(Reading time: 21 - 41 minutes)

வள் அவ்வாறு கூறியதும் மதுரா அம்மா அப்பாவிர்க்குமே அண்ணன் செய்தது அதிர்ச்சிதான், இருந்தாலும் என் அண்ணனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டார்கள் இருந்தாலும் அண்ணன் அவர்களை கலந்து கொள்ளாமல் கல்யாணம் செய்தது அவர்களுக்கு கோபமாகத்தான் இருக்கும் .

ஆனால், அண்ணனால் அவர்களை எளிதில் சமாதானப் படுத்தமுடியும் எப்படியும் இன்னும் ஒரு வாரத்திற்குள் அம்மாவையும் அப்பாவையும் உங்களிடம் வந்து பேசி அண்ணன் அண்ணியின் கல்யாண ரிசப்சனுக்கு எற்பாடு செய்வான். மேலும் அவன் கூறிய எதையும் இதுவரை செய்யாமல் விட்டதில்லை எனவே நீங்கள் மேற்கொண்டு ரிசப்சனை எப்படி நடத்தலாம் என்று யோசித்து வையுங்கள் .நான் இப்பொழுது கிளம்புகிறேன் எதுவென்றாலும் என்னிடம் மொபைலில் தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று கூறி தன்னுடைய போன்நம்பரை அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்று வெளியேறினாள் .

துரா காரினில் வந்து இறங்குவதை பார்த்த மஹிந்தன் மதுராவைப்பார்த்து கையசைத்துவிட்டு நீ உள்ளப்போ மதுரா, நான் ஒருநிமிடத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தன் ஈரஉடையை மாற்றிவிட்டு மதுராவைடம் வந்தான் .

மதுரா வந்ததை மாடியில் இருந்து பார்த்த கவிழை கீழே இறங்கிவரவும் ழையாவைப் பார்த்து சிரித்தமுகமாக ஓடிச்சென்று அவளின் கை கோர்த்து அண்ணி, அண்ணன் உங்களுக்காக வாங்கியிருக்கும் இந்த வீட்டையும் அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்த ழையாவின் ஓவியத்தையும் சூப்பரா இருக்கு .

என்னிடம் கூட அண்ணன், இவ்வளவு அழகான வீட்டையும் உங்களையும் பற்றிச் சொல்லாததுக்கு கோபம் முதலில் இருந்தது ஆனால் உங்களின் முகத்தை பார்த்தவுடன் என் கோபம் எல்லாம் பறந்து போய்விட்டது என்று கூறியவள் .தான் கூட்டிவந்த டிசைனரை காண்பித்து இவர்கள் ரித்திகா இவங்க டிசைன் பண்ணிய உடைகள் அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கும் என்று கூறியவள், ரித்திகா என் அன்னிக்கு நாம் வாங்கிய உடை பொருத்தமாக இருக்கும்மிலையா? என்று கேட்டாள் .

அவள் கூறியதும் ரித்திகா சொன்னாள் இவர்களுக்கு எல்லாவகை உடைகளும் பொருத்தமாக இருக்கும் ஆனால் நாம் வாங்கியிருக்கும் உடை ஹிப்சைஸ் கொஞ்சம் பெரிதாக் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியவள் ஒருநிமிஷம் என்று கூறியவள் அவ்வீட்டின் வேலையால் காரிலிருந்து உள்ளே கொண்டுவந்து வைத்திருந்த லக்கேஜில் இருந்து மெசர்மென்ட் டேப்பை எடுத்து அவளுக்கு அளவு எடுத்தாள்.

மஹிந்தன் மதுராவிடம் போனில் பேசும் போது கவி அருகில் இருந்ததால் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை கவிழையா அறிந்திருந்தாள். எனவே மதுரா நீங்கள் என் வீட்டிற்கு போனீர்களா? அப்பா நலமாக இருக்கிறாரா அம்மா என்ன சொன்னார்கள் என்று கேட்டாள் ழையா.

அப்பொழுது உள்ளே வந்த மஹிந்தன் ஏன் எல்லோரும் நின்றுகொண்டே பேசுகிறீர்கள்.ழையா வீட்டிற்கு வந்த என் தங்கையை உட்காரச்சொல்லாமல் நிற்கவைத்தே நீ கேட்க நினைப்பதெல்லாம் கேட்பாயா என்றவன் இயல்பாக இருப்பது போல் அவளின் அருகில் வந்தவன், ழையாவின் தோளின்மேல் தன் கைபோட்டு கூட்டிச்சென்று சோபாவில் உட்காரவைத்து அவள் அருகில் அமந்தான்.

அவர்களின் எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்த மதுரா தான் வாங்கிய உடைகளை காண்பித்து அண்ணா நான் அண்ணிக்கு வாங்கிய உடைகளை பாருங்கள். அண்ணீ ! உங்களுக்கு என்னுடைய தேர்வு பிடிக்காவிட்டால் அதை ரித்திகா உங்களுக்கு பிட்டாக மாற்றி தைப்பதற்குள் சொல்லிவிடுங்கள். உங்களுக்குப் பிடித்தமாதிரி வாங்கிவிடலாம் என்றாள் .ஆனால் கவிழையாவிற்கு அந்த உடைகளை பார்வையிட மனம் செல்லவில்லை.

அவள் அவ்வாறு கேட்டவுடன் கவிழையா சிரித்துக்கொண்டே “பரவாயில்லையே நீங்கள் உங்கள் அண்ணனைப்போல் இல்லாமல் எனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்று என் அபிப்ராயம் கேட்கவேண்டும் என்ற கர்டசி உள்ளவர்களாக இருக்கிறீர்களே“, என்றாள் .

மேலும் நீங்கள் நான் முதலில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. நான் கேட்ட கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் கூறுங்கள் பிறகு நான் இந்த உடை எனக்கு பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பதைச் சொல்லுகிறேன் என்றாள் கவிழையா .

வரும்போது உங்கள் அம்மா வீட்டிற்குப் போய்விட்டுத்தான் வந்தேன் .அத்த, மாமா மற்றும் வருண் எல்லோரும் நல்லா இருக்கிறார்கள் .எல்லோருக்கும் உங்களை பற்றிய நினைப்புதான் . நான் தான் என் அண்ணியை பத்திரமாக் பார்த்துக்கொள்வேன் அவர்களை பற்றிய கவலையே இனி உங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு வந்துள்ளேன் என்றாள்.

ழையா அவ்வாறு பேசியது மகிந்தனுக்கு கடுப்பாக இருந்தது. மேலும் தன் தங்கைக்கு ழையாவிற்கும் இடையில் சுமூகமான் உறவு இருக்கவேண்டும் என்று அவன் விரும்பினான். மேலும் தன் மீது உள்ள கோபத்தில் ழையா, மதுராவை காயப்படுத்தும் விதமாக் பேசுவதை அவன் பொறுத்துக்கொள்ள மாட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.