(Reading time: 14 - 28 minutes)

ன்று தீர்மானம் எடுத்த சமயம் அவன் செவிகளை தீண்டிய அறிவிப்பு அவனை வேகமாக பயண அட்டவணை பலகைக்கு இழுத்து சென்றது!

ஆம், அவன் பயணம் இன்னும் முடியவில்லை. ஹர்ஷவர்தனை பார்க்க அலாஸ்கா செல்லும் ஃப்ளைட்டை பிடிக்க வேண்டியிருக்க பனிப் பொழிவு காரணமாக அது ரத்தாகி போனதை அட்டவணை பலகையை பார்த்து  உறுதி செய்தவன் மூளை...  துரிதமாக தன் திட்டங்களை மாற்றி அமைத்தது.

அலாஸ்கா செல்வதை அடுத்த வாரத்திற்கு ஒத்தி போட்டவன்.. நடு இரவு என்பதால், ஹர்ஷவர்தனுக்கு தகவலாக அனுப்பி வைக்க... அவனோ  அடுத்த நொடியே அழைத்து பேசினான். அந்த அரை மணி நேர பேச்சில் பிஸ்னஸ் விஷயங்கள் மட்டுமே விவாதிக்க பட்டது! 

ஹர்ஷவர்தனும் அஞ்சனாவை பற்றி எதுவும் பேசவில்லை. ஆர்யமனும் எதுவும் கேட்கவில்லை.

ஆர்யமன் அஞ்சனா விஷயத்தில் தன்னை அதிகாரம் செய்கிறான் என்று அவனுக்குள் துளிர் விட்டு இருந்த எண்ணமே வேண்டுமென்றே அவளை பற்றி பேச விடாமல் தடுத்தது ஹர்ஷவர்தனை!

ஆர்யமனும் அஞ்சனாவை பற்றியே நினைவே இருக்க கூடாது என்று இறுமாப்பில் இருந்ததால், அவளை பற்றி எதுவுமே கேட்காமலே வைத்து விட்டான். 

சிகாகோவிலே தங்குவதற்கு ஒரு ஹோட்டல் தான் புக் செய்தவன்... அந்த அறைக்கு வந்ததும்..  நேர மாறுதலில் உண்டான அசதியா... பனிப் பொழிவு உண்டாக்கிய மந்த சூழலா... இல்லை உணர்வுகளை புதைத்து போட்டதில் உண்டான மனக் களைப்போ...

உடை கூட மாற்ற தோன்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்தான்.  எழுந்தரிக்கவே தோன்றவில்லை!

அப்படியே கண் அயர்ந்தவன்... எவ்வளவு நேரம் தூங்கினானோ... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை அந்த கனவு!!! அந்த கெட்ட கனவு!! உயிரை கலங்கடிக்கும் அந்த கெட்ட கனவு வந்து அவனின் ஆழ்ந்த நித்திரையையும்... நிம்மதியையும் தகர்த்தெறிய....

நித்தி வதை படுவது கனவில் வந்த மாத்திரத்தில் ராஜ நாகத்தின் கொத்து பட்டவன் போல துடிதுடித்து போனான்...

“நித்தி... போகாதே.. நித்தி.. நித்தீ...”

தொடர்ந்த அவன் அலறல் சுவரெங்கும் மாறி மாறி முட்டி மோதி எதிரொலித்தது...

அவன் கத்த... கத்த... அசைவற்று பார்த்திருந்தன அவனைச் சுற்றி இருந்த பொருட்கள்!!

ஆனது பல நூறு நொடிகள்... சில பத்து நிமிடங்கள்...  படப்படப்பு அடங்கி.. தன்னை ஆசுவாசுபடுத்தி நனவிற்கு வந்தவனுக்கு அத்தனை குளிரிலும்.. தொப் தொப்பென்று வேர்த்து கொட்டியிருந்தது.

கனவு வந்த வேகத்திலே மறைந்தும் போனது!!!

கனவு தான்!! வெறும் கனவு தான்!!! ஆனால், அது கொடுத்த வலி??? தீரா வலி!!!

தலை பெரிதாக வலிக்க.. அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வெகு நேரம்!!!

நித்தியின் தாக்கத்தில் இவன் சிக்கும் பொழுதெல்லாம்.. இவனை இயல்பு நிலைக்கு மீட்டு வரும் உயிர்ப்பு பப்பியிடம்.... அவள் எழுத்துக்களில் தானே இருக்கிறது!!

அவள் எப்படி அவனுள் உறைந்து இருக்கிறாளோ.. அது போலவே அவள் கடிதங்களும் அவன் உடைமையின் ஒன்றாக அவன் எங்கே சென்றாலும் உடன் வந்து விடும்!

தன்னை ஆசுவாச படுத்திக் கொள்ள அவள் கடிதங்களை தேவைப் பட... வேக வேகமாக தனது பேக்கேஜை திறந்தவனுக்கு சவால் விடும் வேகத்தில்.... திறந்ததும் முந்திக் கொண்டு ஓடி வந்தது பையில் திணிக்கப் பட்டிருந்த அந்த டி ஷர்ட்!!!

அது அஞ்சனாவின் குங்குமம் ஒட்டிய அதே டி ஷர்ட் தான்!!

‘என்னடா இது வம்பா இருக்கு??? குப்பையில் வீசி எரிந்தது என் பைக்குள்ளே எப்படி??’, என்று திகைத்தவாறு அதை கையில் எடுத்தவனுக்கு...

அது சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோரணையிலே வாசுவின் வேலை என்று புரிந்து விட்டது.

அவன் தானே கடைசி நேரத்தில் பையை வண்டியில் ஏற்ற உதவி செய்தான்!!!!

எரிச்சலில் வாசுவை அழைத்து விசாரிக்க..

“டேய்... அந்த சட்டையை... நைசா ஒரு ஓரமா  போட்டு போனா... நான் துவைச்சு எடுத்து வைப்பேன்னு தானே நினைச்சே!”

“ஒரு வாஷிங் மெஷின் வாங்கலாம்னா.. மெஷின் வாஷிங் வேஸ்ட்! மிஷன் வாஷிங் பெஸ்ட்.ன்னு வித விதமா விளம்பரம் பண்ணி.. கறை படாத இந்த கையை கறையை தேடி தேடி சோப் போட வைக்கிறியே.... அதுக்காக. அதுக்காக தான்டா இந்த ரிவன்ச்!!!”

என்று அல்பத்தனமாக லாஜிக்கை பக்கம் பக்கமாக பேசி கொல்ல.. 

“நீ துவைக்கிற லட்சணம் தெரியாதா?? அதை குப்பையில தானே போட்டேன்! உன்னை யாரு...”,

வாக்கியத்தை முடிக்காமல் பல்லை கடித்து கொண்டு சொன்னவனுக்கு..

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.