(Reading time: 12 - 23 minutes)

ஹி நீ வா நா உனக்கு ஒண்ணு காட்டனும் என அழைக்க அவளோ டேய் அண்ணா ஷரவ் பாக்கதான் அமைதி நிஜத்துல என்னவிட மோசம் பாத்து நடந்துக்கோ சொல்லிட்டேன்..என சீரியஸாய் கூற ஏய்ய்ய் என கையில் கிடைத்த எதையோ தூக்கி அவள் மேல் எறிந்தாள் ஷரவந்தி..

பாத்தல எதாவது வம்பு பண்ண கையில கிடைக்குறத எடுத்து தூக்கி அடிச்சுருவா பாத்துக்க என கேப்டன் குரலில் கூற அவள் வாய் மூடி உள்ளே அழைத்து சென்றான் கார்த்திக்..

விடு கார்த்திக் பப்ளிக்ல இப்படியா பிகேவ் பண்றது சிவா என்ன நினைப்பான்..

ம்ம்ம் என்ன தெய்வம்நு நினைப்பாரு ஏன் நீ இப்படியிருக்க நாம பாத்துக்குறதே அதிசயம் இதுல நீ அங்க நின்னு மொக்க போட்டுட்டு இருக்க..

ஆமால்ல அதுவும் கரெக்ட்தான் சரி ரெண்டாவது சர்ப்ரைஸ் என்ன??சொல்லு சொல்லு??

அதான உன் காரியத்துல கரெக்ட்டாயிருப்பியே..சரி கண்ண மூடு..

எதுக்கு??

எதையாவது சொன்னவுடனே செய்றியா நீ எல்லாத்துக்கும் எதிர் கேள்வி கேட்காத..சொல்றத செய்..

ம்ம்ம் இப்போவே ஆர்டர் போட ஆரம்பிச்சுட்ட சரி சீக்கிரம் என்னனு சொல்லு..

கண்மூடி நின்றவளின் தோளில் ஏதோ புரள கைகளால் தடவியபடியே கண்களை திறந்தவள் அந்த அழகிய புடவையை கண்டு கண் விரித்தாள்..அழகான வைலட் நிற பட்டு தங்க சரிகைகளோடு அவள் நிறத்திற்கு பாந்தமாய் அழகாயிருந்தது..

வாவாவாவ்வ்வ் எனக்கு இந்த கலர்தான் பிடிக்கும்நு உனக்கு எப்படி தெரியும்??

ம்ம் அதெல்லாம் நீ சொன்னாதான தெரியும் இது எனக்கு பபிடிச்ச கலர் அதனாலதான் எடுத்தேன்..என்ன பிடிச்சுருக்கா??

ம்ம்ம் ஐ லவ்ட் திஸ் தேங்க் யூ புஜ்ஜுப்பா

அவள் பேச்சை ரசித்தவன் சரி இததான் நம்ம என்கேஜ்மெண்ட்க்கு நீ கட்ற ஓ.கே வா???

ம்ம்ம் ஷுவர் கட்டிட்டா போச்சு சரி சரி வா போலாம் ஸ்வீட்டீ சமையலை ஒரு புடி புடிக்கனும்னு காலைல வேற சாப்டாம வந்துட்டேன் வா வா கீழே போலாம்..

ஏய் இரு இரு என்ன ரியாக்ஷன் இது??உனக்காக நானே பாத்து பாத்து செலெக்ட் பண்ணி கிப்ட் சர்ப்ரைஸா வாங்கிட்டு வந்தா நீ சாப்ட்றத பத்தி பேசிட்டு இருக்க..என்ன பண்ணலாம் உன்ன??

அதான் நல்லாயிருக்குநு சொல்லிட்டனே வேறன்ன கார்த்திக்??

அவளை ஆர்வமாய் ஓரு பார்வை பார்க்க அதன் அர்த்தம் புரிந்தவளோ சட்டென திரும்பி கொண்டாள் அடுத்த அடி அவள் எடுத்து வைக்க எத்தனிக்க அவள் கையை இறுக்கி பிடித்தான்..

நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரல சஹி??அவன் குரல் இன்னும் மென்மையாய்..

மெதுவாக திரும்பியவள் அவனை ஏறிடாமல் அப்படியே நிற்க பிடித்திருந்த கையை சற்று முன்னோக்கி இழுத்தான்..மறுக்காமல் முன் வந்தவள் தன்னவன் மேல் இரு கைகளையும் வைத்தவறு நெருங்கி நிற்க அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்..

ஏன்டா அப்படி பாக்குகுற??-கார்த்திக்..

சட்டென அவனை முன்னிழுத்து நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்து இந்த தடவை கண்டிப்பா இந்த புடவைய நமம்ம நிச்சயதார்த்தத்துக்கு தான் கட்டுவேன் கார்த்திக் என்று கூறி மீண்டும் நெற்றியில் இதழ் பதித்தாள்..கார்த்திக் ஒரு கணம் அதிர்ந்தாலும் அதை மறைத்து சஹி என அழைக்க போதுமா இப்போ வா போலாம் இதுக்கு மேல எதுவும் கிடைக்காது கல்யாணத்துக்கு அப்பறம்தான் வா ஒழுங்கா என்றவாறு அவள் செல்ல அவள் முத்தமிட்டு பேசிய நொடி அதே குரல் அதே பார்வை அது நிச்சயமாய் இந்த சஹியுடையது இல்லை என அவனறிவான்..இருப்பினும் அப்படி ஒன்றை அவனால் ஏற்கவும் முடியவில்லை அப்படியே விடவும் முடியவீல்லை..அவள் கூறியதன் அர்த்தமென்ன விளங்கவில்லை..ஷரவன் வந்து அவனை உலுக்கும் வரையில் அப்படியே நின்றிருந்தான்..

ங்கு ஷரவந்தியோ தன் துப்பட்டாவின் நுனியை ஆராய்ந்து கொண்டிருந்தாள்..அவளாக பேசுவாள் என காத்திருந்த சிவாவோ பொறுமையிழந்தவனாய் அவனே ஆரம்பித்தான்..ஷரவ் ஆல்ரெடி என் லைவ்ல ரெண்டு வருஷத்த உன்ன பாக்காம வேஸ்ட் பண்ணிட்டேன் இனியும் ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ண விரும்பல..சொல்லு என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு  சம்மதம் தான??

தயக்கமாய் ஒரு பார்வை அவளிடம்..என்ன கூறவென தெரியாமல் இமைதுடிக்க நின்றவளின் கைகளை சட்டென எடுத்து தன் கைகளில் வைத்தவன்,சொல்லு ஷரவ் இதேமாறி வாழ்க்கை பூரா இந்த கை கோர்த்து நடக்க சம்மதமா இல்லையா??ஏன் இத்தனை தடவ கேக்குறேன்னா நா உனக்கு குடுத்த டைம் ரொம்ப கம்மினு எனக்கே தெரியும் சோ இன்னும் யோசிக்கனும்னாலும் யோசி பட் எந்த ஒரு கட்டாயத்தினாலேயும் நீ என்ன ஏத்துக்க கூடாது உன் விருப்பம் எனக்கு ரொம்ப முக்கியம்..

சட்டென கையை உருகி கொண்டவள் கண்டிப்பா யோசிக்கனும் ரெண்டு வருஷமா என்ன தேடாமயே இருந்ததுக்கு என்ன பணிஷ்மெண்ட் தரலாம்நு யோசிக்கனும் என்று கண்சிமிட்டி கூறி கீழே ஓடிவிட்டாள்..தேங்க் யு டீச்சர்ம்மா என்று விசிலடித்தபடியே அவளை பின் தொடர்ந்தான் சிவா..

ஹாய் மக்களே..இன்றைய எபி எப்படியிருந்தது..கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்..

தொடரும்

Ninnai saranadainthen - 07

Ninnai saranadainthen - 09

{kunena_discuss:1097}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.