ம்ம் போதுமே ஐஸ் வச்சது ரொம்ப குளுருதுடா என கூறினாலும் அவன் கைகள் தங்கையை ஆதரவாய் தாங்கி கொள்ள தவறவில்லை..சரி அவர்ட்ட என்ன சொல்லிட்டு வந்த??
சண்டே சொல்றேன்னு சொல்லிருக்கேன்ணா…
ஓஓ சரி நல்லா யோசிச்சு முடிவு எடு இப்போ போய் எதாவது சாப்பிடு போ அம்மா தேட போறாங்க என அனுப்பிவிட்டு திரும்பவும் அவன் கைபேசி அழைக்கவும் சரியாயிருந்தது..
முகத்தில் புன்னகை தவழ அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..சொல்லுங்க மேடம் என்ன பண்றீங்க??
கார்த்திக் பயங்கரமா போர் அடிக்குது மூவி எங்கேயாவது போலாமா??
என்ன ஒரு ஆச்சரியம் உனக்கே போர் அடிக்குதா சஹி??
என்ன கலாய்ச்சது போதும் கூட்டிட்டு போவியா மாட்டியா??
அவளின் இந்த பேச்சை கேட்டு ரசிக்கவே அவளோடு பேச்சை வளர்ப்பது வாடிக்கையாகிவிட்டது அவனுக்கு...
சரி சரி டென்ஷன் ஆகாத எனக்குமே வேலை பாத்து பபாத்து தலை வலிக்குது வெளியே போனா ரிலாக்ஸ்ட்டா தான் இருக்கும்…நீ ரெடி ஆய்ட்டு கால் பண்ணு நா வரேன்..
ஹேஹேஹே தேங்க் யூ மை புஜ்ஜு குட்டி இதோ 10 மினிட்ஸ்ல ரெடியாட்ரேன் பை,.
கூறியது போலவே 10 நிமிடத்தில் தயாராகி அவனை அழைத்தாள்..கார்த்திக்கும் ரெடி ஆகியிருந்ததால் சீக்கிரமாகவே சஹானாவின் வீட்டை அடைந்தான்..அவன் உள்ளே நுழையவும் சேகரும் துளசியும் வெளியே வரவும் சரியாயிருந்தது..
வாப்பா கார்த்திக்..டீநகர்ல ஒரு ரிசப்ஷன்காக போறோம் சஹானா நீங்க வெளிய போறதா சொன்னா பாத்து போய்ட்டு வாங்கப்பா..
ம்ம் ஓ.கே சார்..சாரி மாமா..
ம்ம் இப்படி கேக்க எவ்ளோ நல்லாயிருக்கு சரிப்பா நாங்க வரோம் என்றவாறு கிளம்ப உள்ளிருந்து சஹானா குரல் கொடுத்தாள் கார்த்திக் உள்ள வாங்க டூ மினிட்ஸ் வந்துட்றேன்..
ஹாலில் இருந்த அவளின் படத்தை கைகளால் வருடியபடி ரசித்து கொண்டிருந்தான்..என்ன சார் போலாமா??என அவனின் காதருகில் கு.ரல் கேட்க சட்டென திரும்பியவனின் பின் அவனின் உயரத்திற்கு ஈடுகொடுப்பதற்காக கால்களை எம்பி நின்றவள் அவன் திரும்பிய வேகத்தில் அவன் மீதே விழ சுவரில் சாய்ந்தவாறு அவளை பிடித்து நிறுத்தினான்..
சட்டென அவள் நகர முற்பட அவனின் கரம் அவளை இன்னுமாய் தன்புறம் இழுத்தது..
கார்த்திக் விடு நா போனும்..
போ யாரு வேண்டாம்நு சொன்னா???
அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களின் காதல் புரிய தலை தாழ்த்தி தன்னை விடுவிப்பதிலேயே குறியாய் இருந்தாள்..
சஹி என்னபாரு...
அவள் இமைகளை உயர்த்த அதில் தன் இதழ் பதித்தான் அந்த அன்பு காதலன்..லவ் யூ சோ மச் சஹி…
அவனின் பார்வையிலே கட்டுண்டவளாய் அசையாமல் அவள் நிற்க,என்ன இப்போ ஒத்துக்குறியா நாங்களும் ரொமாண்டிக் ஹீரோ தான்னு என புருவத்தை உயர்த்தி கேட்டவாறே அவள் முகத்தில் விழுந்த முடிகற்றையை கைகளால் ஒதுக்கினான்…
கார்த்திக் இன்னமும் நீ மாறவேயில்ல என அவன் கண்களில் கலந்தவளாய் ஏதோ ஓர் குரலில் அவள் கூற,
ஏன் சஹி அப்படி சொல்ற என அவளை தன்னோடு அணைத்தான்..
பின்ன என் தலைமுடில விளையாடுறத நீ மறக்கவேயில்லையே..
சட்டென அவளை நகர்த்தியவன் நான் இப்போதான இப்படி பண்றேன் நீ என்ன நா இதே வேலையா சுத்திட்டு இருந்தமாறி சொல்ற??
தூக்கத்திலிருந்து விழித்தவள் போல் ம்ம்ம் ஏதோ நியாபகத்துல சொல்லிட்டேன்..
சஹி என்னாச்சு??
கம் ஆன் கார்த்திக் மூவி முடிஞ்சே போய்ரும் நாம போரதுக்குள்ள என அவனை அடுத்து பேசவிடாது இழுத்து சென்றாள்..அடுத்த மூன்று மணி நேரம் சென்றதே தெரியவில்லை ததன்னவளின் அருகாமையை ரசித்து ரசித்து நேரம் செலவழித்தாலும் ஏனோ சஹானாவின் வார்த்தைகள் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டுதான் இருந்தது..இருப்பினும் அவளிடம் நேரடியாய் எதையும் கேட்கவில்லை..
ஹாய் ப்ரெண்ட்ஸ்..சிவாவோட கொசுவர்த்திய சுத்தி முடிச்சாச்சு ஷரவ் என்ன சொல்றாங்கநு பொறுத்திருந்து பாப்போம்..நம்ம சஹானாவோட சேஞ்சஸ்?????அத நான் இப்போ சொல்ல மாட்டேனே……
தொடரும்
{kunena_discuss:1097}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.