(Reading time: 14 - 28 minutes)

ப்பொழுது தான் நினைவுக்கு வந்தது - அன்று சட்டையை தூக்கி எறிந்த வேகத்தில் அது குப்பை கூடையில் மோதி கீழே விழுந்திருந்தது என்பது! அன்று அவன் இருந்த நிலையில் அப்படியே விட்டு விட்டான்! ஆனால், இப்படி வாசு அதை தன்னிடமே திருப்பி அனுப்புவான் என்று நினைத்தானா என்ன??

ஆர்யமன் குப்பையில் போட்டேன் என்பதை நம்பாத வாசுவோ,

“ஏது?? நீங்க புது ஷர்ட்டை டஸ்பின்லல?? இதை நாங்க நம்பணுமா!! உன்கிட்ட இருந்து ஒரு சட்டை ரிடயர்ட் ஆக எவ்வளோ கஷ்டபடும்ன்னு எனக்கு தெரியாதா?? போடா டேய்!!!”,  என்று ஓவராக அலப்பறையை விட...

‘அவ ஒரு அரை லூசு.. இவன் ஒரு அரை லூசு... இரண்டும் சேர்ந்து என்னை முழு லூசாக்குதுங்க’, சட்டென்று இணைப்பை துண்டித்தவன்..

பார்வை தன் வெள்ளை சட்டையில் படிந்த அந்த குங்கும சிகப்பிலே நிலைக்க...

“குங்கும பொட்டு கவுண்டர் பரம்பரையா நீங்க”, என்று கேட்டது முதல்... அவள் பேசிய அத்தனையும் வலம் வந்து...

“டோன்ட் எவர் ஹேட் மீ ஆர்யா”, என்ற கடைசி வார்த்தையில் வந்து தேங்கியது...

அவள் என்னவோ ‘உன்னால் என்னை மறக்கவே முடியாத படி துரத்துவேன்’, சவால் விடுவது போல தோன்றியது அவனுக்கு!

கண்ணுக்கு எட்டாத தூரம் வந்தாலும்.. என்னை துரத்தும் கனவு போல.. இவளும் என்னை துரத்துறாளே...

‘இந்த கெட்ட கனவு போல அவளுக்கும் ஏதாவது...??’

இந்த கேள்வி வந்ததும் அதிர்ந்தான்!

இந்த கேள்வி ஏன் வந்தது??? என்றே தெரியவில்லை அவனுக்கு! அவள் கலங்கிய முகம் மாறி மாறி வந்து அவனை கலங்கடிக்க.....

‘ஊருக்கு போயிருப்பாளா? பத்திரமா இருப்பாளா? இந்த ஹர்ஷா ஒண்ணுமே சொல்லலையே’,

வேகமாக ஹர்ஷவர்தனை அழைத்தான்... ஹர்ஷவர்தன்  எந்த நிலையில் இருக்கிறான் என்பதை கூட யோசிக்காமல்..

“அஞ்சனா... அஞ்சனா.... சேஃப்... சேஃப்பா  இருக்காளா??? ஊருக்கு போயிட்டா தானே???”

அவன் மனதில் இருந்த பயம் கேள்வியாக உருபெற்றது!!!

ஹர்ஷவர்தனோ... பனிச் சறுக்கு பயிற்சியின் பொழுது ஏற்பட்ட  சிறு கவனக் குறைவால், கையில் அடிபட்டு... அதற்காக கோச்சிடம் திட்டி வாங்கி முடித்திருந்தான். அந்த நேரம் பார்த்து, ஆர்யமன் அழைப்பு வர... அழைப்பை எடுத்த கணத்தில் அஞ்சனாவை விசாரிக்கவும்.... அவன் பயத்தையோ.. பதற்றத்தையோ கவனிக்க தவறிய ஹர்ஷவர்தனுக்கு.. கோபம் தான் வந்தது!

‘நாங்க பார்த்துக்க மாட்டோமா அவளை!’, என்ற இறுமாப்பு அவனிடம்!

“எஸ்!! ஷி இஸ் சேஃப்... ஷி வுட் பீ.... பிகாஸ்  ஷி இஸ் மை கசின்!”, அந்த ‘மை’யை அழுத்தி சொல்லி விட்டு இணைப்பை  துண்டித்து விட்டான்!

முகத்தில் அடித்தாற் போல இணைப்பு துண்டிக்கபட்டதே என்று திகைத்தாலும்...

‘இது ப்ராக்டிஸ் டைம் ஆச்சே. பின்ன இந்த நேரம் கால் பண்ணா... ’,

என்று அவன் நிலையில் இருந்து யோசித்தவனுக்கு அது தவறாக தெரியவில்லை! அஞ்சனா பத்திரமாக இருக்கிறாள் என்பதே அவனுக்கு அந்த கணத்தின் தேவையாக இருக்க... அதையே ஹர்ஷாவின் வார்த்தைகள் வெளிப்படுத்தவும்... பெருத்த நிம்மதியாக உணர்ந்தவன் மனம் அப்படியே அமைதி அடைந்தது!

பாவம் அவனுக்கு... ஏன் ஹர்ஷாவிற்கே தெரியவில்லை அடுத்த மூன்று  நாளிலே பரணியிடம் தன் காதலைய தெரிவித்து தன்னை தானே சிக்கலுக்குள் இழுத்து விட்டாள் என்பதை!

சென்னை

டிசம்பர் 19, செவ்வாய்க்கிழமை

பரணியிடம் தன் காதலை சொல்லி விட்ட பின்.... அவன் முகத்தில் நிலவிய அதிருப்தி என்னவோ மனதை குடைய.. அவன் மனம் அறிய அடுத்த நாள் அவன் வரும் முன்னரே பார்க்கிங் லாட்டில் வந்து காத்திருந்தாள் அஞ்சனா.

பார்க்கிங் லாட்டிற்குள் பரணி பைக்கை நிறுத்தியது தான் தாமதம்....

“குட் மார்னிங்”, என்று  புன்னகையுடன் வரவேற்ற அஞ்சனாவைக் கண்டதும்,

‘சை.. நேத்து தான் என்னவோ வந்து உளறிட்டு போனான்னு பார்த்தா... இன்னைக்கும் வந்து நிக்கிறா! இத்தனை ஆம்பிளைங்க இருக்கிறப்போ இவ விளையாட்டுக்கு நான் தான் இவளுக்கு கிடச்சேனா!! என் பொழப்பை நாசம் பண்ணாம விட மாட்டா போலவே!’

எண்ணங்கள் அவள் மீது அமிலத்தை எரிந்தாலும், வலிய வரவழைத்த புன்னைகையுடன் பயமும்... பவ்யமுமாக வணக்கம் வைத்தான்.

பாவம் அஞ்சனா!!! அந்த அமில எண்ணங்கள் ஒரு நாள் தன் மீது வீசப்பட்டு உருக்குலைய வைக்கும் என்பதை அறியவில்லை.

‘வந்த அன்னைக்கே ப்ரபோஸ் பண்ணி.. கொஞ்சம் ஓவரா போயிட்டேனோ.. பரணி எதுவும் நினைச்சிருப்பாரோ...’,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.