(Reading time: 11 - 22 minutes)

ன் இன்னும் கல்யாணம் செய்துக்காம இருக்கார்”

“மெடிசன் தான் லைப் பார்ட்னர்ன்னு இருக்காரோ”

“யு எஸ்ல நல்ல ப்ராக்டீஸ் விட்டுட்டு இங்க வந்துட்டாரே. என்னவாயிருக்கும்”

“அங்க உள்ள பொண்ணு யாரையாச்சும் விரும்பி வீட்ல ஒத்துக்கலையோ”

“நம்ம ஹாஸ்பிடல்லேயே அழகான லேடி டாக்டர்ஸ் நர்ஸ் எல்லாம் எத்தனை பேர் இருக்காங்க. ஆனா யாரையும் நிமிர்ந்து ஆர்வமா ஒரு பார்வை கூட அவர் இதுவரை பார்த்ததில்லையே”

இவற்றையெல்லாம் கேட்டும் கேளாமல் சென்று விடுவான் கணேஷ். ஆனாலும் மிக நெருங்கிய சிலர் உரிமை எடுத்துக் கொண்டு அக்கறையின் பெயரில் கேட்கும் போது என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துத் தான் போவான் பாவம்.

எப்போதும் ஒரு புன்னகையோடு வலம் வரும் அவன் கலகலவென சிரித்து யாரும் பார்த்ததில்லை. வேலை தவிர வேறு எதைப் பற்றியும் யாரிடமும் பேசுவதில்லை. பணியில் கவனக்குறைவை மட்டும் சகித்து கொள்ளவே மாட்டான்.

“போஸ்ட் ஆபரடிவ் டே (POST OPERATIVE DAY 3) பைபாஸ் சர்ஜரி, பேஷன்ட் ஆன் நார்மல் டயட்” ஜூனியர் டாக்டர் இரண்டு நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்த நோயாளியின் அன்றைய நிலையை கணேஷிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

பேஷன்டை பரிசோதித்த கணேஷ், “ எல்லாம் நார்மலா இருக்கு. இன்னிக்கு சேர்ல உக்கார வைப்பாங்க. பிசியோதெரபில சொல்ற பயிற்சி எல்லாம் செய்யணும். வலி ஏதும் இல்லையே” என்று கனிவாக கேட்டான்.

“இன்னிக்கு சுத்தமா வலியே இல்ல டாக்டர்” மிகுந்த ஆனந்தத்துடன் அந்த நோயாளி கூறவும் கணேஷ் எப்போதும் போல ஒரு புன்னகை உதிர்த்தான்.

“நேத்து அனச்தடிஸ்ட் தீபக் ரொம்ப சிரமப்பட்டாரே இந்த பேஷண்ட் ரொம்ப பெயின் சென்சிடிவ். மேக்சிமம் பெயின் கில்லர்ஸ் குடுத்துட்டேன். அப்படியும் அவருக்கு வலி குறையில அப்படின்னு நேத்து சொன்னாரே. இன்னிக்கு இவ்வளவு உற்சாமாக ஸ்மைல் செய்றார். ஒரே நாள்ல என்ன மாயம் நடந்துச்சு” மனதில் அவனுக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டான்.

“டாக்டர் தீபக் எங்கே”

“அவர் இன்னிக்கு டியூட்டி ஆஃப் டாக்டர்” ஜூனியர் டாக்டர் கூறவும் ரவுண்ட்ஸ்ஸை தொடர்ந்தான்.

“பேபி ரம்யா. ஏஜ் ஃபோர். க்ளேன் (GLENN) சர்ஜரி. போஸ்ட் ஆபரேடிவ் டே 1. இன்னிக்கு மார்னிங் வென்டிலேடர் (செயற்கை சுவாசம் அளிக்கும் மெஷின்) ஆஃப் செய்தாச்சு. பேபியோட சுவாசம் நார்மலா இருக்கு.

ஜூனியர் டாக்டர் சொல்லிக்கொண்டே போக கணேஷின் கவனமோ ட்ரிப்ஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் ஸ்டாண்டில் ஒரு நூல் கொண்டு தொங்க விடப்பட்டிருந்த அந்த பொம்மையில் இருந்தது.

கையுறையில் (SURGICAL GLOVES) காற்றை ஊதி வண்ண பேனா கொண்டு அதில் பூனை போல முகம் வரைந்து அதன் கன்னம் போன்ற பகுதியில் இதய வடிவத்தில் பூ போல வரையப்பட்டிருந்த அந்த பொம்மையை அந்தக் குழந்தை கைகளால் தட்டி தட்டி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

“இந்த பொம்மை யார் செஞ்சு குடுத்தாங்க ரம்யா குட்டி”

எப்போதும் ரவுண்ட்ஸில் மருத்துவம் சம்பந்தப்பட்டதையே பேஷன்ட்ஸிடம் இருந்து பெரும்பாலும் கேட்டறியும் கணேஷ் இன்று குழந்தை விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை கையில் பிடித்துக் கொண்டு அதையே உற்று உற்றுப் பார்த்தபடி கேட்கவும் அனைவருக்குமே ஆச்சரியம்.

கணேஷ் கையில் பொம்மையைப் பிடித்திருக்க ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததினால் பல டியூப்கள் உடலில் செலுத்தப்பட்டிருக்க படுத்தே இருந்த குழந்தை அதை அவன் கைகளில் இருந்து கைப்பற்ற எக்கி எக்கி முயற்சி செய்ததையும் கணேஷ் கவனத்தில் கொள்ளவே இல்லை.

ரவுண்ட்ஸில் இருந்த டீம், குழந்தை அருகில் இருந்த நர்ஸ் அனைவரும் திகைத்திருக்க

“கணேஷ் அதை குழந்தைகிட்ட குடு. உனக்கு வேணும்னா நான் வேற செய்து தரேன். எப்போ பாரு உனக்கு இதே வேலை” சற்றே உரிமையான கேலி கலந்த அதட்டலோடு வந்த குரலை நோக்கி அனைவரது பார்வையும்.

யாரென்று அவன் நிமிர்ந்து பார்க்கவும் வேண்டுமோ. எத்தனை வருடங்கள் ஆயிற்று இந்த உரிமையான அதட்டலைக் கேட்டு.

ஸ்க்ரப் ட்ரஸ், தலையில் கேப், முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தவளின் விழிகளை கணேஷ் மெல்ல நோக்க தாமரையைக் கண்ட சூரியன் போல பிரகாசமாய் ஒளிர்ந்த அவன் முகத்தை மற்றவர் பார்வையில் இருந்து மேகம் போல மறைத்து திரை போட்டிருந்தது அவன் அணிந்திருந்த மாஸ்க்.

அவன் கண்களில் பளிச்சிட்ட பூரிப்பைக் கண்டுகொண்டவளின் விழிகளோ மகிழ்ச்சி ததும்ப புன்னகைத்தன.

அந்தப் புன்னகை அதி வேக தோற்று நோயென அவனது விழிகளையும் சென்று தாக்கியது.

இந்தத் தொடரில் ஆங்காங்கே வரும் மெடிகல் டெர்ம்ஸ்க்கு முடிந்த வரை விளக்கம் அடைப்புக்குறியில் கொடுத்துள்ளேன். ஊர்ஜிதம் செய்யப்பட்டவையே அவை. இருப்பினும் ஏதேனும் பிழையிருந்தால் சுட்டிக் காட்டவும்

இதயம் துடிக்கும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.