(Reading time: 17 - 34 minutes)

ம்ம்ம் தெரியும் இந்த ஈசன் அனைத்தையுமே தெரீயவைத்து ஆடும் ஆட்டம்தானே என்னுடைய இந்த பிறவியே..இப்போது கூட நீ ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் என்று தெரியும்.,உன் குழப்பமும் தெரியும் உன் கனவின் காட்சிகளும் தெரியும்..

ஐயா…..

ம்ம் குழப்பம் வேண்டாம் கார்த்திகேயா உன்னவள் உன்னை அடைந்துவிட்டாள் இனி எந்த நிலையிலும் அவளுக்கு உற்றதுணையாய் இரு..அவளை சுற்றி அரணாய் இருந்து அவளை வழிநடத்து அனைத்தும் கூடிய விரைவில் சரி ஆகும்..

அவனறியாமல் அவன் கைகள் அவரை வணங்க,

சர்வம் சிவமயம்..நாராயணாய நம..என்றவாறு அவர் அந்தபுறம் நகரவும் சஹானா இந்தபுறம் வரவும் சரியாயிருந்தது..

ஹே கார்த்திக்..சாரி வந்து ரொம்ப நேரம் ஆச்சா???

ஆங்ங் அதெல்லாம் இல்ல சஹி இப்போதான்..என அவர் சென்ற திசையை பார்க்க..

ஆமா நா வரும்போதே பாத்தேன் ஏன் அந்தபக்கம் பாத்து தனியா பேசிட்டுஇருந்த நா கூட போன் பேசுறியோநு நினைச்சேன் பாத்தா ப்ளுடூத் கூட இல்லையே??

அப்பட்டமான அதிர்ச்சியோடு அவளை நோக்கியவன்  என்ன சொல்ற நீ??

என்னாச்சுப்பா உண்மையான அக்கறையோடு கேட்டாள்..

ஓரளவு சுதாரித்தவன் ஒண்ணுமில்லடா ஏதோ யோசனைல இருந்துட்டேன்..சரி மேடம் இப்போ சொல்லுங்க வேறன்ன ஸ்பெஷல்??

கார்த்திக் நாம எப்போ கல்யாண பர்சேஸ் போலாம்நு சொல்லு..ஐ லவ் டு டூ ஷாப்பிங் அதுவும் வெட்டிங் ஷாப்பிங் செம ஜாலி சொல்லு சொல்லு..

ஆமா சஹி அம்மா கூட ஏதோ சொல்லிட்டுஇருந்தாங்க நா கேட்டு உனக்கு கன்பார்ம் பண்றேன்..அதுவரை சமத்தா வீட்டுல இருப்பியாம்..கல்யாண பொண்ணு இப்படிலா வெளில சுத்தகூடாது புரியுதா??

ம்ம் சரி இன்னைக்கே அம்மா விடமாட்டேன்னுதான் சொன்னாங்க கோவில்நு சொன்னப்பறம்தான் ஏதோ கன்வின்ஸ் ஆனாங்க..என சோகமாய் கூற,

ம்ம் பாத்தியா சோ பீ அ குட்கேள்..இன்னும் 30 டேஸ்தான் அப்பறம் உனக்கு போரே அடிக்காம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு என்று கண்ணடித்து கூற..

ம்ம் போதும் போதும் ஆனாலும் கிடைக்குற கேப்லலா ரொமெண்ஸ்ஸ தெளிச்சு விடுறியே எப்படி கார்த்திக் கண்ணா???

வாலு..சரி இப்படி விளையாட்டுதனமாவே இருக்கியே இவ்ளோ சின்ன வயசுல கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற??எப்படி குடும்ப குத்துவிளக்கா மாற போற??என புன்னகையோடு கேட்க,

ஐயோ கார்த்திக் நா எப்பவுமே பெட்டர்மாஸ் லைட் தான்..குத்துவிளக்குலா செட் ஆகாதுப்பா..பட் ஷுவரர்லி ஐ வில் பீ த பெஸ்ட் வைஃப் அண்ட் அ பெஸ்ட் டாட்டர் இன் லா அதுல உனக்கு டவுட்டே வேணாம்..என புருவத்தை மேலும் கீழுமாய் அசைத்தாள்..

அவள் முன்தலையை செல்லமாய் உலுக்கியவன்,டேக் கேர்டா என மென் குரலில் கூற..

அதான் நீ இருக்கல என்ன பாத்துக்க என்று கூறி அழகாய் சிரித்தாள்..சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பியவன் சஹானாவைஅவள் வீட்டில் விட்டுவிட்டு வந்து தனதறைக்குள் புகுந்து கொண்டான்..நடப்பது அனைத்தும் நல்லதற்காகவா இல்லையா ஒன்றும் புரியவில்லை ஒரு வேளை தன்னால்தான் சஹானாக்கு ஆபத்து எதுவும் இருக்குமோ என பலவாறு குழம்பியவன் ஒரு முடிவுக்கு வரும்போது மாலை சற்று இருட்டியிருந்தது..வேகமாய் எழுந்து முகம் துடைத்து கிளம்பினான்..

வனின் கட்டுபாட்டிற்குட்பட்டு பைக் பறந்தது..சிவா வீட்டின் முன் வண்டியை நிறுத்தவும் சிவா வெளியே வரவும் சரியாயிருந்தது..

வாங்க கார்த்திக் என்ன அவ்ளோ அர்ஜெண்ட்டா பாக்கனும்னு போன்ல சொன்னீங்க??எதாவது ப்ராப்ளம்மா??

சிவா இத எனக்கு யார்கிட்ட ஷேர் பண்ணிக்கனே தெரில பட் என் பேமிலி கிட்ட சொல்றதவிட சஹி சைட்ல சொல்றது பெட்டர்நு தோணிச்சு அதுவும் பெரியவங்க இத எப்படி எடுத்துப்பாங்கநு தெரில இதனால சஹிக்கு எந்த டிஸ்டர்பென்ஸ் வர கூடாதுங்கிகிறதுல நா தெளிவாயிருக்கேன்..அதனால தான் நீங்க இத புரிஞ்சுப்பீங்கநு உங்ககிட்ட வந்துருக்கேன்..

என்ன கார்த்திக் என்னென்னவோ பேசுறீங்க??சஹானா எதுவும் தப்பு பண்ணிட்டாளா??எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க..

ச்சச்ச அப்படிலாம் ஒண்ணுமில்ல..அது வந்து..என ஆரம்பித்து சஹானாவின் மாற்றம் பற்றியும் காலையில் அந்த சாமியார் கூறியது வரை கூறினான்..கேட்டவனுக்கோ அதை நம்பவா வேண்டாமா என்பதற்கே நேரம் எடுத்தது..

கார்த்திக் யு மீண்ட் டு சே சஹானாக்குள்ள ஆவி…

ஹே,.சிவா அந்த அளவு எனக்கு யோசிக்க பயமாயிருக்கு பட் அட் த. சேம் டைம் இத ஆரம்பத்துலயே நிறுத்துறது பெட்டர்நு தோணுது ..

ம்ம்ம் புரியுது..பர்ஸ்ட் ஆப் ஆல் ரொம்ப தேங்க்ஸ் கார்த்திக் இத இவ்ளோ தெளிவா நீங்க கேண்டில் பண்றதுக்கு..

சிவா என் வைபஃப் அ நானே விட்டுகுடுத்துட்டா வேற யாரு அவள புரிஞ்சுப்பாங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.