(Reading time: 13 - 26 minutes)

து உங்க குடும்பமா??குடும்பம்னா என்னனு தெரியுமா சார்??பெத்த புள்ள மணக்கோலத்துல ஆயிரம் கனவோட தன் வாழ்க்கைய தொடங்கயிருக்கும் போது மனசு பூரா அன்பும் சிந்தனை பூரா ஆசீர்வாதமும் நிறைஞ்சு இருக்குற அப்பாவா இருந்தா நீங்க குடும்பத்த பத்தி பேசலாம் உங்களுக்கு இதோ இந்த ரூபா நோட்டு மட்டும் தான பெருசு வச்சுகோங்க ஆனா ஆடி அடங்கும் வயசுல உங்கள காப்பாத்த போறது இந்த பேப்பர் இல்ல இதோ அப்பாங்கிற மரியாதைக்காக குரல் உயர்த்தாம நிக்குறாரே இந்த பையனும் என்னதான் இருந்தாலும் நாம கல்யாணம் பண்ண போறவரோட அப்பாநு வாய மூடிட்டு அழுதுட்டு போற அந்த பொண்ணும்தான்..ஏன் சார் இவ்ளோ பேரோட கண்ணீருக்கு காரணமான இந்த பணம் உங்ககிட்ட தங்கும்நு நினைக்குறீங்க..பொண்ண பெத்தவங்க அமைதியா போறாங்கனு அவங்க மேலஏறி மிதிக்காதீங்க..அவங்க திரும்பி பேசினா வயசுல பெரியவரான உங்களுக்குதான் அசிங்கம் இனியாவது மனுஷங்கள மதிக்க கத்துகோங்க சார்..

அவளது பேச்சிற்கு எதிர்த்து பேசாமல் கடுகடு முகத்தோடு அங்கிருந்து நகர்ந்தார் அவர்..சிவாவோ மொத்தமாய் தன்னை மறந்திருந்தான்..வக்கீலா இருக்குற நமக்கு ஏத்த ஜோடிதானோ பாய்ண்ட் பாய்ண்ட்டா பிச்சு விட்றாளே என நினைக்க சிவா அப்பாவோ அவளிடம் அதை நேராகவே கூறினார்..அவர் பண்றது தப்புநு தெரிஞ்சாலும் ப்ரெண்டா போய்ட்டாரே எல்லார் முன்னாடியும் கத்த வேண்டாமேநு இருந்தேன்ம்மா ஆனா அவருக்கு நல்ல உரைக்குற மாறி புரியவச்சுட்ட..அதற்கு சிநேக புன்னகையை பதிலளித்தவள் அவர் அருகில் இருந்தவனிடம்,சரி ப்ரோ  நா கிளம்புறேன் இனியாவது கேர்புல்லா இருங்க என்று நகர,சிஸ்டர் இவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிட்டு மேரேஜ்க்கு இல்லாம போனா எப்படி ப்ளீஸ் அதுக்கப்பறம் நீங்க எங்க போனுமோ நானே கொண்டுபோய் விட்றேன் ப்ளீஸ்…

இல்லங்க நா சென்னை போறேன்..நேத்து நைட்டே போய்ருக்க வேண்டியது உங்ககிட்ட இத குடுக்கனும்னு தான் இருந்தேன்..இதுவே லேட் வீட்ல தேடுவாங்க அடுத்த தடவை இங்க வந்தா கண்டிப்பா வரேன்..தப்பா எடுத்துகாதீங்க என கூறி மறைந்தாள்..

ன்னைக்கே நீ எனக்குள்ள ஆனி அடிச்சு உக்காந்துட்ட ஷரவ்..இந்த ரெண்டு வருஷமும் உன்னதான் நினைச்சுட்டு இருக்கேன்..உன் பேர் கூட தெரியாது ஆனா ஏதோ ஒரு நம்பிக்கை நீ எனக்கானவ தான் நா உன்ன பாத்துருவேன்னு சொல்லிட்டேயிருந்தது..அன்னைக்கு உங்கவீட்டு பங்ஷனுக்கு இன்வைட் பண்ண வந்தியே அந்த ஒரு செகண்ட் என் கால் தரையில படல தெரியுமா நீ என்கிட்டயே வந்துட்டநு அவ்ளோ சந்தோஷம்..அப்பா அம்மாக்கும் என் விருப்பத்துல சம்மதம்தான்..நேத்து தான் உங்க அண்ணாகிட்டயும் பேசினேன் உன் முடிவு எதுவோ அதான் அவரு முடிவுனும் சொல்லிட்டாரு..இப்போ முடிவு எடுக்க வேண்டியது நீதான் என அவள் முகம் பார்க்க,

அவளோ ஏதோ விசித்திர லோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தாள்..அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுள் ரீங்காரமிட்டு கொண்டேயிருக்க தன்னை மறந்திருந்தாள்..லேசாய் அவள் தோளை தொட்டு அசைக்க நடப்புலகிற்கு வந்தவள்,சாரி சிவா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..நீங்க சொல்றது எல்லாம் சினிமால தான் பாத்துருக்கேன்..நிஜ வாழ்க்கையில் இது எவ்வளவு சாத்தியம்நு தெரில..என் பதில சண்டே நீங்க வீட்டுக்கு வரும்போது சொல்றேன் ப்ளீஸ்..

ஹே ஷரவ் டேக் யுவர் ஓன் டைம்..பட் ப்ளீஸ் பாசிட்டீவ்வா சொல்லிடு அதுக்கப்பறம் நீ என்ன சொல்ரியோ அதான் எனக்கு வேதவாக்கு..என்ன சொல்லவென தெரியாமல் லேசாய் தலையசைத்து சென்றாள்..

வீட்டிற்கு சென்றவள் முதல் வேலையாக கார்த்திக்கை தேடி சென்றாள்..அவனறையில் முக்கியமாய் ஏதோ ஃபைலை பார்த்து கொண்டிருந்தவன் சட்டென வந்து நின்றவளை கண்டு குறுஞ்சிரிப்போடு எழுந்து நின்றான்..

அண்ணா..

என்ன உன் ஆளு என்ன சொல்றாரு??

அண்ணா எனக்கு ஒண்ணுமே தெரியாது..இன்னைக்கு தான் அவரோட பேசினேனே அப்போ கூட அண்ணியோட கசின் ஆச்சேநு தான் பேச போனேன்ண்ணா..என சிறு பிள்ளையாய் கண்களில் நீர் கோர்க்க சொல்ல..

ஹே ஷரவ் என்னடா இது ச்சச முதல்ல இப்படி வந்து உக்காரு இதுகெல்லாம் அழுவாங்களா நா உன்ன தப்பே சொல்லலையே சும்மா கிண்டல் பண்ணேன் அதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆகுற..என சமாதானப்படுத்தினான்..

ஓரளவு நிதானமடைந்தவளாய் அவனை பார்க்க,ஷரவந்திம்மா நேத்து தான் சிவா என்கிட்ட இதபத்தி பேசினாரு,.அதுவும் உங்க பிளாஷ்பேக்லா சொல்லல நேரா கல்யாணத்தை பத்தி தான் பேசினாரு..அவரு உன்ன பாக்குறப்போயெல்லாமே ஒரு பல்ப் எரியும் என்னனு யோசிச்சுருக்கேன்..ரொம்ப நல்ல பையன்தான்டா..இருந்தாலும் உன் முடிவுதான் முக்கியம் எதபத்தியும் கவலபடாத உனக்கு என்ன தோணுதோ அத சொல்லிடு சரியா??

அண்ணா என அவன் தோள் சாய்ந்து கொண்டவள்,எப்படி அண்ணா நீ இப்படியிருக்க..நீ என்  அண்ணணா கிடைச்சதுக்கு நா ரொம்ப லக்கி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.