ஆனா மறுபடியும் நாங்க 3rd இயர் படிக்குற அப்போ அவர் அதே பேச ஆரம்பிக்கவும் நான் லட்சுமி அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் சொன்னேன் அவங்களும் இவரை கண்டிச்சுட்டு விட்டுட்டாங்க .........
அவர் ஆனா திருந்துற மாறி இல்ல சோ.......நான் அவரோட பேசுறதயே கொறச்சுக்க ஆரம்பிச்சேன் அப்போ அவர் காலேஜ் முடிச்சிட்டு ஒரு கம்பெனில வேலைக்கு போக ஆரம்பிச்சுருந்தாரு எனக்கு ப்ராஜெக்ட் டைம்................
அப்போ லட்சுமி அம்மா கிட்ட இருந்து எனக்கு கால் வந்துச்சு அவரை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கிறதா.........
பயந்து பொய் பாத்தா அவரு தற்கொலை முயற்சி பண்ணிருந்தாரு ......
அவரை மூச்சு பேச்சு இல்லாம பாத்ததும் எனக்குள்ள இருந்த காதல் துளிர் விட ஆரம்பிச்சுது ......... அவரை பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டேன்........... ஆஸ்பிடல்ல இருந்து வந்ததும் யாரும் சொல்றத கேக்காம ஒரு கோவில்ல கல்யாணத்த நடத்த வச்சாரு.........
என்ன கொடுமைனா எங்க கல்யாணத்துக்கு லட்சுமி அம்மா அப்பா கூட வரல அந்த அளவுக்கு அவசர பட்டு கல்யாணம் ஆச்சு..........
நீ ஏன் இப்டி பாக்குறன்னு தெரியுது தீபு அண்ணா அப்போ நான் மித்ரன் எதுவும் பண்ணிக்கிட்ருவாரோ அப்படின்ற பயத்துலயே அவர் சொன்ன எல்லாத்துக்கும் சம்மதிச்சேன்........
அப்போ நான் முட்டாள்களின் உலகத்துல இருந்தேன் அண்ணா அதுக்கப்புறம் நாளுக்கு நாள் என் வாழ்க்கைல ஒவ்வொரு பூகம்பமே கிளம்ப ஆரம்பிச்சுது...........
மித்ரன் செய்வதை என்னால தடுக்க முடில அவனை வெறுக்கவும் முடில ............... ஆனா மது என் வயித்துல உருவான செய்தி சொல்லும் போது அவன் கேட்ட கேள்வியை இன்னும் என்னால மறக்க முடில அப்பவும் அவரை என்னால வெறுக்க முடில அதுனால நான் என்னையே வெறுக்க ஆரம்பிச்ச அப்போ உச்சகட்டமா அவர் பண்ணதை பார்த்து அப்பவும் அம்மாவும் நொந்துட்டாங்க............
அப்பா கோவத்துல அவரை அடிச்சு வெளில தொரத்திட்டாரு........... அப்புறம் என்ன தேத்தனும்கிறதுக்காக அம்மாவும் அப்பவும் எனக்காக வாழ ஆரம்பிச்சாங்க நான் படிப்பை முடிச்ச உடனே பிசினஸ் அட்மினிஸ்டரேஷன் படிக்க வச்சாரு படிச்சிட்டு வந்தஉடன என்ன businessla உக்கார வச்சாரு. அப்டியே என் லைப் நல்லா போய்ட்டு இருந்துச்சு.......ஆனா இப்போ ஏன் அவன் திரும்ப வந்து ஏன் வழில நிக்குறான்னு தெரில அண்ணா........
அவனுக்கு என்னோட லைப்ளையும் மதுவோட லைப்ளையும் இனிமேல் எப்பவும் கெடயாது அண்ணா........
இந்து லூசு என்ன இப்படி பண்ற..............
மொதல்ல லூசுத்தனமா இப்டி பேசுறத நிறுத்து.........
நேரம் ஆயிருச்சு வாங்க வீட்டுக்கு போலாம் மத்தத பெரியவங்கள வச்சு பேசலாம்..............
கதிர் அந்த மித்ரன் என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறான் டா அவனை கொன்னா தான் ஏன் ஆத்திரம் தீரும்....
தீபு வேண்டாம் டா என்ன நடந்துச்சுனு பாத்து சரி பண்ண முடியுதான்னு பாப்போம் ...............
ஆமா தீபக் அண்ணா சரி பண்ண முடியாததுனு எதுவுமே இல்ல இந்த வீம்புக்காரிய சரி பண்ண மது அம்மாவால தான் முடியும் ...........
மஹி...........
கொன்றுவேன் ராஸ்கல் எங்களுக்கு எல்லாம் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு இதுல அதை ............ வேண்டாம் எங்க வாய கெளரத இப்போ கெளம்பு வீட்டுக்கு...........
தொடரும்
{kunena_discuss:1095}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.