(Reading time: 17 - 34 minutes)

ம்ம் என்னனு சொல்றது கார்த்திக்கு கூட இந்த விஷயமெல்லாம் தெரியாது இது இவன் தாத்தாவோட தாத்தாவோடது..அவருக்கு ரெண்டு பசங்களாம் அவரோட கடைசி காலத்துல இந்த டாலர அவரே அவரோட பெரிய மகனுக்கு போட்ருக்காரு அவரு தான் எங்க மாமனார்..என் வீட்டுகாரரோட பொறந்தவங்க ரெண்டு பேரு அதுல இவருதான் மூத்தவருங்கிறதால இவருகிட்ட அந்த டாலர் வந்தது..நாங்களும் எந்த ப்ரச்சனையும் இல்லாம சந்தோஷத்துக்கு குறைவில்லாம தான் வாழ்ந்தோம்..எனக்கு ரெண்டு பொண்ணு ரெண்டு பையன் அதுல கார்த்தியோட அப்பா ரெண்டாவது அதனால என் மூத்த பையனோட குழந்தைக்கு இந்த டாலர போடனும்னு முடிவுபண்ணி போட்டுவிட்டோம்..அப்போயிருந்து என் மூத்த பையன் குடும்பத்துல ஒண்ணுமாத்தி ஒண்ணு ஏதாவது ப்ரச்சனை வந்துட்டேதான் இருந்தது நாங்களும் ஏதோ போறாத காலம் என்ன பண்றதுநு நினைச்சோம் பாத்தா ஒரு தடவை அவன் உயிருக்கே ஆபத்து வந்துருச்சு..அலறி அடிச்சு எங்க குடும்ப ஜோசியர்ட்ட போனா அவரு ஜாதகத்துல எந்த குறையும் இருக்குறமாறி தெரில ஆனா உங்களுக்கு சம்மந்தமில்லாத பொருள் ஏதோ உங்ககிட்ட வந்துருக்கு அதுலயிருந்து தான் உங்களுக்கு ப்ரச்சனை ஆம்பிச்சுருக்கு என்னனு யோசிச்சு பாருங்கநு சொல்லிட்டாரு..

எவ்வளவோ யோசிச்சும் எங்களுக்கு என்னனே தெரியல ரெண்டு நாள் கழிச்சு வீட்ல இருந்த ஆனில என் பையனோட செயின் மாட்டி டாலர் வந்து என் வீட்டுகாரர் காலடில விழுந்தது..சட்டுனு எல்லாருக்குமே இதுதான் காரணமோநு தோணிச்சு சரி சந்தேகம்நு வந்தப்பறம் எதுக்கு விடனும்நு அத வாங்கி என் பீரோல வச்சுட்டேன்..அடுத்த ஒரு மணி நேரத்துல என் பையனுக்கு பெரிய நஷ்டமாய்டும்நு நினைச்சுட்டு இருந்த ஒரு தொழில்ல அவன் எதிர்பாக்காத அளவு லாபம்நு செய்தி வந்தது..நானும் என் வீட்டுகாரரும் ஆடி போய்ட்டோம்..அந்த டாலர்ல தான் ப்ரச்சனை என்ன பண்றதுநு யோசிக்க ஆரம்பிச்சுட்டோம்..

இப்படியே கொஞ்ச நாள் போக என் பொண்ணு வீட்டுக்கு வந்திருந்தப்போ இந்த விஷயத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்..அவளுக்கு இதெல்லாம் நம்புறமாறியில்ல..என்னம்மா நீ நம்ம பரம்பரை நகையபத்தி நீயே இப்படி சொல்ற அப்படி பாத்தா நீயும் அப்பாவும் எந்த குறையும் இல்லாமதான இருந்தீங்க அண்ணணுக்கு வேண்டாம்னா விடு நா அத எடுத்துக்குறேன் நம்ம குடும்ப நகை எனக்கு கிடைச்சா சந்தோஷம்தான்னு பேசி முடிச்சு நகர்ந்தா பாரு அவ உக்காந்திருந்த இடத்துலயிருந்த ஓடு கீழே விழுந்தது..அவளே ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டா..அதுக்கப்பறம் அவ அதபத்தி மறந்துகூட பேசமாட்டா..இப்படியே வருஷம் போக எங்களுக்கே அது மேல ஒரு பயம் வந்துருச்சு இனி இத யாருக்கும் குடுக்க வேண்டாம் நம்ம காலத்துக்கு அப்பறம் என்ன நடக்கனுமோ நடக்கட்டும்நு விட்டுட்டோம் அதுக்கு அப்பறம்தான் கார்த்தி பொறந்தது..அவனுக்கு அஞ்சு வயசாயிருக்கும் போதுதான் ஷரவன் ஷரவந்தி பொறந்தது..அவங்களுக்கு பேர் வைக்குறஅன்னைக்கு குழந்தைகளுக்கு நகை போடனுமேநு என் நநகைபெட்டிய எடுத்து வச்சுட்டு இருக்கும்போது கார்த்தி  ஓடி வந்து என்பக்கதுல உக்காந்து ஒவ்வொண்ணா எடுத்து பாத்துட்டு இருந்தான்..அப்போ இந்த டாலர கைல எடுத்தவன் பாட்டி இது எனக்கு வேணும் போட்டுவிடேன்னு கேட்டான்..எனக்கோ பகீர்நு இருந்தது..இது வேணாம் கண்ணா உனக்கு நா வேற வாங்கி தரேன்னு எவ்வளவோ சொன்னேன் அழுது ஒரே அடம்..சரிநு மனசு கேக்காம அத அவனுக்கு போட்டுவிட்டேன்..இருந்தாலும் உள்ளுக்குள்ள பக் பக்நு தான் இருந்தது..

அவன்மேல எப்பவுமே ஒரு கண்ணு வச்சுட்டேயிருந்தேன்..தாத்தா தான் என்ன சமாதான படுத்தினாரு..கார்த்தி அப்பா அப்போ சென்னைல இருந்ததால அவனுக்கு இந்த டாலர் பத்தின ப்ரச்சனையெல்லாம் தெரியாது நானும் எதுவும் சொல்லிக்கல..ஆனா அன்னைக்கு பூரா கார்த்தி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் அப்பப்போ அந்த டாலர பாத்து பாத்து சிரிச்சுப்பான் எனக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு என் பேரனுக்கு எந்த குறையும் வரகூடாது ஆண்டவாநு என் குலதெய்வத்தை வேண்டிடேதான் இருப்பேன்..ஆனா இதுல ஆச்சரியம் என்னனா அதுக்கப்பறம்தான் கார்த்தி அப்பாக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சுது லோன் போட்டு நல்லபடியா அந்த வீட்ட கட்டினான்..குறையில்லாம இருந்தாங்க அதுக்கப்பறம் தான் எனக்கும் தாத்தாக்கும் மனசு நிம்மதியே ஆச்சு..இதெல்லாம் யாருக்குமே தெரியாது இப்போ ஏதோ நீங்க ரெண்டு பேரும் இதபத்தி கேட்டவுடனே சொல்லிட்டேன்..இதனாலதான் சொல்றேன் அது உனக்கு வேண்டாம்நு நீயும் ஷரவந்தியும் நூறு வருஷம் நல்லாயிருக்கனும் அது உனக்கு வேணாம்ப்பா..என்று பாட்டி பாவமாய் முடிக்க கண்ணிமைக்கவும் மறந்திருந்தனர் சிவாவும் கார்த்தியும்..

ஹாய் ப்ரெண்ட்ஸ்…இன்றைய எபி எப்படியிருந்தது…லாஜிக்லா ஓ.கே வா??கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்..

தொடரும்

Ninnai saranadainthen - 08

Ninnai saranadainthen - 10

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.