(Reading time: 9 - 18 minutes)

லரின் கிளாஸில் மாணவர்கள் கொஞ்சம் வம்பர்களாக இருந்தாலும் , அவளின் கிளாஸ் எடுக்கும் விதம் அவர்களுக்கு பிடிக்கவே. பிறகு நார்மல் ஆகி விட்டது.

இப்படியே நாட்கள் நகர ,அன்றோடு காலேஜ் தொடங்கி ஒரு மாதம் முடிந்து இருந்தது. மலருக்கு அன்று முதல் சம்பளம்..

விருப்பமான வேலையோடு, அதற்கு சன்மானமும் பெறும்போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இராது.. மலரும் அன்று அப்படி தான் இருந்தாள்.

மாலை வீட்டிற்குள் சென்றவள் ,

“ஆச்சி .. இந்தா பிடி .. “ என்று ஒரு கவரை கொடுக்க,

“என்ன புள்ள இது ?” என்றார் ஆச்சி.

“தொறந்து பாரு ஆச்சி,..” என, அவர் திறக்க உள்ளே பணம் இருந்தது..

“என்ன கண்ணு இது..?”

“என்னோட மொத சம்பளம் ஆச்சி...” என்றவள், சுந்தரத்தின் காலில் விழுந்து , “என்னை ஆசீர்வாதம் பண்ணு” என,

“நல்லா இரு கண்ணு.. சீக்கிரம் உனக்கு கண்ணாலம் நடக்கணும்.. அதை இந்த சுந்தரம் பார்க்கணும்.. அதான் என் ஆசை , ஆசீர்வாதம் “

“போ.. ஆச்சி.. இப்போ தான் வேலைக்கே போக ஆரம்பிச்சு இருக்கேன்.. அதுக்குள்ளே.. கல்யாணம் எல்லாம் கிடையாது..” என்று மூஞ்சை தூக்கி வைக்கும் போதே, அவள் அப்பா, அம்மா வர

“என்னம்மா... முதல் சம்பளம் வாங்கிட்டியா?” என்று வினவ,

தன் கோபம் மறந்தவளாக “ ஆமாம் அப்பா.. இதோ “ என்று பாட்டியிடம் இருந்து வாங்கி அவரிடம் கொடுத்தவள் ,

“அம்மா, அப்பா ரெண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என,

“நல்லா இரு தங்கம்,.. இன்னிக்கு போலே என்னிக்கும் சந்தோஷமா இருக்கணும்.. “ என,

“ஆச்சி.. பார்த்துக்கோ ... இப்படி சொல்லணும்.. அதை விட்டு ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருக்க “ என்று பழிப்பு காட்டியவள்,

தன் அப்பாவிடம் திரும்பி “அப்பா இன்னிக்கு டின்னெர்க்கு எல்லோரும் ஹோட்டல் போகலாம் பா .. ப்ளீஸ் “ என்று கேட்க,

அவர் தன் அம்மாவை பார்த்தார். அதை பார்த்தவுடன் வள்ளி தன் முகத்தை தோளில் இடித்துக் கொண்டார். புள்ள கேட்டா கூட்டிட்டு போக வேண்டியது தானே.. நாம எங்கே போகணும், வரணும் நு எல்லாமே இந்த மனுஷனுக்கு அம்மா தான் சொல்லணும்.. என்று முணுமுணுக்க,

சுந்தரமோ “என்னத்த அங்க முனுமுனுக்கரவ...? என் புள்ள என்னை கேட்காம பொறவு ஊர்லே உள்ளவனையா கேப்பான்...? “ என்று ஆரம்பிக்க,

வேலனோ வள்ளியை பார்த்து முறைக்க அவர் உள்ளே சென்று விட்டார். அவர் உள்ளே செல்லவும்,

“நீ உங்கப்பன், ஆத்தாவோடு போயிட்டு வா கண்ணு..”  என,

“ஆச்சி.. நீயும் வா... உன்னையும் சேர்த்துதான் கூட்டிட்டு போறேன்..”

“நான் எதுக்கு ஆத்தா அங்கே எல்லாம்..? எனக்கு அந்த டிவி பொட்டிலே காண்பிக்கிற மாதிரி சாப்பிட கூட தெரியாது.. அங்கே வந்தா கஷ்டம் புள்ள”

“அது எல்லாம் ஒன்னும் கிடையாது.. நீ கையால சாப்பிடற மாதிரி ஆர்டர் கொடுக்கலாம்.. வா..” என்று கெஞ்ச,

ஒருவழியாக எல்லோரும் கிளம்பி ஹோட்டல் சென்றனர். இவர்கள் வீட்டில் அம்பாசிடர் கார் தான்.. ஆனால் நல்ல கண்டிஷன் இருக்கும்.. வேலன் சம்பாதிச்சு முதல் முதலாக வாங்கிய கார்.. காருக்கும் மலருக்கும் சில வருட இடைவெளியே.. அதனால் அவருக்கு அதுவும் வீட்டு உறுப்பினரே.. முறையாக சர்வீஸ் செய்து maintain செய்வார்.

நல்ல restarunt சென்று அமர்ந்தனர். அங்கே அங்கே ஸ்பூனால் சாப்பிடுபவர்கள் இருந்தாலும் , கையால் சாப்பிடுவரும் இருக்க, சுந்தரத்திற்கு சற்று சாதாரணமாக இருக்க முடிந்தது.

மெனு கார்டு படித்து கொண்டு இருந்த மலர்,

“ஆச்சி .. என்ன சாப்பிடுதீக?” என்று வினவ.

அவரோ “ குழாய் புட்டு ... “ என,

“அது இல்ல ஆச்சி..”

“அதோ அந்த படத்துலே போட்ருக்கானே . கண்ணு :என்று காண்பிக்க ,

நோர்த் இந்தியன், சவுத் இந்தியன் உணவு வகைகள் கிடைக்கும் ஹோட்டல் அது.. அங்கே அலங்காரத்திற்காக மாட்டி இருந்த டோக்ளா படத்தை பார்த்து விட்டு அவர் குழா புட்டு என, மலரும், வள்ளியும் சிரிக்க, வேலனோ சிரிக்க முடியாமல் நெளிந்தார்.

பின்னர்  இப்போ எல்லா பெரிய கடைகளிலும் எல்லா உணவு வகைகளும் கிடைக்கும் என்றாலும், சில வகைகள் ஸ்பெஷல் என்று குறிப்பிட்ட நாட்களில் தான் கொடுப்பார்கள் என,

“நான் என்னத்த கண்டேன்... அந்த படத்த பார்த்துட்டு கேகேன்.. அதுக்கு இந்த சிரிப்பாணி யா உங்க ரெண்டு பேருக்கும் “ என்று சற்று வேகமாக பேச,  அடங்கினர் இருவரும்..

பிறகு “ஆச்சி.. உங்களுக்கு ஆப்பம் சொல்லவா ?” என்று கேட்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.