(Reading time: 17 - 34 minutes)

09. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்

இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி

இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம்

ஆணை புலி எல்லாம் அடக்கும் உன் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே  போகலையே

நெஞ்சு குழியிலே நிழல் வீழ்ந்துடுச்சி

அப்பா நிமித்தவ தான்

அப்புறமா குனியலையே குனியலையே

கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்

பச்சி ஒறங்கிருச்சு பால்தயிராத் தூங்கிருச்சு

இச்சி மரத்து மேல எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும் கண்ணுறங்கும் வேளையில,

ஆசநோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலையேநெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்!- 

இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?

கார்த்திக் மொத்தமாய் குழம்பிப்போயிருந்தான்..தான் என்ன நினைக்கிறோம் என்று அவனால் வார்த்தைகளால் கூறமுடியவில்லை எனினும் ஏதோ ஒன்று மனதினுள் உழன்று கொண்டேயிருந்தது..சஹானாவின் மாறுதல்களால் சிறு பயமும் ஆக்கிரமித்திருந்தது..எப்போதும் இயல்பாக இருப்பவள் அவனின் அருகாமையில் அதீத மகிழ்ச்சி கொள்கிறாளோ அதனால்தான் வித்யாசமாக நடந்து கொள்கிறாளோ அப்படி எடுத்து கொண்டாலும் அந்த பார்வை அதை சத்தியமாய் அவனால் மறக்க முடியாது எத்தனையோ காலம் கடந்து அவனை பார்ப்பதை போன்ற காதல் ஏக்கம் அத்தனையும் இருக்கும் அந்த பார்வையில்..இதை யாரிடம் கூறுவது அதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என யோசிக்க யோசிக்க தலை வெடித்துவிடும் போல் இருந்தது எது எப்படிஇருப்பினும் தன் சஹியை யாரிடமும் விட்டுகொடுத்து பேச அவன் தயாராக இல்லை..இதற்கு முடிவு கடவுளே கூறட்டும் என தலையை சிலுப்பிக் கொண்டு தன் வேலையை பார்க்க தொடங்கினான்..

அன்றிரவு சஹானா கார்த்திக்கை போனில் அழைக்க.

சொல்லு சஹி என்ன பண்ணிட்டுஇருக்க..?

ம்ம் வழக்கம் போல வெட்டி ஆபீஸர்தான் கார்த்திக்..உன்ன சண்டே பாத்தது அடுத்து எப்போ மீட் பண்ணலாம்..

அடிப்பாவி சண்டே முடிஞ்சு டூ டேஸ்தான் ஆகுது ஏதோ ஒரு மாசம் ஆனமாறி பில்டப் குடுக்குற..

அப்பவாவது நீ என்ன பாக்க வருவியாநுதான்..ஐ மிஸ்ட் யூ சோ மச் மேன்..

அச்சோ சஹிகுட்டி மிஸ் பண்றாங்களா அப்படி விட கூடாதே சரி நாளைக்கு மார்னிங் இங்க பக்கத்துல இருக்குற சிவன்-ராமர் கோவில்ல மீட் பண்ணலாம் ஓ.கே வா..

ஹேஹே தேங்க்யு புஜ்ஜுப்பா..இனி ஜாலியா கனவுல உன்கூட டூயட் பாடுவேன் பை குட்நைட்..

முகத்தில் புன்னகை அரும்ப போனை வைத்தவனுக்கு ஏனோ அவளின் அந்த மாற்றத்தை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை நாளைய விடியல் எதற்கு காத்திருக்கிறதோ என்ற எண்ணத்தோடே  கண்ணயர்ந்தவனுக்கு மறுபடியும் அதே காட்சிகள் தொடர்பில்லாமல் நகர இறுதியாய் வைலட நிற பட்டுபுடவையில் தலையில் இரத்தம்கொட்ட அவனின் சஹி ஏதோ கூறியவாறு தரையில் சரிய தூக்கிவாரி போட்டவாறு எழுந்தமர்ந்தான்..அருகிலிருந்த தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்தும் படபடப்பு அடங்கவில்லை..இதற்கு மேலும் இதை சாதாரணமாய் விடுவது தவறு என்று புரிய சிறிது நேர யோசனைக்குபின் நநாளை கோவிலிலிருந்து வந்து தன் தாயிடம் அனைத்தையும் கூறலாம் என முடிவெடுத்தான்..

முந்தைய நாளின் தாக்கத்தினாலேயே சீக்கிரமாக கிளம்பி கோவிலை அடைந்தான் கார்த்திக்..சஹானாவிற்காக காத்திருக்கலாமென சிவன் சன்னதிக்கு எதிரே பிரகாரத்தில் அமர்ந்தான்..ஏதோ சிந்தனையில் உள்ளே சந்நிதியை நோக்கியவாறு அமர்ந்திருந்தவனின் அருகில் அசைவு தோன்ற சட்டென திரும்பியவனின் வலப்புறம் காவி உடையணிந்து உடல் முழுதும் விபூதியாய் நெற்றியில் நாமத்தோடு ஒரு பெரியவர் இருக்க திடுக்கிட்டு ஒரு அடி நகர முற்பட்டவனை பார்த்து மென்மையாய் ஒரு சிரிப்பு அவரிடத்தில்..என்ன செய்யவென தெரியாமல் சிறு புன்னகையை உதிர்த்தான்..

என்ன கார்த்திகேயா உனக்கு அப்பன் ஈசனை விட உன் மாமனைதானே பிடிக்கும் பிறகு ஏன் என் அப்பனை அப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாய்??

முதலில் அவர்பேச்சின் அர்த்தம் விளங்காமலிருக்க அவர் வார்த்தைகளை தனக்குள்ளே கூறிபார்த்தவனுக்கு சட்டென விளங்கியது..

ஆமா எனக்கு பெருமாள்தான் இஷ்டம்நு உங்களுக்கு எப்படி தெரியும்??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.