(Reading time: 16 - 31 minutes)

10. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்

என்னாகும் உயிரே உயிரே....

என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்

என்னாகும் உயிரே உயிரே....!

 

இரவில் வந்தது சந்திரனா

என் அழகே வந்தது உன் முகம்தான்

வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே

உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா

என் அழகே உன் இரு பார்வைகள்தான்

உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்

என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

 

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

 

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்

உலகையே மறக்கலாம்

வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்

பறக்கலாம் மிதக்கலாம்

காற்றாகி கைகோர்த்து போவோமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்..”

பாட்டியின் பேச்சை கேட்டு இருவரும் அசையாமல் அமர்ந்திருக்க தாத்தா தான் வந்து அவர்களை சுயநினைவிற்கு கொண்டு வந்தார்..

வாங்க புது மாப்பிள்ளைகளா??என்ன இந்த கிழவி அப்படி என்னத்த சொல்லிட்டாநு பேயறஞ்சாப்ல உக்காந்துருக்கீங்க??

ஆமா நா கிழவி இவருக்கு அப்படியே இளமை ஊஞ்சலாடுது..எல்லாம் இந்த டாலரை பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன்..

அட யாருடி இவ வந்த புள்ளைங்களுக்கு சாப்பாடு போடாம இது ரொம்ப முக்கியமா??

தாத்தா பாட்டிய ஒண்ணும் சொல்லாதீங்க நாங்கதான் பேசிட்டு இருந்தோம்..-சிவா..

அட விடுப்பா இவருக்கு வேற வேலையில்லஎன்ன ஏதாவது சொல்லலைனா தூக்கம் வராது..என்றவாறு எழுந்து சென்றார் பாட்டி..

கார்த்திக்கை சுயநினைவிற்கு கொண்டு வந்தவன் தாத்தாவிடம்,ஏன் தாத்தா நீங்க என்ன நினைக்குறீங்க??-சிவா

அதெல்லாம் எனக்கு விளக்கத் தெரிலப்பா..ஆனா அது என் தாத்தாவோட விருப்பமான நகையாம் அதனால அவரு இது கார்த்திக்குதான் கிடைக்கும்நு ஆசைப்பட்டாரோ என்னவோ மத்தபடி இத பத்தி யோசிக்க ஒண்ணுமில்ல அவ கெடக்குறா..என அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்..

மதிய உணவை முடித்துவிட்டு கிளம்பியவர்கள் அங்கு சற்று தள்ளியிருந்த கோவிலில் அமர்ந்தனர்..சிவா எனக்கு என்ன சொல்றதுனே தெரில..இதெல்லாம் நம்பவா வேண்டாமாநு கூட தெரில..

கம் டவுண் கார்த்திக்..எனக்கே இதெல்லாம் புதுசாதான் இருக்கு ஆனா அடுத்து நாம என்ன பண்றதுநு யோசிக்கனும்..

வேண்டாம் சிவா இத இப்படியே விட்ருவோம்..

கார்த்திக்????

ஆமா சிவா இன்னைக்கு கேட்டதெல்லாம் வச்சு பாக்கும்போது நம்மளையும் மீறின ஒரு சக்தி இருக்குநு நம்ப தோணுது..நாம தலைகீழா நின்னாலும் நடக்குறதுதான் நடக்கும்நு புரியுது சோ வீணா நாம மனச குழப்பிக்காம விட்ரலாம்..என் சஹி என்கூடவே தான இருக்கா நா அவளை பத்திரமா பாத்துக்குறேன்..

கவலபடாதீங்க கார்த்திக் நம்மள மீறி எதுவும் நடக்காது நடக்கவும் விடமாட்டோம்..பட் இதபத்தி சித்தப்பாகிட்ட மட்டும் மேலோட்டமா சொல்லி வச்சுருவோம் வேற யாருக்கும் தெரிய வேணாம்..ப்ளீஸ்..

இதபோய் எப்படீ அவருகிட்ட???

சித்தப்பா தப்பா எந்த முடிவும் எடுக்கமாட்டாரு கார்த்திக்..அவரு எதார்த்தத்த புரிஞ்சு நடந்துக்குறவரு..அவருக்கு சஹானா தான் எல்லாமே..இப்போ இத சொல்லாம நாளைக்கு எதுவும் ப்ரச்சனைனா அவருக்கு பதில் சொல்ல முடியாது ப்ளீஸ் புரிஞ்சுகோங்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.