(Reading time: 12 - 24 minutes)

08. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

காலை நேரம் நன்றாகத்தான் விடிந்தது........ஆனால் பூஜாவிர்கல்ல!!!!! பூஜா கண் விழித்த பொழுது தனது சோபாவில், அதுவும் பக்கத்தில் இந்தருடன்...........

ஒரு வினாடி கண்ணெல்லாம் இருண்டது பூஜாவிற்கு......... தனது இதய துடிப்பை தானே கேட்பது வாழ்க்கையில் முதல் முறையானது.........

சுவிஸ் கிளம்பும் பொழுது அம்மா சொன்ன அறிவுரை எல்லாம் நியாபகம் வந்தது........ அனாவசியமாக அடுத்த ஆண்களுடன் பேச கூடாது, பழக கூடாது...... ஒரு வினாடிக்குள் என்னவெல்லாமோ தலைக்குள் சுழன்றது........

அடுத்த வினாடி டக்கென எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள் பூஜா.......

நேராக பால்கனிக்கு சென்று அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தாள். தலை விண், விண்ணென தெரித்தது. கண்களில் நீர் அருவியாக கொட்டியது....... ஏன் இப்படி என்ற கேள்வியே தலைக்குள் சுற்றி, சுற்றி வந்தது. நேற்று விழாவில் சாராவின் தோழி அவளிடம் கொடுத்த அந்த ஆரஞ் கிரஷை குடித்த பின் தான் லேசாக தலை சுற்றியது நியாபகம் வந்தது........

யோசிக்கும் நிலையில் இல்லை எனினும், நேற்று நடந்தது லேசாக நினைவு வந்தது....... கட்டிலில் இந்தர் தன்னை படுக்க வைத்தது நியாபகம் வந்தது....... ஆனால் இப்பொழுது எப்படி சோபாவில் அதுவும் இந்தர் அருகில் ???????

டக்கென எழுந்து வந்ததிலிருந்தே, இந்தர் சோபாவின் உள் பக்கமும் , தான் வெளி பக்கமும் இருந்தது புரிந்தது பூஜாவிற்கு.......... அப்படி என்றால் அவன் வந்து அவள் அருகில் படுக்கவில்லை!!!!!!  தான், தான் அவன் அருகில் சென்று படுத்து இருக்க வேண்டும். எப்பொழுதும் சோபாவில் படுக்கும் பழக்கத்தில், இரவு எழுந்த பொழுது அங்கு சென்று படுத்திருக்க வேண்டும் என புரிந்தது........

ஆனால் இதை எப்படி இந்தருக்கு புரிய வைப்பது?????? என்ற இமாலய கேள்வி எழுந்தது பூஜாவின் மனதில்......... அவன் தன்னை பற்றி என்ன நினைப்பான்?.......... குடிப்பவள், ஒழுக்கமில்லாதவள் என  மிக கேவலமாக கூட நினைக்க முடியும்.........

பூஜாவிற்கு சுவிஸ்ஸில் இருந்தாலும், சகாரா பாலைவனத்தின் நடுவே தனியாக இருப்பது போல் உணர்ந்தாள்........  யோசித்து, யோசித்து தலை வலி தான் அதிகமானதே தவிர, உருப்படியாக எதுவும் தோன்றவில்லை.....

இந்தர் கண்விழித்த பொழுது, பூஜா தன் அருகில் படுத்திருப்பதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்தான். அவனால் எழுந்து கொள்ளவும் முடியவில்லை. இப்பொழுது தானே அவளை எழுப்பினால் அவளுக்கு தர்ம சங்கடமாக இருக்கும் என எண்ணி பேசாமல் படுத்திருந்தான். இத்தனை நாள் பூஜாவுடன் பழகியதில், அவளை பற்றி நன்கு தெரயுமாதலால்,  இதை அவள் எப்படி எடுத்து கொண்டு மனம் வருந்துவாள் என புரிந்து, பேசாமல் கண் மூடி படுத்திருந்தான்........

சிறிது நேரத்தில் பூஜா ளஐந்து சென்றதும், ஐந்து நிமிடம் கண் மூடி படுத்திருந்தான்......... என்ன சொல்லி பூஜாவை தேற்றுவது என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்தான்........

அவன் சோபாவை  விட்டு எழுந்த பொழுது அவனது போன் பாட்டு பாடி அவனை அழைத்தது. போன் திரையை பார்த்த பொழுது அவனது சித்தப்பா கதிர் அழைப்பது தெரிந்தது.........

“ஹலோ சித்தப்பா”.........

“எங்க இருக்க இந்தர்”...........

“என்னோட பிரண்ட் வீட்டில் சித்தப்பா”.........

“என்ன இந்தர், மறந்துட்டியா? இன்று World Bank, மேனேஜரிடம், உன்னோட லோன் விஷயமா பேச அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு. எப்போ வர்ற?”

“ஸ்ஸ்ஸ் ........ சாரி சித்தப்பா, இன்னும் பதினைந்து நிமிடத்தில் நம்ம வீட்டில் ரெடியா இருப்பேன். இப்போ வந்துட்டே இருக்கேன்”....... என கூறி போனை வைத்தான் இந்தர்........

எழுந்து ஹாலில் சென்று பார்த்த பொழுது பூஜா அங்கே இல்லை...... அடுத்து எங்கு சென்றிருப்பாள் என யோசித்த பொழுது பால்கனி கதவு திறந்திருப்பது கண்டு அங்கு சென்றான்.......

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கால்களை மடக்கி, அதில் முகம் புதைத்து, பூஜா அழுது கொண்டிருந்தது கண்டு, இந்தருக்கு, அவளை உடனே, அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தது. 

அவள் அருகே சென்று, “பூஜா, என அழைத்த பொழுது அவளது அழுகை இன்னும் அதிகமானது.........

அவளை சமாதான படுத்த இது சரியான சமயம் இல்லை, நேரமும் இல்லை, என நினைத்து , “பூஜா, இப்போ முக்கியமான வேலை இருக்குடா, நான் போய்ட்டு வந்தவுடன், நாம பேசலாம். ஓகேவா, ரிலாக்ஸ் நவ்” என கூறி அவளை பார்த்து கொண்டிருந்தான்.

ஆனால் அவள் தலை நிமிர கூட இல்லை........ அவளது அழுகையும் நின்றபாடாய் இல்லை. சரி கொஞ்சம் டைம் கொடுத்தால், சரியாகிவிடுவாள், என யோசித்து, “Bye பூஜா” என கூறி விடைபெற்றான் இந்தர்.........

வீட்டிற்க்கு வந்தவுடன் குளித்து கிளம்பி, டைனிங் ஹாலுக்கு வந்த பொழுது சித்தப்பா கதிர் அவனுக்காக அங்கு காத்திருந்தார்........

“சாரி சித்தப்பா” என இந்தர் ஆரம்பித்த பொழுதே.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.