(Reading time: 18 - 35 minutes)

16. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

PEMP

வனது பெற்றோர் போனதும் மஹிந், “ஹாய் பேபி இரண்டு பேர் வீட்டிலும் கிரீன் சிக்கனல் கிடைத்துவிட்டது” என்று குசியுடன் கூறிக்கொண்டு மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் வருனுடன் உட்கார்ந்திருந்த ழையாவின் அருகில் அவள் தோளில் கைபோட்டவாறு நெருங்கி அமர்ந்தான்.

வருண் இருக்கும் போதே அவ்வாறு தன் அருகில் அவன் அமர்வதை விரும்பாத ழையா அவன் தன் தோலின் மேல் போட்டிருந்த கையை எடுத்துவிட முயன்று கொண்டே அவனைப் பார்த்து முறைத்தாள்.

ஆனால் அவளின் செய்கையை கவனிக்காதது போல் அழுத்தி தன் கையை அவள் மீது போட்ட படி வருனிடம் பேச்சுக்கொடுத்தான் மஹிந்தன்.

அப்போ உன் அம்மா வடையை ழையாவுக்கு மட்டும் தான் கொடுத்துவிட்டார்களா? நீ கொண்டு வந்திருக்கும் அத்தனையும் என்னை பார்க்கவைத்து சாப்பிட்டால் அவளுக்கு வயிறு வலி வந்துவிடும் என்றவன், கற்பகம் என்று குரல் கொடுத்ததும் ஓடிவந்தவளிடம் இதில் உள்ள வடைகளில் இரண்டை மட்டும் ஒரு ப்ளேட்டில் வைத்து எடுத்துவந்து மேடத்தோட தம்பிகிட்ட கொடு. மற்ற எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து என்னிடம் கொடு எனக்கு பயங்கர பசி என்று கூறிக்கொண்டு, அர்த்தத்துடன் ழையாவைப் பார்வையிட்டவாறு சொன்னான்.

தன் அக்காவின் அருகில் வம்பிழுத்துக்கொண்டே அமர்ந்திருந்த மஹிந்தனைக் கண்டதும், வருணும் சூழ்நிலையை இயல்பாக்கும் நோக்கத்துடன் அது எப்படி என் அக்காவிற்கு இல்லாமல் இப்பொழுது நீங்களே மீதத்தை சாப்பிட்டால் உங்களுக்கு மட்டும் வயிறு வலிக்காதா என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவன் வைத்திருந்த போன் ஒலி எழுப்பவும் எடுத்தவன், அம்மாதான்! என்று கூறிக்கொண்டு சொல்லுங்கம்மா அக்காநல்லா இருக்கிறாள் நீங்கள் பயப்படவேண்டாம் அவளிடம் பேசுறீங்களா என்று கூறிவிட்டு, அக்கா இந்தா அம்மா! பேசுகிறீர்களா? என்று போனை ழையாவிடம் கொடுத்தான்.

அவன் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவனின் தொலைபேசி அழைத்தது. அதனைஎடுத்து சொல்கதிர் என்றவன் அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும் கொஞ்சம் சீரியசான அவன் முகம் நீ காருடன் வாசலில் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து காத்திரு நாம் இருவரும் அங்கேபோய் நிலைமையை சமாளிக்கலாம் என்று தொடர்பைத்துண்டித்தவன் வருணை பார்த்து, சாரிவருண் உன் கூட இபொழுது டைம் ஸ்பென் பண்ணமுடியாது எனக்கு ஒரு முக்கியமான் வேலை காத்திருப்பதால் போகவேண்டியுள்ளது.நீ உன் அக்காவுடன் நேரத்தை ஸ்பென் பண்ணிக்கொண்டு இரு. நான் வந்துவிடுகிறேன் என்று கூறிக்கொண்டு, போன் பேசுவதற்காக சற்று தன் முதுகின் பின்னால் தள்ளி நின்று கொண்டு இருந்த ழையவைத் திரும்பிப்பார்த்தான் அப்பொழுது அவள் அவளின் ஓவியத்தின் கீழ் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள். அவளின் அலங்காரமும் தான் கைப்படவே வரைந்த அவளின் ஓவியமும் அருகருகில் இருப்பதையும், அவளின் இன்றைய விசேஷ அலங்காரமும் திரும்பி அவளின் சைடு போசின் காரணமாக் கொஞ்சமாக் தெரிந்த அவளின் இடுப்பழகையும் பார்த்தவனுக்கு அப்பா! இவவளவு அழகாக இருந்துகொண்டு என்னை கொல்றாளே... என்று சந்தோசச் சலிப்புடன் தன் மொபைலில் அவளின் தற்போதைய அழகை நிழல் படமாக தன் போட்டோ எடுத்தான்.

கவிழையா விடம் பேசிய பார்வதி எப்படி இருக்க கவி உன்னை மாப்பிள்ளை நல்லா வைத்திதுக்கொள்கிறாரா? என்று கேட்டாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த ஈஸவரன் அவளின் நலத்தை அறிய ஆவலுடன் போனை கை பற்றி வருண் அங்கு தானே இருக்கிறான் மாப்பிள்ளை உன்னை நல்லபடி கவனித்துக்கொள்வதாக அவன் கூறினான் இருந்த போதிலும் நீ உண்மையை மறைக்காமல் சொல் ழையா, நீ அங்கு நலமாக இருகிறாயா? என்று கேள்வி எழுப்பினார்.

கவிழையா மனதிற்குள் எப்படி அதற்குள் நம் வீட்டில் உள்ள அப்பா அம்மா வருண் உட்பட மஹிந்தனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.என்னால் மட்டும் அவன் எனக்குச் செய்தவைகளை மறந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று எண்ணினாள். அப்படி நினைக்கும் போது முதல்நாள் அவனிடம் தான்மயங்கி நின்றது ஞாபகம் வந்தது.

அவளது மனசாட்ச்சி கணவன் என்று நினைப்பு உனக்கும் வந்ததினால்தான் நீ அவனிடம் நேற்று மயங்கி நின்றாய் என்று உள்மனது சொன்னது..ஆனால் மனசாட்ச்சிக்கு குட்பை சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவள் அப்பா என்ன கவி நான் கேட்பதற்கு பதில் சொல், என்று கேட்டதும் தான் சுயநினைவிற்கு வந்தவள் அப்படியெல்லாம் இல்லை அப்பா நான் இங்கு எந்த பயமும் இல்லாமல் நலமாகத்தான் இருக்கிறேன் ஆனால் உங்களை எல்லாம் விட்டுவிட்டு இங்கு இருபதற்குதான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

வருண் மஹிந்த்திடம், அவசரமாக் வெளியில் கிளம்பனும் என்று சொன்னீர்கள் என்று அவனிடம் பேச்சுக்கொடுத்தான், உடனே மஹிந்தன் உன் அக்காவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவள் இப்போதைக்கு பேசி முடிப்பது போல் தெரியவில்லை என்றவன், எழுந்து அவள் அருகில் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.