(Reading time: 16 - 31 minutes)

கார்த்திக்கும் சிவாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ச்சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..சரி நீங்க எத நினைச்சும் கவலபடாதீங்க கூடிய சீக்கிரம் ஊருக்கு போய் பூஜையை முடிச்சுட்டு வந்துருவோம்..என அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்..

கார்த்திக்.,.என்ன இது நாம ஒண்ணு நினைச்சா வேற ஒண்ணு நடக்குது..

இல்ல சிவா எனக்கு புரிஞ்சுடுச்சு..

என்ன சொல்றீங்க??

ஆமா சிவா இந்த ஜென்மத்துல நாதான் சஹானாவ கல்யாணம் பண்ணனும்ங்கிறது விதி..அதோட அடையாளங்கள் தான் இத்தனையும்..இனி இதுல யோசிக்க ஒண்ணுமேயில்ல..எங்க கல்யாணத்தை எந்த ப்ரச்சனையும் இல்லாம முடிச்சாலே இந்த ப்ரச்சனைக்கெல்லாம் தீர்வு கிடைச்சுரும்நு நம்புறேன்..கூடிய சீக்கிரம் அந்த பூஜையை முடிச்சுருவோம் உங்களுக்கும் ஷரவந்திக்கும் கூட அப்போவே பண்ணிடுவோம்..என்ன சொல்றீங்க??

ம்ம்ம் நீங்க சொல்றது கரெக்ட்தான் இருந்தாலும்..

சிவா சஹானாவ நினைச்சு நீங்க கவலபடாதீங்க நா இருக்கேன்..என்றவனை பெருமையாய் ஒரு பார்வையோடு அணைத்துக் கொண்டான்..

இரு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்து பூஜைக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கினர்..அதற்குள் முகூர்த்த புடவை வாங்குவதாய் முடிவு செய்து அதற்கான நாளையும் முடிவு செய்து கொண்டனர்..

காலை நேரப் பரபரப்பிற்கு குறைவின்றி சுழன்று கொண்டிருந்தது சென்னையின் தியாகராய நகர்..சென்னையில் இந்த இடத்திற்கு மட்டும் வாரம் முழுவதுமே விடுமுறைதான் போலும்..எவ்வளவு கடைகள் எவ்வளவு மக்கள் எத்தனை வியாபாரம்..வார நாட்களில் சென்றாலும் சனி ஞாயிறு போன்றே கூட்டம் அலைமோதும்..சென்னையின் அடையாளமாக முக்கிய பங்கு வகிக்கும் இடமென்றே கூறலாம்..இரு குடும்பங்களும் அங்கிருந்த பட்டுத்துணிக்கு பெயர் போன கடைக்குள் சந்திப்பதாய் ஏற்பாடு..கார்த்திக் சஹானா திருமணத்திற்கு முந்திய நாள் சிவா ஷரவந்திக்கும் நிச்சயம் முடிப்பதாய் முடிவு செய்ததிற்கேற்ப அவர்களுக்கும் ஆடை அன்றே வாங்குவதாய் ஏற்பாடு..பேசிய நேரத்திற்கு இரு குடும்பங்களும் ஆஜராகிவிட ஜோடிகள் இருவரும் தங்கள் உடைகளை தேர்வு செய்வதாய் கழண்டு கொள்ள பெரியவர்கள் அனைவருக்குமான உடைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தனர்..

ஷரவ் உனக்கு என்ன கலர் பிடிக்கும்நு சொல்லு..

பர்டிகுலராலா பார்க்க வேண்டாம் சிவா எது நல்லாயிருக்கோ உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ எடுத்துக்கலாம்..எனக்கு பட்டுபுடவைலலா அவ்ளோ நாலேஜ் கிடையாது..

அட அட ஷரவ் என்ன இவ்ளோ சிம்பிளா முடிச்சுட்ட நா கூட இன்னைக்கு புல்லா இங்கேயே தங்க வேண்டியிருக்குமோநு நினைச்சுட்டேன்..என்ன காப்பபாத்தீட்டடீ செல்லம்..

போதும் போதும் நேர்ல பாத்தா இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல..ஆனா அன்னைக்கு வீட்டுக்கு வந்துட்டு போனப்பறம் ஆளையே காணும்..போன்லயும் ஒழுங்கா பேசல..நீங்கல்லாம் எப்படி ரெண்டு வருஷம் எனக்காக காத்திருந்தீங்க..என்றாள் போலி கோபத்துடன்..

ஹா ஹா ஷரவ் கொஞ்சம் பிசிடா..மத்தபடி உன்ன நினைச்சுட்டேதான் இருந்தேன்..நீயே இப்படி கேக்குற அளவு நடந்துக்கிட்டேனா அப்போ இன்னைக்கு புல்லா ஷரவ் குட்டி கூடதான் ஸ்பெண்ட் பண்ண போறேன் ஜாலி..

ஹய்யய்யோ நா மாட்டேன்ப்பா அப்பா என்ன சொல்லுவாரோ..

அதபத்தி நீ ஏன் கவலப்பட்ற நா பாத்துக்குறேன் நீ என்கூட வந்தா மட்டும் போதும்..என்றவாறே திரும்பியவனின் கண்களில்பைட்டனர் கார்த்திக்கும் சஹானாவும்..

சஹானா கார்த்திக்கை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தாள்..கார்த்திக் இந்த புடவை காம்பினேஷனே சரியில்ல..இது பார்டர் குட்டியா இருக்கு இது ஓல்ட் மாடல்..இது ரொம்ப டல்லா இருக்குல..

சஹி என்னால முடில நீ புடவை எடுக்க வந்தியா இல்ல கடையவே விலை பேச வந்தியா..நீ ஷாப்பிங்க்கு ஆர்வமா இருந்தப்பவே உஷாராயிருக்கனும் மாட்டிக்கிட்டேன்..நா பாவம்மா..

அட என்ன புஜ்ஜுப்பா இதுக்கே இப்படி சொல்லிட்ட இன்னும் எத்தனை புடவை எடுக்க வேண்டியிருக்கு..

என்னது இன்னுமா???அப்போ நீ இங்க வந்து உக்காரு நானே உனக்கு செலெக்ட் பண்றேன் இல்ல இன்னைக்கு வீட்டுக்கு போனமாறி தான்..நா புடவையை காட்றேன் ஓ.கே வா இல்லையாநு மட்டும் சொல்லு..

கார்த்திக் திஸ் இஸ் நாட் ஃபேர்..

ஐ நோ பேபி இருந்தாலும் வேற வழியில்ல..உனக்கு புடவை எடுத்துப் போட்டே இவங்களுக்கெல்லாம் வயசாய்டும் போலயிருக்கு சோ நா சொல்றத மட்டும் செய்..என்றான் மென்னகையுடைன்..போலியாய் அலுத்துக் கொண்டாலும் மனதினுள் அவனின் ஒவ்வொரு செயலையும்ரசித்து மகிழ்ந்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.