(Reading time: 18 - 35 minutes)

ப்பொழுது அங்கு வந்த மஹிந்தனுக்கு ழையா அவள் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த உங்களை விட்டு இருப்பது கஸ்ட்டமாக இருக்கிறது என்ற வார்த்தை காதில் விழுந்ததும் முகம் இருக்கமாகியது அவன் வருவதை அவள் உணராமல் இணக்கமாக அவள் வீட்டவரிடம் போனில் பேசிக்கொண்டிருப்பதை அவனாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் அதனை வெளிப்படுத்தவும் தயக்கமாக இருந்தது எனவே வருனிடம் நீபோய் உன்அக்காவிடம் உள்ள போனை வாங்கி பேசு நான் அவளிடம் இப்பொழுது அவசரமாக வெளியில் போவதை சொல்வதற்காக போனை வாங்கினால் என்னுடன் சண்டைக்குவருவாள் என்று கூறினான்

வருணுக்கு அவனின் நிலை கொஞ்சம் புரிந்ததால், தன் அக்காவின் கையில் இருந்த போனை பறித்து ஒரு நிமிஷம் நான் பேசிட்டு உன்னிடம் கொடுக்கிறேன் என்று தன் காதில் கொடுத்தபடி பேச ஆரம்பித்தான் வருண

அப்பொழுது தன் தம்பியை கோபமாக முறைத்துக்கொண்டு இருந்த ழையாவைப் பார்த்த வருண், தான் போனை அவளிடம் இருந்து பறித்ததற்கு அவள் முறைக்கவும், திரும்பி நின்று கொண்டு தன் பேச்சை தொடர்ந்தான்.

அவர்கள் இருவரின் செயல்களை பார்த்து கொண்டிருந்தான் மஹிந்த், ழையா அவளின் தம்பியை பார்த்து முறைத்ததைப் பார்த்ததும் அவன் எஸ்கேப் ஆவதற்காக மறுபுறம் திரும்பிநின்றதை கண்டவனுக்கு அவலுடன் வம்பிழுக்க ஆசை வந்தது. அவளின் பளிச்சிட்ட இடையின் மென்மையை உணர அவன் கை துருதுருத்தது. அவள் தன் தம்பியின் முதுகைப் பார்த்து இன்னும் முறைத்துகொண்டிருந்த நேரத்தில் அவள் இடையில் மென்மையாக கிள்ளினான் மஹிந்தன்.

அவள் துள்ளிப்போய் தள்ளிநின்றதும், ஆட்சேபனை செய்யும்படியான பார்வை பார்த்துக்கொண்டே அவளின் அருகில் சென்றான். பின் உன் அப்பாவிடம் பேசுவது போல் என்னிடமும் இணக்கமாக பேசமாட்டாயா பேபி என்று கெஞ்சும் குரலில் கேட்டான்

அவனின் இறைஞ்சும் குரலில் ஓர் நிமிடம் ஸ்தம்பித்து நின்றவளை, அனைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து நான் வெளியில் போகவேண்டி உள்ளது. நீ, நான் வருவதற்கு காத்திருக்காமல் சாப்பிட்டுத் தூங்கு என்றான். அப்பொழுது போனில் பேசிக்கொண்டு இருந்த வருண் அக்கா, “அப்பாவை ஆஸ்பிட்டலில் செக்கப்புக்கு கூட்டிப்போகனும்” அதனால் நான் கிளம்பறேன் என்றான்.

தன் தம்பி திரும்பி பார்த்தவுடனே, இன்னைக்கு செக்கப்புக்கு போகணுமே நான் பார் எனக்கிருந்த குழப்பத்தில் மறந்தேபோயிட்டேன் என்றாள்.

அப்பொழுது, வருண்! நீ எதில் வந்தாய் என்று கேட்டான் மஹிந். அதற்கு வருண் கால்டாக்ஸியில் வந்தேன் என்று கூறினான்.உடனே வா நான் உன்னை டிராப்பண்ணுறேன் என்றான்.பின், ழையாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே நான்வெளியே போய்விட்டு சீக்கிரம் வர ட்ரை பண்றேன், பாப்பாக்கு தனியாக இருக்க பயம் ஒன்றும் இல்லையே என்று கண்களால் சிரித்துக் கொண்டே கேட்டான்.

அவன் தன்னை பாப்பா என்று சீண்டவும்.கோபத்துடன் தன் தம்பி இருப்பதையும் பொருட்படுத்தாமல் நான் ஒண்ணும் பாப்பா கிடையாது உங்கள் தொல்லையிலாமல் இருந்தாலே எனக்கு போதும் என்று கடுப்புடன் கூறினாள்.

தன் அக்கா அவனுடன், வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கட்டுவதையும் அதற்கு மஹிந்தன் கோபப்படாமல் திரும்ப வம்பிழுப்பதை பார்த்த வருணுக்கு , வேண்டுமென்றே அக்காவிடம் வீட்டில் தான் வம்பிழுப்பதை நினைத்துப் பார்த்தான்.

பின் புன்னகையுடன் ஓகே அக்கா. நீ வீராங்கனை என்று நான் சாரிடம் கூறுகிறேன் இப்பொழுது எனக்கு நேரம் ஆகிவிட்டதால் நான் கிளம்புகிறேன் என்றதும், மஹிந்தன், வருண்! என்னை சார் என்று கூப்பிடாதே, நான் உன் அக்காவின் கணவன் சோ! மாமா என்று கூப்பிடு என்றான்

பின் ழையாவிடம் பேபி ஐ ஹேவ் சம் அர்ஜென்ட் வொர்க் சோ ஐ ஆல்சோ லீவ் நவ் என்றவன் வருண் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ழையா எதிர்பார்காத நேரத்தில் அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அவள் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்து திட்டுவதற்குள், வருண் வா! ‘ஓடிப் போய்டலாம்” என்று குறும்புடன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு வருனுடன் வெளியேறினான்

ழையாவிற்கு வருண் முன் அவனின் செயல் சங்கடமாகவும் கோபமாகவும் இருந்தது. இருந்தாலும் அவளின் மனதின் ஓரம் மஹிந்தனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது அதனால் அவளுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.

தான் பலவீனமானவளோ! என்ற எண்ணம் ஏற்பட்டது.அவன்தான் தனக்கு அநியாயம் செய்தவன் என்பதனை மறந்து இப்பொழுது அவன் மயக்கப் பார்பதை அறிந்தும் தன்னால் ஏன் அவனிடம் சில நேரங்களில் மயங்காமல் இருக்க முடியவில்லை, என்ற கேள்விக்கு விடையை தேடினாள். விபரீதமான விடையாக கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தபடி அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

வெளியில் இருந்த காரில் கதிர் மஹிந்தனுக்காக் காத்து இருந்த போது வருனுடன் சிரித்த முகமாக வந்து அமர்ந்த மஹிந்தனை பார்த்த போது கதிருக்கு ஆச்சரியமாக் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.