(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 01 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

இது என்னுடைய முதல் தொடர் கதை. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்ற புதுமணத்தம்பதிகளை  பார்த்து புன்னகைத்தார்  ராஜூ என்ற ராஜசேகர் தாத்தா. மகன் வயிற்று பேரனுக்கும் மகள் வயிற்று பேத்திக்கும்  திருமணம் செய்து வைத்து விட்டு நிம்மதியாய்  அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்

கார்த்திகேயன் வயது 27. பொறியியல் படிப்பு முடித்து விட்டு சென்னையில் ஒரு உயர்ந்த ஐ டீ கம்பெனியில் உயர் பதவியில் இருக்கிறான்.  அவனுடைய எண்ணமே சீக்கிரம் அமெரிக்கா  செல்ல வேண்டும் என்பது தான்.

கீர்த்தனா  பீ ஈ மூன்றாம் ஆண்டு சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில்  படித்து கொண்டிருப்பவள்.

அவரின் சிரிப்பை பார்த்து கோபம் அதிகமாக தான் கூடியது இருவருக்கும்

கிழவா  கடைசியில் சாதித்து விட்டாய் . என்னை தோற்கடித்து விட்டாய் என்று சிரிக்கிறாயா இரு உனக்கு இருக்கிறது  என்று மனதில்  கார்த்திக் நினைத்த வேளையில்  கீர்த்தனா  மனதில்  தோன்றியது டேய்  ராஜூ   என்னை பற்றி  முழுவதும்  உனக்கு தெரிந்திருந்தும் இப்படி ஒரு வேலையை செய்து விட்டு சிரிப்பு வேற உனக்கு வருதோ. இரு இரு இதுக்கு எல்லாம் சேர்த்து இந்த கீர்த்தனா  கிட்ட நீ  அனுபவிப்ப  ராஜூ அப்ப  நான் சிரிக்குறேன் உன்னை பார்த்து என்று நினைத்து விட்டு அவனை பார்த்து எல்லாம் இவனால் வந்தது.

இப்போது இவனை யாரு வெளிநாட்டுக்கு போக போறணு சொல்ல சொன்னது அதனால் தான் இப்படி கல்யாணத்தில் வந்து முடிந்து விட்டது. அவனை முறைத்தாள். அவன் அவளை கண்டு கொண்டால்  தானே. அவன் பார்வை எல்லாம் அந்த கிழவனிடமே இருந்தது.

அலையலையான கேசத்துடன் அழுத்தமான உதடுகளுடன் கூர் நாசியுடன் கூர்மையான கண்களுடன் இருந்தான் அவன்.கருப்பு என்று இல்லாமல் கலர் என்றும் சொல்லும் படி  இல்லாமல் தமிழ் நாட்டுக்கே உரிய நிறத்தில்  ஆண்மையின் இலக்கணமாய் இருந்தான் அவன். பார்ப்பதற்க்கு  அழகாக  இருந்து என்ன செய்வது  உலகத்தில் இருக்கும்  மொத்த திமிரும்  இவனிடம்  தான் இருக்கிறது  என்று பெருமூச்சு விட்டாள்  கீர்த்தனா

ஆனால் இதே திமிரு  தான் அவளை அவன் பால் ஈர்த்ததும். அவனிடம் பிடித்ததே  அவனுடைய  கண்களும் இந்த திமிரும்  தான்.

நான் இவன் மேல கோபத்தில்  இருக்கிறேன் ஆனால்  அதை செய்யாமல்  அவனை ரசித்து  வேற பார்த்துட்டு இருக்கிறேன்  கீர்த்தி மயங்காத பி  ஸ்டெடீ  என்று தனக்குள் சொல்லி கொண்டு நடப்புக்கு வந்தாள்

சுற்றி நின்ற தன்  தந்தை பவித்ரன் மற்றும்  தாய் பொன்மணியையும் பார்த்தாள்  அவர்கள் முகம் ஆனந்தத்தில் நிறைந்து இருந்தது. அவர்கள் பக்கத்தில் நின்ற தன் மாமா  கார்த்திக்கேயனுடைய  அப்பா தற்போதைய மாமனார் மாமியார்  மாணிக்கவாசகத்தையும்  மல்லிகாவையும்  பார்த்தாள் .அவர்கள் பீதியில் இருந்தனர்.

மறுபடியும் தன்னவனின் முகம் பார்த்தாள்  அதில் இப்போதும் கோபம் மட்டுமே எஞ்சி இருந்தது.

ஏன் டா  கருவாயா(இவளுடைய நிறத்தை பார்த்தால் அவன் கொஞ்சம் கருப்பு தான்) இத்தனை  அழகான சரி சரி ரொம்ப இல்ல கொஞ்சமே கொஞ்சம் அழகான என்னை  கல்யாணம் பண்ணிக்க உனக்கு இத்தனை  வருத்தமா. பிடிக்காத கல்யாணமாம் அதனால்  முகத்தை  தூக்கி வைத்திருக்கிறான் . நீயும் மாறுவாய்  அப்போது உன்னை கவனித்து கொள்கிறேன் ராசா. கடைசியில் தாத்தாவின்  முகம் பார்த்தாள்  கீர்த்தனா . அப்போதும் அவர் சிரித்த படி  தான் இருந்தார்.

அங்கு நிலவிய மௌனம் தாங்காமல் அவன் தான் ஆரம்பித்தான். இப்ப உங்க எல்லாருக்கும் நிம்மதி தானே , சந்தோசமா, மனதிற்க்கு  குழு குழு என்று  இருக்குமே எனக்கும் அது தானே வேண்டும் . இன்னும் வேற ஒண்ணும் பாக்கி இல்லை தானே  நான் என் அறைக்கு போகலாமா

இல்லை மறுவீடு  என்று ஆரம்பித்த தன்  அத்தையை பார்த்தான் கார்த்திகேயன். மணி அத்தை  எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை  கஸ்ட  படுத்த விரும்ப வில்லை .ஆனாலும் என்னால்  சொல்லாமல்  இருக்க முடியவில்லை . இந்த கல்யாணம் எந்த நிலைமையில்  நடந்தது என்று  உங்களுக்கு தெரியும்.எல்லாருக்கும் தெரியும். அதனால உங்களோட சடங்கு எல்லாவற்றையும் என்னிடம் எதிர் பார்க்காதீர்கள் நீங்களாவது என்னை புரிந்து கொள்ளுங்கள் அத்தை.

சரி மாப்பிளை

இது என்னை கூட கொஞ்சம் தான் காயபடுத்துது  இத்தனை நாள் எப்படி அழைத்தீர்களோ அப்படியே அழையுங்கள். அவர் சரி என்றதும் அனைவரின் முகத்தையும் ஒரு தடவை முறைத்து பார்த்தவன் கடைசியாக அவளை  முறைத்து விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.