான்..

ன் நெருங்கிய நண்பனின் திருமணத்திற்காக குடும்பத்தோடு குன்னூர் சென்றிருந்தான்,.காதல் திருமணம் வேறு..அவன் தந்தை ஒத்து கொள்ளாததால் பேருக்கென்று சம்பிரதாயத்தோடு நடக்க அங்கு மாப்பிள்ளை சார்பில் இருந்ததில் நண்பர்களே அதிகம் ஆக ஆட்டபாட்டத்திற்கு குறைவில்லாமல் அதிர்ந்து கொண்டிருந்தது..ஆனால் மணமகனின் தந்தை தான் அவ்வப்போது பெண் குடும்பத்திடம் சிடுசிடுத்து கொண்டேயிருந்தார்..கல்யாணம் பிரச்சனையின்றி முடிய வேண்டுமென மணமகனும் பொறுமையை இழுத்துபிடித்து கொண்டிருந்தது நன்றாகவே தெரிந்தது..சிவா அவனருகிலேயே இருந்து சமாதானம் கூறி கொண்டிருந்தான்..

திடீரென்று அவர் மணமகளின் தந்தையிடம் ஏறத்தாழ சண்டையிடும் தோரணையில் பேச ஆரம்பித்திருந்தார் அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் மணமகனே எழுந்து கீழே செல்ல என்னவென்று விசாரித்ததில் சீதனமாய் தருவதாய் கூறிய 5 லட்ச ரூபாயை பெண் வீட்டில் தரவில்லையாம்..கேட்டதற்கு பணம் தொலைந்து விட்டதாக கூறினார்களாம்..

பணம் வராவிட்டால் இந்த கல்யாணமே நடக்காது..5 லட்சம்ங்கிறது என் ஸ்டேட்டஸ்க்கு ஒண்ணுமேயில்ல அத குடுக்க கூட வக்கில்லாத வீட்லயிருந்தா எனக்கு மருமக வரணும்..எல்லாம் இதோ நிக்குறானே இவன சொல்லனும் ஊர் உலகத்துல வேற பொண்ணேயில்லநு தேடி புடிச்சுருக்கான் பாரு..

மணப்பெண்ணோ அவமானத்தினால் கோபம் ஒருபுறமும் அதை வெளிகாட்ட முடியாத இயலாமையால் கண்களில் நீர்கோர்க்க அங்கிருந்து உள்ளே செல்ல அவளை சமாதானபடுத்த ஒரு கூட்டம் உள்ளே ஓடியது,.மணமகன் தன் அப்பாவோடு வாதத்தில் இறங்க சிவாவின் தந்தை சூழ்நிலையை அடக்க எண்ணியவறாய் இப்போ என்ன உங்களுக்கு தர வேண்டிய பணத்தை நா தரேன் முதல்ல கல்யாணம் நடக்கட்டும் வாங்க என அவரை நகர்த்த முயல..

மணமகளின் தம்பி அவரிடம் வந்து சார் அதெல்லாம் வேண்டாம் சார் நேத்து பணத்தை எடுத்துட்டு வரும் போது எப்படியோ மிஸ் ஆய்டுச்சு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கேன் சார் வேற ஏற்பாடும் பண்ணிருக்கேன் என் ப்ரெண்ட் ஊர்ல இல்ல ஈவ்னிங் கண்டிப்பா வந்து தரேன்னு சொல்லிருக்கான்..இவரு அத புரிஞ்சுக்க மாட்ராரு என ஆதங்கமாய் முடிக்க அதற்கு அந்த பெரியவர் மறுபடியும் ஏதோ கோபமாய் கத்த வர,ஒரு நிமிஷம் என்று அவரை தடுத்தது ஒரு பெண்ணின் குரல்..குரல் வந்த திசைக்கு முதுகு காட்டி நின்ற சிவா திரும்ப கையில் ஒரு பேக்கோடு இன்னொரு கையில் சிறிய பையை சுற்றிபிடித்திருந்தாள் அவள்..

யாரையும் கண்டுகொள்ளாமல் மணமகளின் சகோதரனிடம் சென்றவள்,ஹலோ ப்ரோ இது உங்க பேக்தான எல்லாம் கரெக்டா இருக்காநு பாருங்க..என அந்த பையை நீட்ட அவன் தொலைத்ததாய் கூறிய பணம் அத்தனையும் அதில் இருந்தது..கண்களில் இருதுளி நீர் அவனிடம்..

தேங்க் யு சோ மச் சிஸ்டர்..நீங்க பண்ணிணது எவ்ளோ பெரிய உதவி தெரியுமா..உங்கள நா மறக்கவே மாட்டேன்..

இட்ஸ் ஓ.கே. ரிலாக்ஸ்..நா தான் சாரி சொல்லனும் நேத்து நைட்டே இது என் கையில கிடைச்சுது பட் ரொம்ப லேட் ஆய்டுச்சேநு இப்போ வந்தேன்..நல்ல வேளையா உள்ள கல்யாண பத்திரிக்கை இருந்தது இல்லனா இது உங்க கைக்கு கிடைக்குறதுக்குள்ள சில பேர் உங்கள ஒரு வழி ஆக்கிருப்பாங்க என அந்த பெரியவரை பார்த்து முறைத்தவாறே கூற,

அவரோ,ஏ பொண்ணு வந்த வேலை முடிஞ்சுதுல கிளம்பு இது எங்க குடும்ப விஷயம் நாங்க பாத்துக்குறோம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.