(Reading time: 21 - 41 minutes)

ஹிந்தனுக்கு தன் தங்கைமேல் பாசம் உண்டு சிறுவதில் இருந்து அவள் கல்யாணம் முடித்துசெல்லும் வரை வீட்டில் அவன் வருகைகாக காத்திருந்து அவன் சாப்பிட்டானா? என்று தெரிந்துகொண்டு இல்லாவிட்டால் வேலையாட்களை கொண்டு அவனுக்கு பிடித்த உணவுகளை கொண்டுவரச்செய்து அவனுடன் உட்கார்ந்து பேசிகொண்டு அவளும் உண்டு .அம்மாவின் ஸ்தானத்திலும் ,தோழியின் இடத்திலும் இருப்பவள் மதுரா.

மதுராவைப்போல் மஹிந்தன் அன்பை வெளிப்படையாக காண்பிக்காவிட்டாலும் அவன் தன் தங்கையின் முகம் பார்த்தே அவள் கேட்காமலேயே அவளுக்குப் பிடித்ததை செய்துகொடுப்பவன் மஹிந்தன் .

மதுராவிற்கு கவிழையாவின் மனநிலையை கணிக்க முடிந்தது. எனவே அப்படியா அண்ணி, அண்ணன் உங்களைக் கேட்காமல் இனி எதை செய்தாலும் என்னிடம் சொல்லிவிடுங்கள் நாம் இருவரும் சேர்ந்து அண்ணனை ஒரு கை பார்த்துவிடுவோம்

நாம் படுத்தும் பாடு தாங்காது கடைசியில் உங்களின் வசம் வந்துவிடுவான் பாருங்கள் .நான் சொன்னதை கேட்டீங்கள்ள, அண்ணா! இனி என் அண்ணியின் மனம் நோகும்படி எதுவும் நீங்கள் செய்தால் பின் விளைவுகள் பயங்கரமாக் இருக்கும் என்று கவிழையாவுடன் நட்ப்புக்கரம் நீட்டி அதில் தன் அண்ணனையும் இணைக்க முற்பட்டால் .

மதுராவிற்குத் தெரியும் ழையாவிற்கு தன் அண்ணனின் மேல் கோபம் இருக்கும் என்றும் தன் அண்ணன் ழையாவின் அன்பைப் பெறுவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக அவளை கல்யாணம் முடித்துள்ளான்

எனவே இருவருக்கும் இடையில் உள்ள உறவு சரிவர இருக்காது .இந்த நிலையில் தன் அண்ணியின் மனதில் உள்ள ரணத்தை அன்பினால் குணப்படுத்தினால் தான் தன் அண்ணனுடைய வாழ்வு மலரும் .

மேலும் தன் அண்ணனுக்கு ஐஸ்வர்யா மாதிரியான் பெண்ணுடன் கல்யாணம் முடிவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவளின் அம்மா சுபத்ரா தான் அவர்களின் குடும்ப எஸ் வி எம் நிறுவனத்திற்காக இக் கல்யாணம் முடிவதை அவள் தடுக்கக் கூடாது என்று கூறியிருந்தாள்.

இந்த நிலையில், தன் அண்ணன் கல்யாணம் முடித்து விட்டதாக கூட்டிவந்த ழையாவை பார்த்தவுடனே மதுராவிற்கு அவளை பிடித்துவிட்டது .

எனவே கவிழையா மனத்தில் இருக்கும் காயத்தினை, தன்னால் முடிந்தலவு ஆற்றினால்தான் அவள் தன் அண்ணனுடன் மனதளவில் நெருங்கவைக்க முடியும். அதற்கு தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என முடிவெடுத்திருந்தாள் மதுரா .

மஹிந்தன் தன் தங்கை மதுரா ழையாவிடம் இணக்கமாக பேசுவதையும் அதில் தன்னையும் இணைக்கப் பார்ப்பதையும் கண்டு தன் தங்கையை மெச்சுதளுடன் ஓர் பார்வைப் பார்த்து, ழையா அறியாமல் தன் கட்டை விரலை தூக்கி காண்பித்து சூப்பர் என்று சைகை செய்தான்.

கூட்டணியெல்லாம் பலமாக இருக்கிறது மதுரா என்ன செய்ய என் தங்கையும் என் மனைவியும் சேர்ந்துகொண்டு தாக்கினால் நான் அடங்கித்தானே ஆகணும் என்றவன், ழையா எப்படி என்ன உனக்குள் அடக்க ரெடியா என்று குறும்புடன் கண்ணடித்துக் கேட்டான் .

தான் எடுத்தெறிந்து பேசியும் இணக்கமாக பேசும் மதுராவின் முன் மேலும் தன் கோபத்தை காண்பிக்க முடியாமல் மஹிந்தனின் பேச்சை கவனிக்காதவாறு பாவனை செய்து உன் அண்ணனை பாடாய் படுத்தத் நான் உங்களுடன் கூட்டுச்சேரனும் என்று அவசியமில்லை அது இயல்பாகவே எனக்கு வந்துவிடும் .

ஆனால் என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க நினைக்கும் உங்களுடன் நான் பிரிண்ட்ஸ் ஆக விரும்புகிறேன் என்றாள்.

அவள் அவ்வாறு கூறவும் அப்போ இப்பொழுதுமுதல் நான் இருவரும் பிரிண்ட்ஸ் ஓ.கே வா அண்ணி என்றாள் மதுரா .

அதற்கு கவிழையா, புன்னகையுடன் சரியென்று கூறினாள்

அப்பொழுது ரித்திகா, மதுராவிடம் கவியின் டிரெஸ்ஸை ஆல்ட்டர் பண்ணியாகிவிட்டது அதை போட்டுக்காட்டச் சொல்லுங்கள் ஏதேனும் மிஸ்டேக் இருந்தால் சரிபண்ணி விடுகிறேன் என்றாள் .

உட்னே மஹிந்தன் ழையா மேலே நம்ம ரூமிற்கு இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு போய் போட்டுபார். நான் கீழே சாப்பாடு எல்லாம் ரெடியாகி டேபிளில் வைத்துவிட்டார்களா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறினான் .

அவ்வுடை இளம்ரோஜா வண்ணம் கொண்ட லெகன்கா பாவடையில் தங்கநிற பார்டருடன் அதனுள் தங்கநிற பூவேலைப் பாடுகளுடனும் அதன் துப்பட்டா (தாவணி] அதேமாதிரியும் ப்ளவ்ஸ் தங்கநிரத்திலும் இருந்தது .

இருவரையும் அவர்களின் அறையில் இருந்த வரவேற்புப் பகுதியில் இருந்த சோபாவில் உட்காரச்சொல்லிவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று தன்னை திருத்திக்கொண்டு அவ்வுடயைப் போட்டுக்கொண்டு வந்தாள் கவிழையா .

அவ்வுடையில் பார்ப்பதற்கு அவள் தங்க விக்கரகம் போல் மிளிர்ந்தாள். ரித்திகாவும் மதுராவும் சேர்ந்தாற்போல் அவளைப் பார்த்துவிட்டு சூப்பர் என்று கோரசாக சொன்னவுடன் வெட்கத்தில் ழையா முகம் சிவக்க, தாங்யூ! என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.