(Reading time: 14 - 28 minutes)

ன்ற பரிதவிப்பில் அவனை பார்க்க காத்திருந்தவளுக்கு, அவன் புன்னகையுடன் வணக்கம் வைத்தது நம்மை நல்ல விதமாக தான் நினைக்கிறான் என்று நம்ப வைத்தது. இருந்தாலும், அவன் மனதை தெரிந்து கொள்ளும் ஆவலில் அவனை நோக்கி,

“நேத்து அந்த பொக்கே ...”, என்று ஆரம்பிக்க, பரணிக்கோ குற்றம் செய்ய குறுகுறுப்போ என்னவோ.. அவள் முடிக்கும் முன்னே இடைபுகுந்து,

“ஹான்.. நீங்க சொன்னது போல வேஸ்ல போட்டேன்ங்க”,

என்றான் வேகமாக!

தயக்கமே இன்றி பரணியின் வாயிலிருந்து வந்த சொற்களை அப்படியே நம்பியவள் மனதின் அத்தனை நேர குழப்பங்கள் யாவும் தீர்ந்தே போனது!

‘வாவ் பெல்லி பாய்!!! ஹப்பா. பரணியை சம்மதிக்கக் வைச்சிட்டே!!!’, என்று மானசீகமாக மனம் பிரார்த்தனையை செலுத்த.. வாயோ..

‘ஹே.. ஹே.. அட்லாஸ்ட் மை லவ் பைன்ட் இட்ஸ் வே!!!!’’, என்று சத்தமிட்டு துள்ளிக் குதிக்க விழைந்த பொழுது...

“என்ன வேஸ்ட்ல போட்டீங்களா???”,

பின்னால் இருந்து வந்த குரல் அதை தடை செய்தது..

இருவருமே திடுக்கிட்டு திரும்பி பார்க்க... அங்கே முகுந்த்!!!

தன்னை பார்த்தவாறே அவன் சொன்ன விதம் பரணியை நடுங்க வைத்தது என்றால்.. பரணியுடன் தனியாக பேச சந்தர்ப்பம் அமைத்து வந்தவளுக்கோ முகுந்த்தின்  பிரசன்னம் ஏமாற்றத்தை கொடுக்க.... அதை பின்னுக்கு தள்ளி...

“வேஸ்ட் இல்லை.. வேஸ்... ஃப்ளவர் வேஸ் செந்தாமரை!”, என்று திருத்தினாள் வேகமாக!

“ஓ.. ஓகே! ஓகே!”, அஞ்சனாவிற்கு தலையசைத்தாலும்.. பரணியின் மீதிருந்த பார்வையை அகற்றாது...

“சோ ஃப்ளவரை. வேஸ்ட்ல போடலை.. வேஸ்ல போட்டு இருக்கீங்க! அப்படி தானே பரணி!”,

‘நேர்ல பார்த்த மாதிரியே சொல்றானே’, திகைத்த பரணிக்கு  உள்ளுக்குள்  குளிர் பரவ.... அந்த நேரம் அவன் அலைபேசிக்கு ஏதோ அழைப்பு வர... தப்பித்தோம் பிழைத்தோம் என்று முகுந்த்தின் பார்வையில் இருந்து விலகி சென்றான்.

அவன் செல்வதையே வெறித்து விட்டு,

“அவன் என்ன  பெரிய இவனா?? தகுதி தெரியாம பொக்கே கொடுக்கிறே??”,

என்ற எச்சரித்தவாறு அஞ்சனாவிடம் திரும்பினான் முகுந்த்!

ஆம், முந்தைய நாள் இவன் காரை எடுக்க வந்த பொழுது அஞ்சனா பொக்கேவை பரணியிடம் கொடுத்து விட்டு அரக்க பரக்க ஓடியதையும் பார்த்து விட்டு..

‘இவன்கிட்ட ஏன் பொக்கே கொடுக்கிறா?’, என்ற யோசனையில் சசி அழைத்து பேசியவாறு வண்டியை செலுத்தியவன் கண்கள் பரணி அதை சாக்கடையில் வீசிவதையும் பார்த்து விட்டது!

இந்த நிமிடம் வரை அஞ்சனா பரணியிடம் என்ன பேசினாள் என்பது முகுந்த்திற்கு தெரியாது! ஆனால், அவனுக்கு அவளை பிடிக்கவில்லை என்பது நன்றாக  தெரிந்தது.

சசி அளவிற்கு அஞ்சனாவிடம் நட்பு பாராட்டா விட்டாலும், இவள் மீது வெறுப்பும் இல்லையே!! பரணியின் நடிப்பையும், கூசாமல் சொன்ன பொய்யையும் அவளுக்கு புரிய வைக்க எண்ணியதில் வந்த கண்டிப்பு அது!

‘தகுதி இல்லன்னா பெல்லி பாய் எனக்கு காட்டி இருப்பாரா.. இல்லை ஆர்யா தான் சசி டீம்லே பரணியை போட்டு இருப்பாரா?’

கடவுள் தவறானவனை என்னிடம் காட்டி இருக்க மாட்டார். ஆர்யமனும் தவறான ஒருவனை நான் இருக்கும் டீம்மில் தேர்ந்து எடுத்து இருக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவளுக்கு!

முகுந்த் சொன்னதும், அந்த சமயம் அஞ்சனாவின் நாவில் விளையாடிய சனி,

“பரணி ஆர்யாவோட செலக்ஷன்! அந்த ஒரு தகுதிக்கே ஆயிரம் பொக்கே கூட கொடுக்கலாம்!”

முகத்தில் அடிப்பது போல பேச வைத்தது அவளை! ஆர்யமனை பரம எதிரி போல நினைப்பவனிடம் போய் அப்படி சொன்னால்???!!!

அவளிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அப்படியே கை கழுவ... அவன் துர் குணமான பொறாமை விழித்துக் கொண்டது..

‘ஹூம்.. ஆர்யமன் நீ நல்ல ரிசோஸ்ன்னு எடுத்தவன் நல்லவனா தெரியலையே!! நீ கன்னம் வைச்ச ராணிகிட்டே படம் போடுறான்!! ஒரு வேளை அவன் இவளை கவுத்தி உன் ஆசைக்கு ஆப்பு வைச்சா???!! உன் தலையிலே நீயே மண்ணை போட்ட மாதிரி ஆகாது??”

‘உன் குறுக்கு புத்திக்கு அப்படி தான் அடி விழணும்! எழுந்தரிக்கவே முடியாத அளவுக்கு விழணும்!!’,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.