(Reading time: 11 - 22 minutes)

ர்ஷினியை தோளோடு அணைத்துக் கொண்டார் லக்ஷ்மி.

“காலையிலே நீ மயங்கி விழவும் காயத்ரி பதட்டமா அம்முன்னு ஓடி வந்து தாங்கினா அப்புறம் பொறுப்பான டாக்டரா செயல்பட்டா. அவளோட அம்மா அப்பாவும் கூட உன் மேல அக்கறையா இருந்தாங்க. உன் மேல ரொம்ப பிரியமா இருக்கா. நீயும் அண்ணின்னு உருகுற. இதை விட எனக்கும் மாமாவுக்கும் வேறென்ன வேணும் அம்மு”

லக்ஷ்மி சொல்லி முடிக்கும் போது அவரின் குரல் தழுதழுக்க வர்ஷினி அவரை இறுக கட்டிக் கொண்டாள்.

“மாமாவுக்கும் தெரியுமா அத்தை. இன்னிக்கு அண்ணியையும் அவங்க அம்மா அப்பாவையும் அண்ணா உங்ககிட்ட இன்ட்ரோ செய்றதா இருந்தான். நான் தான் அத ஸ்பாயில் செய்துட்டேன்”

“மாமாவும் நானும் ஹாஸ்பிடல்ல இருந்து வந்த பின்னாடி பேசினோம். மாமாவுக்கும் சம்மதம் தான். நீ வருத்தப்படாத அம்மு. நாம முறைப்படி காயத்ரிய பெண் கேட்டு போவோம்”

லக்ஷ்மி அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே வருண் ராமச்சந்திரன் இருவரும் அங்கே வந்தனர்.

“என்னடா எத்தன நாளா நடக்குது இதெல்லாம்” கண்டிப்பு காட்டுவது போல ராமச்சந்திரன் கேட்கவும் வர்ஷினி கலகலவென சிரித்தாள்.

“மாமா உங்களுக்கு இந்த கேரக்டர் சுத்தமா சூட் ஆகல. அப்புறம் இந்த கேள்வி எல்லாம் நீங்க என்கிட்டே தான் கேட்கணும். ஏன்னா எனக்கு இவங்க தான் அண்ணியா வரணும்னு அண்ணா கிட்ட நான் சொன்ன பிறகு தான் அவனே அண்ணிய சைட் அடிச்சானாக்கும்”

மகனை அர்த்தமுள்ள ஓர் பார்வை பார்த்த ராமச்சந்திரன் வர்ஷினியின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தார்.

“முதல்ல அம்முக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கணும். அப்புறமா காயத்ரிய பெண் கேட்டு போகலாம். என்ன சொல்ற லக்ஷ்மி”

“அதுவும் சரிதான். பொண்ணுக்கு முதல்ல செய்றது தானே முறை”

“நானும் அதை பத்தி உங்ககிட்ட பேசலாம்னு தான் இருந்தேன். இன்னிக்கு இவ மயங்கி விழவும் கொஞ்சம் பயந்துட்டேன். டெஸ்ட் எல்லாம் நார்மலா தான் இருக்கு. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. எதுக்கும் நான் நாளைக்கு டாக்டர் கணேஷ் கிட்ட ஒரு ஒபினியன் கேட்கலாம்னு இருக்கேன்”

இதைக் கேட்டதும் வர்ஷினிக்கு மறுபடியும் கண்ணைக் கட்டியது. மிகவும் சிரமப்பட்டு சமாளித்துக் கொண்டாள்.

“அவர் யாரு வருண்”

“அவர் ஹார்ட் சர்ஜன்மா. நம்ம சிவகுமார் சாரோட பாமிலி பிரெண்ட்ஸ். நம்ம ஹாஸ்பிட்டல்ல விசிடிங் சர்ஜனா வரப் போறார். இப்போ உள்ள யங் ஹார்ட் சர்ஜன்ஸ்ல இவர் ரொம்பவே எக்ஸ்பர்ட்”

“அப்போ நீ அவர்கிட்ட அம்முவோட ரிபோர்ட் எல்லாம் காமிச்சு ஒரு ஒபினியன் கேட்டுடு. கல்யாணம் பத்தி சொல்லியும் தெளிவா கேளு” லக்ஷ்மி சொல்லவும் ஒப்புதலாய் தலையசைத்தான் வருண்.

ஒரு புறம் ஜில்லென பனிமழை பொழிவது போல இருந்தது வர்ஷினிக்கு. அவள் ராமின் புகழை கேட்க கேட்க தெவிட்டவில்லை அவளுக்கு. ஆனால் நாளை வருண் அவளது ரிபோர்ட்ஸ் எல்லாம் ராமிடம் காண்பிப்பானே என்ன செய்வது என்ற நினைப்பே நெருப்பில் நிற்பது போல அவளை தகித்தது.

டாக்டர் சிவகுமாருக்கு சொந்தமான மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் இதய அறுவை தீவிர சிகிச்சை பிரிவினுள் தனது குழுவினரோடு நுழைந்தான் கணேஷ் ராம்.

அன்று காலையில் ATRIAL SEPTAL DEFECT எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது குழந்தைக்கு அறுவை செய்த பின் கௌரி ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தான். விழாவில் இருந்து திரும்பியவன் சர்ஜரி செய்த பேஷண்ட்ஸ் எல்லோரையும் பார்வையிட தீவிர சிகிச்சை பிரிவிற்கு ரவுண்ட்ஸ் சென்றான்.

காலை சரியாக ஏழு மணிக்கெல்லாம் சர்ஜரி தொடங்கிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் கணேஷ்.

அந்த மருத்துவமனையில் கணேஷ் பணிபுரிய துவங்கி ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. சர்ஜிகல் டீம், ஐ சி யூ டீம் என்று தனித்தனி குழுவினர் அவனுக்கு கீழ் பணிபுரிந்து வந்தனர்.

சூரிய உதயத்தில் அவனது குழுவினரோடு பணியைத் துவங்கும் கணேஷ் எமர்ஜன்சி தவிர சூரியன் மறைவிற்குப் பிறகு சர்ஜரி செய்வதில்லை. அதே நேரம் மிக நீண்ட சர்ஜரியின் பொழுது தனது குழுவினரை இரு பிரிவாக பிரித்து குழுவினர் அனைவரும் சரியான நேரத்தில் உணவு உண்ணவும் சிறிது ஓய்வு கொள்ளவும் அதே சமயம் பணியும் தடையில்லாமல் தொடரவும் ஏதுவாக பிளான் செய்வது கணேஷின் தனி சிறப்பு.

இதனாலேயே அக்குழுவில் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும் அற்பணிப்போடும் பணி செய்து வந்தனர்.

“இப்படி ஒரு வொர்கிங் பாட்டர்ன் எங்கேயும் நான் பார்த்ததில்லையே” புதிதாக குழுவில் சேர்ந்தவர்கள் ஆச்சரியப்படுவதுண்டு.

இளம்வயதிலேயே பேரும் புகழும் பெற்ற சிறந்த மருத்துவராக திகழும் கணேஷ் ராமின் பர்சனல் லைப் பற்றியும் டீமில் உள்ளவர்கள் அவ்வபோது தங்களுக்குள் அலசிப் பிழிந்து காயப்போடுவதுண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.