(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 04 - தேவி

vizhikalile kadhal vizha

ரவு வெகு நேரம் முழித்து இருந்தாலும் செழியன் அதிகாலையில் விழித்து விடுவான். அவன் அருகில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கிறான். படிப்பதில் ஆர்வம் உள்ள மாணவர்கள், வெளியில் டியூஷன் செல்ல முடியாத பிள்ளைகளுக்காக இதை செய்கிறான்.

செழியனும் அரசு பள்ளியில் படித்தவன் தான். ப்ரைமரி ஸ்கூல் வரை மெட்ரிக் பள்ளியில் படித்தவன், ஹை ஸ்கூல் அரசு பள்ளியில் படித்தான். +2 வில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவன். தற்போது வேலை பார்க்கும் கல்லூரியில் தான் அவன் படித்ததும் கூட. திருச்சியில் பிரசித்தி பெற்ற இக்கல்லூரியில் இவன் விண்ணப்பித்ததும் முதல் allotment அவனுக்கு கிடைத்தது.

அங்கேயே முதுகலை பட்டம் பெற்று, அவன் பேராசிரியராக விருப்பம் தெரிவித்த போது அந்த கல்லூரியிலே வேலையும் கொடுத்தார்கள். மாணவனாக இருந்த போது தலைவன் ஆக இருந்ததால் எல்லா பேராசிரியர்களுக்கும் அவனை பழக்கம் உண்டு. அவனே அவர்களில் ஒருவனாக மாறவும் இன்னும் வசதியாக அதே சமயம் ஒரு ஒட்டுதலோடு இருந்தார்கள்.

அதே சமயம் அங்கேயே படித்தவன் என்பதால், மாணவர்கள் குண நலன்கள் எல்லாம் புரிந்து அதற்கேற்ப அவர்களை வளைக்கும் திறனும் பெற்று இருந்தான். எல்லோருமே அவனின் சொல்லுக்கு கட்டு படுவார்கள். அதனால் தான் முந்தைய தினம் மலர் வண்டி சாவியை வாங்கி வைத்துக் கொண்டு ராகிங் செய்தவர்கள் , அவனின் ஒரு பார்வையில் அதை கொடுத்து விட்டார்கள்,

மலர் அந்த ராகிங் விஷயத்தை sportive ஆக எடுத்துக் கொண்டதை வைத்து செழியனுக்கு  அவள் மேல் நல்ல அபிப்ராயம் வந்தது.

அடுத்த நாளும் கல்லூரியில் அங்கே அங்கே சில இடங்களில் மாணவர்கள் கும்பலாக இருந்தாலும் , முந்தைய தினத்தை விட குறைவாகவே இருந்தார்கள்.

மலரின் ஸ்கூட்டி வரும் அதே நேரம், செழியனும் புல்லேடில் வந்தான். இருவரும் பார்கிங் பகுதியில் அடுத்து அடுத்து வண்டியை நிறுத்தினர்.

நேற்றை போல் இன்றும் மலர் தன் ஹெல்மெட் கிளாஸ் ஏற்றி, செழியனை பார்த்து சிரித்தாள். அவள் சிரிப்பது அவளின் கண்களின் மூலம் அறிந்து கொண்டான். மையிட்ட அந்த விழிகளில் தெரிந்த மலர்ச்சி அவள் சிரிப்பை காட்டியது. அந்த பாவனைகளில் மயங்கியவன், இருக்கும் இடம் அறிந்து சுதாரித்துக் கொண்டான்.

வழக்கம் போலே தன்னுடைய கவச குண்டலங்களை அவள் கழற்றி பாக்சில் வைத்து விட்டு, ஹெல்மெட் லாக் போட்டு வரவும், செழியன் சிரித்துக் கொண்டே

 “குட் மோர்னிங் மலர் மேடம்..” என,

“குட் மோர்னிங் சார்..” என்றாள் பதிலாக..

“நேற்றே கேட்க நினைத்தேன் ... ஸ்கூட்டி பெப் வண்டியில் நிறைய டிசைன் பார்த்து இருக்கேன்.. பூ, பெயிண்ட்டிங் என்று... புது விதமா டோரா, டெட்டி பியர் எல்லாம் ஒட்டிருக்கே... இன்னும் நீங்க கிண்டர் கார்டன் லெவலேர்ந்து வெளியிலே வரவே இல்லை போலே..”

“சார்.. நீங்க வேற ... அப்பா எனக்கு புது வண்டி வாங்க ஷோ ரூம் கூட்டி போகும் போது எங்க பக்கத்து வீட்டு குட்டியும் கூட்டிட்டு போய்டேன்.. அந்த குட்டி அங்கே ஷோ ரூம் லே பூ பெயிண்ட் பண்ண வண்டி எல்லாம் பார்த்துட்டு . எனக்கு டோரா வண்டி தான் வேணும் நு அங்கே வச்சு ஒரே அழுகை.. எவ்ளோ சமதானபடுதினாலும் முடியல.. அப்புறம் ஷோ ரூம் லே உள்ளவங்க இந்த மாதிரி ஸ்டிக்கர் வாங்கி ஒட்டி விட்டுடாங்க.. குட்டி வேற பக்கத்து வீட்லேயே இருக்காளா .. என்னாலே அந்த ஸ்டிக்கர்ஸ் எடுக்கவும் முடியல.. டெய்லி வந்து செக் பண்ணிட்டு போயிட்டு இருக்கா.. இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு இந்த ஸ்டிக்கர் எல்லாம் எடுத்து விடனும்.”

“ஹ்ம்ம்..  ஏதோ பெரிய adventrure கதை மாதிரி இருக்கும்ன்னு நினைச்சேன் ... நீங்க என்னடா என்றால் சோட்டா பீம் கதை சொல்றீங்க.. ஆனால் எனக்கு ஒரே ஒரு டவுட் தான்.. அங்கே கடையிலே அழுதது பக்கத்து வீட்டு குட்டியா .. இல்ல நீங்க தானன்னு ..” என இழுக்கவும்

“சார்..” என்று சிணுங்கினாள்..

அவளின் சிணுங்களில் சிதறியவன், பின் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே

“இட்ஸ்.. ஜஸ்ட் ஜோக்.. டோண்ட் டேக் சீரியஸ் “ என

மலரும் சிரித்துக் கொண்டே “இட்ஸ் ஓகே சார்..” சொன்னாள்.

பேசிக் கொண்டே இவர்கள் இருவரும் staff ரூம் சென்று விட, அன்றைய வேலையை தொடர்ந்தனர். இருவரும் தங்கள் வகுப்புகளுக்கு பாடம் எடுக்க சென்றனர்.

மலர் சமீபத்தில் தான் மாணவி என்ற நிலையில் இருந்து வெளியில் வந்து இருந்ததால் அவளுக்கு மாணவர்களிடம் கண்டிப்பு என்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதனால் மாணவர்களும் அவள் வகுப்பில் கொஞ்சம் கட்டுப்பாடு இன்றி நடந்து கொண்டனர்,

மலர் இதனால் கொஞ்சம் பயம் மற்றும் தடுமாற்றம் அடைய, அதனை உணர்ந்து கொண்ட செழியன் அவளை தைரியபடுத்தி , மாணவர்களிடம் கண்டிப்பு மேற்கொள்ளும் முறையை கற்று கொடுத்தான்.. அதோடு வாரம் ஒரு நாள் அவள் எடுக்கும் வகுப்பில் அமர்ந்து டீச்சிங் observe செய்ய போவதாக சொல்லி , அமர ஆரம்பிக்க அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடு ஏற்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.