(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 03 - ரேவதிசிவா

knkn 

கானல் நீரையும் காணும் நீரையும்

பிரித்தறிய கற்றுத்தருபவர்களே!

கானல் நீரானால்?”

கஷ்டம்/Difficult – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.அதாவது அவர்களின் எண்ணங்ளைப் பொருத்து! சிலருக்கு ஒருவேளை உணவு கிடைக்காமல் இருப்பது கஷ்டம் என்றால், சிலருக்கு ஒருவேளையே என்றாலும் பிடிக்காத உணவை உண்பது கஷ்டம்!

கஷ்டம் (Difficult) மற்றும் துன்பம் (Sufferance) என்னும் இவ்விரு வார்த்தைகள் பல வகையில் வேறுப்பட்டவை.சிலர் இதனை ஒன்றாக நினைத்து எளிதாக எண்ணிவிடுவர்.கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதற்காவது சில நபர்கள் இருக்கின்றனர்.ஆனால்  துன்பப்படுகிறவர்களுக்கு  உதவுபவர்கள் மிக மிகக் குறைவு.

முன்னே குறிப்பிட்டவர்களுக்கு அடுத்த வேளை உணவு கிடைக்கலாம் அல்லது அடுத்த வேளை அவர்கள் விரும்பிய உணவு கிடைக்கலாம்.அதனால் அவர்களின் கஷ்டம் நீங்கலாம்.

உணவே கிடைக்காமல் துன்புறுகிறவர்களுக்கு?

Global Hunger Index (GBI) – இது ஒரு multidimensional statistical tool. உலகில் உள்ள நாடுகளில் நிலவும் பசி”(hunger) -ஐ ஆண்டுக்கு ஒருமுறைக் கணக்கெடுக்கும்.

இது கொடுத்த தகவலின் படி, இந்தியா 2016 வருடம், 28.5% கொண்டு 118 நாடுகளில்  97-வது இடத்தில் உள்ளது.அதாவது 100 நபர்களில் 28 மக்கள் பசியில் அவதியுருகின்றனர்.

இது அடிப்படையாக ஏற்றுக்கொள்வது நான்கு பொருள்கள்.

1.ஊட்டச்சத்துக் குறைபாடு

2.குழந்தைகளின் வயத்திற்கு ஏற்ற உயரம் (child stunting)

3.குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடை (child wasting)

4.குழந்தைகளின் இறப்பு

வளர்ந்து வரும் நாடுகளில் , 2016 வருடத்தின்படி GBI 21.3.

50 நாடுகள்,இதன் கணக்கின்படி மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

மிகவும் பாதிப்பில் உள்ள இடங்கள் (கண்டங்கள் (Continents) படி): ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சகாரா (30.1) மற்றும் தெற்காசியா (29.0)

நம் வருங்காலம் குழந்தைகளைக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் நிலை இதுவென்றால்?

இதற்குமேல் துன்பம் என்னும் வார்த்தைக்குப் பொருள் தேவையா?

குறிப்பு: 2016-ஆம் வருடம் , உலகில் பில்லியனர்கள் அதிகம் வாழும் நாடுகளைக் கணக்கெடுத்ததில், இந்தியா 84 பில்லியனர்களைக் கொண்டு, 5 -ஆம் இடத்தில் உள்ளது. (முரண்பாட்டை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்,அதற்கான காரணங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்களிடமே!)

டம்: பங்களாதேஷ் அல்லது வங்க தேசம்

குறுகிய இடத்தில் வாழ முடியும் என்றாலும்,  குறுகிய மனதுடையவர்களுடன் வாழ்வது என்பது கடினமானது.

நாம் அனைவரும் ஏங்குவது, நம்மைப் புரிந்துக்கொள்பவர்கள் யாரேனும் இருக்க வேண்டும் என்பதே!அவர்கள் நம்முடன் அருகில் இல்லாமல் போனாலும், நமக்காக ஒருவர் இருக்கிறார் என்னும் எண்ணமே நம்மை பல துன்பங்களைக் கடந்துவிட உதவும்.

அப்படிப்பட்டவர்கள் எந்த உறவாகவும் இருக்கலாம்! சிலருக்கு இப்பூமியில் தோன்றும் பொழுதே கிடைத்துவிடும்.சிலருக்கு இடையில் கிடைக்கலாம்,அப்படியே கிடைத்தாலும் இறுதிவரை வராமலும் போகலாம். இறுதிவரை கிடைக்காமலும் போகலாம்.

இப்படி மனதிற்கு இதமாக இருப்பவர்கள் யாரும் இல்லாமல் ஏங்குபவர்கள் மத்தியில் யாரேனும் அன்பாகப் பழகினால், சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் அவர்களை ஏற்றுக்கொள்ளும் நம் மனம்.

நம்பிக்கைத் துரோகிகளைச் சந்தித்து இருந்தாலாவது சற்று விழிப்புடனாவது இருக்கும்! அப்படியே அடிப்பட்டிருந்தாலும் இரகசியமாய் நம் மனம் சாயத்தான் விரும்புகிறது!

அனுபவட்டவர்களுக்கே மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் பொழுது, கள்ளர்களை அறியாத வெளியுலகம் புரியாத குழந்தைகளின் நிலை?

உண்மையான அக்கறையுடையவர்களா?இல்லை ஆதாயத்திற்காக பழகுகிறார்கள்?என்பதை எங்ஙனம் அறியும் அன்பிற்காக ஏங்கும் அப்பிள்ளைகளின் மனம்?

இந்த உலகில் அன்பிற்குத்தான் முதல் பஞ்சம்.இந்த பஞ்சம் என்று தீருகிறதோ? அன்றே நாம் அனைவரும் அனைத்திலும் நிறைவுடைந்து பிறப்பின் பயனை அடைந்துவிடுவோம்.

கட்டுப்பாடு விதிக்காமல்  எதிர்பார்பில்லாமல் ஒருவரின் மீது நாம் நேசம் கொள்வதே  அன்பானது நம் அனைவரிடமும் உள்ளதா?

மனதில் அனைவரும் வறியவர்களே, கடவுளிடம், மனிதர்களிடம்,மற்ற உயிர்களிடம் அன்பை தேடிக்கொண்டே இருக்கிறோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.