(Reading time: 12 - 23 minutes)

வரா??அவங்கலா பெரிய இடமாச்சே கார்த்திக் என்ன எதிர்பார்ப்பாங்களோ தெரியலையே??என கீதா தன் கவலையை கூற

ம்மாமா அவங்களும் சேகர் சார் மாறிதான்ம்மா பணத்தை பெருசா மதிக்குறவங்கயில்ல..அவரு ஏற்கனவே ஷரவந்திய எங்கேயோ பாத்துருப்பாரு போல அப்போவே பிடிச்சு போய் அவர் அம்மா அப்பாட்டயும் சொல்லிட்டாராம் இப்போ தான் அவ என் தங்கச்சிநு அவருக்கு தெரிஞ்சுருக்கு அதான் என்கிட்ட சொல்லி உங்ககிட்ட பேச சொன்னாரு..பையன் நல்ல பையன்தான்..குடும்பமும் நம்ம ஷரவ்க்கு ஏத்தமாறி தான் தெரியுது நீங்க என்னப்பா சொல்றீங்க??

ம்ம் எல்லாம் சரிதான்டா ஆனா ஷரவ் மனசுல என்னயிருக்கோ தெரியலையே??

எனக்கு தெரிஞ்ச வர நாம யார சொல்றமோ அவளுக்கு ஓ.கே தான்ம்மா ஜாடை மாடையா பேசி பாத்தேன் அவளுக்குனு தனி ஐடியாலா இருக்குறமாறி தெரில..

மோகன் ஏதோ யோசனையிலிருக்க கீதா,என்னங்க என்ன யோசிக்குறீங்க??

இல்ல கீதா இப்போதான் பெரியவன் கல்யாணம் முடிவு பண்ணிருக்கோம் அதுக்குள்ள அவளுக்கும்னா எப்படிம்மா சமாளிக்க முடியும்??அதான் யோசனையா இருக்கு..

அப்பா அதெல்லாம் கவலபடாதீங்க அவளுக்குநு நா கொஞ்சம் சேவிங்க்ஸ் தனியா வச்சுருக்கேன்..அதுவும் போக ஒரு ஆறேழு மாசம் தள்ளி வச்சுக்கலாம்நு சொன்னா அவங்க ஒத்துப்பாங்கப்பா என கார்த்திக் எடுத்து கொடுக்க,

சிறு புன்னகையுடன்,அப்போ இந்த இடத்தையே முடிச்சுரலாம்நு முடிவு பண்ணிட்டனு சொல்லு என மோகன் கேட்க,

அப்பா அதில்ல சிவா எனக்கு தெரிஞ்சவரு அதுவும் போக சஹானாக்கு அண்ணன் சோ அவருக்கு கொடுத்தா நம்ம ஷரவ் நம்ம கண் பார்வைலேயே இருப்பால்ல..அதனாலதான் மத்தபடி உங்க முடிவுதான்ப்பா என் முடிவும் என தாழ்ந்த குரலில் கூற மோகன் அவன் தோளை தட்டி உன் தங்கச்சிக்கு உன்னவிட யாரு நல்ல இடமா பாத்துற போறா??அவங்க வரட்டும் பேசுவோம் என்றவாறு அங்கிருந்து நகர்ந்தார்..கீதாவும் மனநிறைவோடு சிரிக்க கார்த்திக் மனம் லேசானதாய் உணர்ந்தான்..

11 மணியளவில் இரு குடும்பமும் கார்த்திக்கின் வீட்டை வந்தடைய சந்தோஷமாய் வரவேற்றனர் கீதாவும் மோகனும்..கார்த்திக் தன்னவளைவிட்டு விழி நகர்த்தாமல் நடக்க பொறுமையிழந்த சிவாவோ மாப்ள நீங்க சஹானாவ நாள் பூராகூட இங்கேயே உக்காரவச்சு சைட் அடிங்க மொதல்ல எனக்கு ஒரு முடிவ சொல்லுங்க..என் தேவியின் தரிசனம் இன்னும் கிடைக்கவில்லையே என அவன் காதை கடித்தான்..

சிவா கவலையே படாதீங்க நல்ல செய்தி உங்க காது தேடிவரும் அதுக்கு முன்னாடி உங்க ஆளு ஹாலை தேடி வருவா போங்க..என கூறி சிரிக்க..உற்சாகமாய் ஒரு ஹைபை கொடுத்து சென்றான்..என்ன நீயும் அந்த ஷிவா குரங்கும் அப்பப்போ ஏதோ ரகசியம் பேசுறீங்க என்ன விஷயம்??-சஹானா..

சஹி நம்ம வீட்டு மாப்பிள்ளைய குரங்குனு சொல்லாத என்று கூறி கண்ணடிக்க,

ஒரு நிமிடம் விழித்தவள்..ஹே நினைச்சேன் அந்த ப்ராடு ஷரவ்வ பாக்கும்போதெல்லாம் ஒரு கொசுவட்டம் தெரியுதேநு நெனைச்சேன் ம்ம் அப்படி போகுதா கதை..இதோ வரேன் என அவனை துரத்த சென்றவளின் போனி டெயிலின் நுனியை பிடித்து இழுத்து நிறுத்தினான் கார்த்திக்..

ஆஆஆ வலிக்குதுப்பா..

ம்ம் எல்லாத்துலயும் அவசரம் வெயிட் பண்ணு உள்ள சீன்னே வேற நீ பாட்டுக்கு எதையாவது உளறி கொட்டாம வேடிக்கபாரு புரியுதா??

அட கார்த்திக் உன்ன என்னவோநு நெனைச்சேன் பின்ற போ..நீ நடத்துப்பா என தலை சாய்த்து கூற..இதோ வரேன் என ஒரு அடி முன் வைத்தவனுக்கு அழகு காட்டி முன்னே சென்றாள் சஹானா..

உள்ளே அனைவரும் சென்று அமர ஷரவந்தி அனைவருக்கும் ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தாள் தப்பி தவறியும் சிவாவை நிமிர்ந்து பார்க்கவில்லை..அவள் அப்படியே உள்ளே செல்ல எத்தனிக்க சிவாவின் தாய் கங்கா அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்..கீதாவும் மோகனும் தங்களுக்குள் அதை குறித்து கொண்டனர்..சில நேர பொதுவான உரையாடலுக்குப்பின் மோகன் மெதுவாய் விஷயத்தை ஆரம்பித்தார்..

கார்த்திக் காலைல தான் விஷயத்தை சொன்னான்..என பொதுப்படையாய் ஆரம்பிக்க,என்ன விஷயம் சம்மந்தி என சேகர் தொடர,

வந்து எங்க ஷரவந்திய சங்கர் சார் பையனுக்கு பேசுற விஷயமா தான் என கூற சேகரும் துளசியும் குழப்பமாய் பார்க்க நிலைமை உணர்ந்த சங்கரோ அட ஆமா சேகர் நானே உற்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் இவங்க முடிவு தெரியாம வீணா விஷயத்தை பெருசாக்க வேண்டாமேநு விட்டுட்டேன்..என கோர்வையாய் முடிக்க சிவாவோ மனதுக்குள் குத்தாட்டம் போட்டவாறு கார்த்திக்கை பார்த்து புன்னகைத்தான்..ஷரவந்தி காரமாய் ஷரவனை பார்க்க அவனோ தனக்கும் இதற்கும் சம்மந்தமேயில்லை என்பது போல் வேறெங்கோ பார்த்து கொண்டிருந்தான்..

சரி நேரடியாவே பேசிருவோம் ஷரவந்திய எங்கவீட்டு மருமகளா ஆக்கிக்க ஆசைபடுறோம் நீங்க என்ன சொல்றீங்க முக்கியமா ஷரவந்தி என்ன சொல்றா என பட்டென்று போட்டு உடைத்தார் சங்கர்..

எங்களும் சம்மதம்தான் என்றவாறு மோகன் ஷரவந்தியை பார்க்க சிறு தலையசைப்போடு குனிந்து கொண்டாள்..அதன்பின் நிறைவாய் எங்க ஷரவந்திக்கும்தான் என்று முடிக்க கங்கா தன் வருங்கால மருமகளை வாஞ்சையாய் அணைத்து கொண்டார்..ஷரவந்திக்கோ சிவாவை எப்படி எதிர் கொள்வது என படபடப்பாய் இருந்தது..அதன்பின் திருமணா பேச்சுகள் தொடர சிறியவர்கள் அனைவரும் நாசூக்காய் கழண்டு கொண்டனர்..அனைவரும் மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சிவாவின் நிலையறிந்த ஷரவனோ சரிப்பா புது ஜோடிகள் இருக்குற இடத்துல எனக்கு வேலையில்ல சாப்பிடுறப்போ மீட் பண்ணுவோம் பை என நிற்காமல் சென்றுவிட்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.