(Reading time: 15 - 30 minutes)

ன் கணவனின் அருகில் வந்து, என்ன நீங்க இவன்கிட்டப் பணிந்து பேசிகிட்டு இருக்கீங்க? நாம சொல்றதுதான் விலை? முன்னையாவது நிறைய பிரச்சினை இருந்தது,இப்பதான் யாரும் இல்லையே? உங்க அம்மா இப்ப இறந்தப்போயிட்டாங்க. அதனால அவன் வேலைக்கு அவன் கொஞ்சம் இரங்கிதான் வந்தாகனும். நீங்க தைரியமாகப் பேசுங்க என்றாள்.

இவர்கள் மெதுவாகப் பேசியதால், காதில் எதுவும் விழாததால் கூர்மையாக அவர்களைப் பார்த்தப்படியே இருந்தான் அக்கொடியவன்.

சரி!அவன் நம்மையே பார்க்கிறான், கொஞ்சம் நீ பேசாம இரு என்றான் பூதகியின் கணவன்.

இங்க பாருங்க, நாங்க சொன்ன பணத்தை நீங்க தந்தால்தான் புல்புல்ல உங்ககூட அனுப்பி வைப்போம்.இல்லையென்றால் நீங்க கிளம்புங்க நான் வேறொருவரிடம் பேசிக்கொள்கிறேன் என்றான்.

அக்கொடியவன் தன் தலைவனின் கட்டளையின் பெயரில் வந்துள்ளதால், எப்படியேனும் புல்புல்லை அழைத்து செல்லும் முடிவில் இருந்தான்.

சரி, நீங்க கேட்ட அளவு தருகிறேன், இங்கு எந்த பிரச்சனையும் நிகழாமல் புல்புல்லை அனுப்ப வேண்டியது உங்கள் பொருப்பு என்றான்.

அதெல்லாம் இங்க ஒரு பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

சரி, நான் போய் தூங்குறேன் என்று கூறி அவ்விடத்தை விட்டு அகன்றான் அவன்.

ஏங்க, இந்த குட்டிய எப்படி சமாளிக்கிறது என்று கேட்டாள் பூதகி.

ம், அதை நான் பார்த்துக்கிறேன், நீ காலையில அவளை வேலை வாங்காமல் திட்டாமல் இருந்தாலே போதும்.நாளைக்கு ஒரு நாளாவது ஒழுங்கான தாயா நடந்துக்கோ. அதுக்கு பிறகு நாம நினைச்சாலும் அவளைப் பார்க்க முடியாது என்றான் தகப்பன்.

நீங்க வேற, நான் ஏன் அவளை நினைக்கனும், ஏற்கெனவே பெத்தத்தும் என்னை ஏமாத்திடுத்து.சரி, அடுத்து பிறந்தாவது ஒழுங்கா இருக்குமென்று பார்த்தா உமையாவும் பொறந்து என் கழுத்த அறுத்துடுத்து.எங்காவது போய் ஒழிந்தால் போதும் என்றாள்.

நாம் நினைச்ச மாதிரி இல்லா விட்டாலும், இப்ப இவங்களால நமக்குப் பணம் கிடைக்குதே, அதை நினைத்து சந்தோசப் படு. வா! நாமும் போய் தூங்கலாம் என்று கூறி அவளோடு எழுந்து சென்றான்.

மனிதன் வாழ்வில் துன்பங்கள் எப்படி வந்தாலும் அதையெல்லாம் மறக்க செய்து நமக்கு நம்பிக்கை ஒளி தருவது காலைப்பொழுதின் விடியல்.

இங்கு மட்டும் தலைகீழாய்...

புல்புல்! புல்புல் என்று மெதுவாக குரல் கேட்க, சற்று ஆச்சரியத்துடன் எழுந்தாள் அச்சிறுமி.பதினோரு வயது குழந்தைகளின் மனவளர்ச்சியைவிட அவள் சற்று முதிர்ச்சி அடைந்திருந்தாலும், எப்பொழுதும் ஒரு வித பயத்திலுமே அன்பிற்கான ஏக்கத்திலும் கழிந்து செல்லும் ஒவ்வொரு விடியலும்!

இன்று அன்பான குரலைக் கேட்டபடி விடிய,மகிழ்ச்சியுடன் கண்விழித்தாள் அவள்.

இல்லை.இக்குரல், கனவில் காணும் உன்  மகிழ்ச்சியைக்கூட பறித்துக் கொள்ள காத்திருக்கிறது என்பதையும் நீ நம்பிக் கொண்டிருப்பது கானல் நீர் என்பதையும் யார் சொல்வது?

கண்ணில் சிரிப்புடன் முகமலர அம்மாமாவை நோக்கினாள் புல்புல்.

பின், இதுவரை தன் பாட்டியை தவிர யாரிடமும் அன்பு வார்த்தையும் கனிவையும் காணாதவளின் காலைப் பற்றி நேற்று அன்புடன் விசாரித்தவர் அல்லவா! அவளுக்கு அம்மாமாவை மிகவும் பிடித்துவிட்டது.

சைகையாலே என்ன வேண்டும் மாமா?என்று விசாரித்தாள் அச்சிறுமி.

நீ வாமா உனகிட்ட ஒரு முக்கிய விஷயம் சொல்லனும் என்று அவளை அவ்விட்டின் பின்புறத்திற்கு அழைத்து சென்றான்.

நீ இங்க சந்தோசமா இருக்கியா? தயங்காம பதில் சொல்லு என்று கேட்க, புல்புல்  தன் வருத்தத்தை மறைத்து நன்றாக இருப்பதாய் கூறினாள்.

எனக்கு நீ சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியலை, பொய் சொல்லாதமா! உன்னை இங்க கொடுமைப் படுத்துறாங்க என்பது நல்லா தெரியுது.நீ இங்க கஷ்டப்படுவதற்கு என்கூட வந்தால் உன்னை நான் நல்லா பார்த்துப்பேன் என்று நயமாக பேசினான்.

புல்புல்லிற்கு இங்கு தன் அன்னை செய்யும் கொடுமையும், அதை கண்டும் காணத மாதிரி இருக்கும் தந்தையையும் நினைத்து மனம் வருந்தினாள். என்னதான் அவளிற்கு அந்த மாமாவை பிடித்தாலும், தன் பெற்றோரையும் ஊரையும் விட்டு பிரிந்து செல்ல மனமில்லை என்பதைவிட அவளுக்கு பயமாயிருந்தது.

அவளின் எண்ணங்களை அவளின் முகபாவங்களை வைத்து அறிந்து கொண்டவன், மேலும் தன் வாய்திறனைக் காண்பித்தான்.

புல்புல் மறுபடியும் சொல்றேன், நீ என்கூட வந்திட்ட என்றால் உனக்கு இப்ப எந்த ஒரு ஆபத்துமில்லை.அப்படி இல்லையென்றால் இன்னும் கொஞ்ச நாளில் உங்க அக்காவிற்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கு ஏற்படும்.நான் ஊரில் உன்னைப் போன்ற பிள்ளைகளுக்கென்றே இல்லம் நடத்தி வரேன். நீ அங்க நிம்மதியா இருக்கலாம்,படிக்கலாம் சந்தோசமா இருக்கலாம் என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.