(Reading time: 21 - 41 minutes)

விழையா அவளின் அழகை என்றுமே உணர்ந்தது இல்லை .அவள் தன் வயதுடைய மற்ற பெண்கள் இன்று அழகுநிலையத்தின் உதவியால் திருத்தப்பட்ட புருவமும், வேக்சின் செய்திருந்த சருமமும் அலைஅலையாக தலைமுடியும் கண்டு பிரமிப்பு கொள்வாள் .

ஆனால் பார்வதி தன் மகளுக்கு இயற்கை முரையில் பயத்தமாவு ,கஸ்த்தூரி மஞ்சள் .வெட்டிவேர் , சீவக்காயால் அவளது நிறத்தை தங்க நிறமாகவும் தலைமுடியை கருத்த அழகான நீண்ட வாசனைடயதாகவும் பெண்களின் கண்ணியத்தை உடையிலும், நடையிலும், கலாச்சாரத்திலும் அவளுக்கு சிறுவயதில் இருந்து ஊட்டி வளர்த்ததினால் அவளிடம் மிளிர்ந்த பெண்மையின் மிளிர்வுடன் தெரிந்த நிமிர்வையும் .ஆரோக்கியமான சிறுத்தஇடையுடன் கூடிய சாமுத்திரிகா லட்சன உடற்கட்டையும் அவள் உணர்ந்ததில்லை .

கவிழையா தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் அலுவலகத்தின் சார்பில் ஹோட்டல்களில் நடக்கும் மீட்டிங்கின் போது அங்குள்ள அல்ட்ரா மாடல் பெண்கள் மஹிந்தனை நெருங்கவும் அவன் ஒருவார்த்தை பேசிய உடனே அவனுடன் குலைந்து பேசமுயல்வது போன்ற செயல்களைக் கண்டவள் மெழுகுச்சிலை போல் உள்ள பெண்களை விட்டுவிட்டு எதற்காக தன்னை அவன் தேர்ந்தெடுத்தான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. அவளுக்குத் தெரியவில்லை, அம்மெழுகுச்சிலைகளிடம் இவளைப்போல் பெண்மையின் மிளிர்வும் நளினமும் இயற்கை அழகும் இல்லையென்பதை அவள் உணரவில்லை.

துரா தான் கொண்டுவந்த பழங்கள் அடங்கிய கூடையை பார்வதியிடம் இந்தாருங்கள் அத்தை என்று கொடுத்தவள் மாமாவின் உடல்நிலை ஆப்பரேசனுக்குப்பிறகு எந்தபிரச்ச்சனையும் இல்லாமல் இருக்கிறதா? என்று அங்கு இருந்த இருக்கமான சூழ்நிலையை மாற்ற முகத்தில் புன்னகையுடன் தன் பேச்சை துவங்கினாள்.

மதுரா வந்தவுடன் பார்வதி மட்டுமே வாருங்கள் என்று அழைத்தால் ஈஸ்வரனும் ,வருணும் எதுவும் கூறாமல் இருகிய முகமாகவே இருந்தனர் .

மதுரா அவ்வாறு கேட்டதும் பார்வதி அவருக்கு உடம்பிற்கு முடியாமல் போனதே தன் மகளைப் பற்றிய கவலையால் தான் என்றாள் .

அதற்கு மதுரா ,முதலில் நீங்கள் இருவரும் என் அண்ணன், அண்ணியை உங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்ததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் .

மேலும் என் அண்ணனுக்கு என் கணவரின் தங்கை ஐஸ்வர்யாவை மனம் முடிப்பதாக நிச்சமாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .

ஆனால் அக்கல்யாணமே, எங்களின் எஸ் என் வி நிறுவனத்தை என் அப்பா வீட்டார் அவர்களிடம் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தால் நிச்சயிக்கப்பட்டது .

என் அண்ணா ஆசைப்பட்டு ஒன்றும் ஐஸ்வர்யாவுடனான கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை

மேலும் என் அண்ணன் நேற்று என் வீட்டிற்கு வந்து தனக்கு அண்ணி கவிழையாவுடன் கல்யாணம் ஆகிவிட்டது என்றும் இனி மேல் ஐஸ்வர்யாவுடனான இக்கல்யாணம் நடக்காது என்றும் கூறி நிச்சயித்திருந்த அந்த திருமணத்தை முறித்துவிட்டே அண்ணியை உடன் கூட்டிச்சென்றுள்ளார் என்றாள் .

அவள் அவ்வாறு கூறியதும் என் கவியை ஒன்றும் உன் அண்ணன் அவளின் சம்மதத்துடன் கூட்டிச்செள்ளவில்லை என்று கோபமாக் கூறினார் ஈஸவரன்.

அவர் அவ்வாறு கூறியதும் பெண்ணினை பெற்றவர்களுக்கு இருக்கும் ஆதங்கம் கண்டிப்பாக் உங்களுக்கு இருக்கும். என் அண்ணன் உங்களை கேட்காமல் அண்ணியை கல்யாணம்முடித்து, அவர் தன்னுடன் கூட்டிச்சென்றதற்கு உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினாள்.

என் அண்ணன் செய்ததை நான் நியாயப்படுத்த இங்கு வரவில்லை .அதே நேரம் என் அண்ணன் இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் பிளேபாய் போன்று சுற்றியதும் இல்லை அவன் முதல் முதலாக் விரும்பி பின்னால் சென்றது கவிஅன்னியின் பின்னால் தான் .

ஆனால் அவன் இப்பொழுது இருந்த நிலைமையில், அவன் காதலை சொல்லி உங்களிடம் பெண்கேட்டு வரும் சூழ்நிலையை அவனுக்கு ஐஸ்வர்யாவினுடன் முடிவுசெய்திருந்த கல்யாணத்தினால் இயலாததாகிவிட்டது .

மேலும் அவன் கட்டாயமாக் அண்ணியை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவான் அதற்கு நான் உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கிறேன்.

மேலும் நடந்தது நடந்துவிட்டது இனி அதை மாற்றி அமைக்க முடியாது இனி அவர்கள் நல்ல படியாக வாழ நாம் பழையதை மறந்துவிட்டு இனி என்ன செய்தாள் இருவரும் நலமாக இருப்பார்கள் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினாள் .

மதுரா தன் அண்ணனுக்காக் இறங்கிப் பேசுவதை பார்த்த பார்வதிக்கு மனம் சிறிது சமாதானம் கிடைத்தது .தன் பெண் வாழப்போகும் வீட்டின் மனிதர்கள் ஒன்றும் அவ்வளவு கெட்டவர்களாக இருக்கமுடியாது என்ற எண்ணம் உண்டானது .

பெரியவீட்டுப் பெண் என்ற கௌரவம் பாராமல் தங்களிடம் பெரியவர்கள் என்ற முறையில் மரியாதையாகப் பேசிய மதுராவின் தன்மை பார்வதியை மிகவும் மிகவும் கவர்ந்தது .இப்படிப்பட்டவளின் அண்ணன் முற்றிலும் கெட்டவனாக இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் ஏற்ப்பட்டது .

எனவே பார்வதி மதுராவைப் பார்த்து, நீ கூறுவது சரிதானமா, இருந்தாலும் உங்களின் வீட்டுப் பெரியவர்கள் இதை பற்றி என்ன சொல்வார்களோ? நீ கூறுவதை போல் உங்களின் அம்மாவும் கூறுவார்களா ? என்று கேட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.