(Reading time: 14 - 28 minutes)

27. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

Puthir podum nenjam

புதிர் 27

இதை காதல் என்பதா? என் தேடல் என்பதா?

ஒரு மேகம் போலவே மனம் மிதந்து போகுதே

மழை நின்ற போதிலும் மர கிளைகள் தூறுதே

[நா. முத்துக்குமார், காதல் கொண்டேன்]

டிசம்பர் 15 அன்று அமெரிக்காவில்...

சிகாகோவில் விமானம் தரையிறங்கவும்... தன் உடைமைகளை எடுத்து கொண்ட ஆர்யமன்  ஊமையாக்கபட்ட தன் அலைபேசியை உயிர்ப்பிக்கவும் திரையில்,

“சிவநேசன் ஐயாக்கு யூராலாஜிஸ்ட் என்ன சொன்னாங்க?“,

என்ற தினேஷ்ஷின் அக்காவின் குறுந்தகவல் பளிச்சிட்டது!

அன்பு இல்லத்தின் சேவை மருத்துவராக இருக்கும்  தினேஷ்ஷின் அக்கா  சிவநேசனிற்கு வெகு நாளாக சிறுநீரக பிரச்சனை இருப்பதால், ஒரு யூராலஜிஸ்ட்டை பார்க்க சொல்லி பரிந்துரைத்திருந்தாள்!

எந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஒத்துக் கொள்ளாத சிவநேசனை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து யூராலாஜிஸ்ட் அப்பாயின்மென்ட்டை வாங்கி வைத்து இருந்தான் ஆர்யமன். சரியாக அந்த அப்பாயின்மென்ட் கிடைத்த  அந்த இரவில் தான்... அஞ்சனாவை தேடி பப்பிற்கு அலைய வேண்டியதாகி போயிற்றே!!

அந்த குறுந்தகவலை பார்த்த நொடியிலே... சிலையாகி போனான்!!

‘ஒரு நாள் ஓடி போச்சே! எவ்வளோ நாள் வெயிட் பண்ணி வாங்கின அப்பாயின்மென்ட்! மிஸ் பண்ணிட்டேனே! அப்பாவையே  மறந்துட்டேனா????’

பெருங்கவலை மனதில் திரள மிக மிக அவமானமாக உணர்ந்தான்!

அப்பாவை பார்த்து ஆசி வாங்காமல் எந்த புது முயற்சியோ... வெளிநாட்டு பயணமோ இருந்ததே இல்லையே! இந்த முறை கிளம்புற அவசரத்தில் அதுக்கு  கூட அப்பாவைத்  தேடலை! மூணாவது ஆள் சொல்லி தான் அப்பாவின் நினைவே வருதா எனக்கு??!’

தன் கடமையை செய்யாமல் தவறி விட்டோமென்று உண்டான குன்றலில்  கைகள்  தானாக கமலாம்மாவின் எண்களை அழுத்தியது...

அழைப்பை எடுத்தவரிடம்...

“ம்மா.. ஸாரிம்மா”, யாசிக்கும் பொழுதே நைந்து போனது அவன் குரல்!

ஆர்யமனின் குரலில் இருந்த கலக்கமே..  அவன் அழைத்ததின் காரணத்தையும்.. வருத்தத்தையும் உணர்த்தி விட,

“எதுக்கு ஸாரி? நீ ஏதாவது முக்கிய வேலையா இருந்திருப்பேன்னு கூடவா  எங்களுக்கு தெரியாதா?”, என்று அவனை தேற்ற முயன்றார் கமலா!

அதை கேட்டதும்..  சுர்ரென்று ஏறியது கோபம் - அவனுக்கு அவன் மீதே!!!

“ஆமா... பொல்லாத வேலை!!! அப்பாவையே மறக்கடிக்கிற வேலை!!”

தன்னையே திட்டிக் கொண்டவாறு கடை இரு விரல்களால் நெற்றி ஓரத்தை அழுத்தியவனின் வாய் அவனையும் அறியாது..

“ச்சே!!!! எல்லாம் அவளால!’, என்று சலித்தது!

மறுமுனையில் இருந்த கமலா துணுக்குற்றவராக...

“அவளாலன்னா.. யாரு???”, என்று கேட்பதற்குள் அவனுமே தன் வாய் வெளியிட்டதை உணர்ந்திருக்க...

“ப்ச்.. அது பெரிய கதை”,

மேலும் சலித்தவனாக அதை விடுத்து...

“அப்பாக்கு யூராலஜிஸ்ட்கிட்ட கன்சல்ட் செய்ய சொல்லி தீதி அவ்வளோ ஸ்ட்ரெஸ் பண்ணாங்கம்மா... தப்பு பண்ணிட்டேன்!”,

வருத்தத்துடன் சொன்னவன் மனம் உடனே இந்தியாவிற்கு பறந்து சென்று… முந்தைய நாள் பிழையை சரி செய்து விட மாட்டோமா என்று தவித்தது!

“அடுத்த அப்பாயின்மென்ட்டை இப்போவே வாங்கணும்”, என்று அவரிடம் பேசி முடித்ததும் மருத்துவமனைக்கு அழைத்தான்.  அப்பாயின்மென்ட் மூன்று மாதம் கழித்து தான் அதற்கு முன்னதாக எதுவும் இல்லை என்று அவர்கள் கை விரித்து விட..

 “என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க.. இன் கேஸ் ஏதாவது கேன்சலேஷன் இருந்தா.. ஜஸ்ட் ஒரு SMS அனுப்புனா போதும்!”

எதற்கும் சொல்லி வைத்தவன்... அப்படியே அவர்கள் கொடுத்த தேதியை காலண்டரிலும் குறித்தான்.

எதையும் நினைவு அடுக்கிலே வைத்து அலாரமே இன்றி அதை அதை அதன் அதன் காலத்தில் துல்லியமாக செயல்படுத்துவேனே...  இன்று ஏன் சறுக்குகிறேன்???!! 

வருத்தம்... கவலை.. குன்றல்... இவை எல்லாவற்றையும் மீறி ஒரு இயலாமை அவனுள் குடி கொண்டது! நான் என்னை மீறி நடக்கிறேனே! அவளுக்காக.. என் அப்பாவையே மறந்தேனா?

‘சறுக்குனா அப்படியே இருந்துடுவியா???’,

அவனுக்கே உரித்தான நிமிர்வு அந்த இயலாமையை முடக்கி...

‘அவளை இனி நினைக்கவே கூடாது! அப்பாவை இனி மறக்கவே கூடாது’

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.