(Reading time: 9 - 18 minutes)

சொல்லு த்தா.. “ என்றார்.

“அப்பா முதலில் ஸ்வீட் ஆர்டர் பண்ணுங்க..” என, அவரும் எல்லோருக்கும் பாசந்தி ஆர்டர் செய்தார்.

அப்போது இவர்கள் அருகே வந்த செழியனை பார்த்த மலர் ,

“ஹலோ சார்..  உங்கள இப்போ பார்ப்போம்னு நினைக்கல” என்று  கண்களை விரிக்க , வழக்கம் போலே அந்த விழிகளில் விழுந்தவன் , சுதாரிக்கும் முன் மலர் மீண்டும் சார் என்று அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்தவன்

“ஹலோ மேடம்.. நானும் உங்கள எதிர்பார்க்கல... “

“சார்.. இங்கயும் வந்து மேடம் ஆ.. மலர் சொல்லுங்க சார்.. “

“ஓகே.. மலர்... நீங்களும் சார் எல்லாம் காலேஜ்லேயே விட்டுட்டு செழியன்நு கூப்பிடுங்க..” என

மலரும் எந்த பிகுவும் இல்லாமல் “ ஓகே.. செழியன்.. “ என்றவள் , பின் திரும்பி “செழியன்.. எங்க அப்பா, அம்மா, ஆச்சி.. “என்று அறிமுகபடுத்தி விட்டு,

“அப்பா நான் சொல்வேன் லே..  செழியன் சார் என்று அவருக்கும் அறிமுகபடுத்தினாள்..

“வணக்கம் சார்.. உங்கள பத்தி மலர் நிறைய சொல்லிருக்கா..” என,

“வணக்கம் அங்கிள்.. சார் எல்லாம் வேண்டாம்.. நீங்க செழியன் என்றே கூப்பிடுங்க..” என்றவன்.. திரும்பி “வணக்கம் ஆன்டி, வணக்கம் பாட்டி “ என்று அவர்களுக்கும் வணக்கம் வைக்க, இருவரும் பதிலுக்கு வணங்கினர்.

மலரிடம் திரும்பி “என்ன மலர்.. எதுவும் விசேஷமா..? வீட்டிலே எல்லோரும் வந்து இருக்கீங்க..?” என்று வினாவ,

“அது எல்லாம் இல்லை செழியன்.. இன்றைக்கு எனக்கு முதல் சம்பளம் .. அதான் சின்னதா ஒரு ட்ரீட் கொடுக்கலாம் “

“ஆமாமா... நான் எவனிங் சீக்கிரம் போயிட்டேன்.. அதுதான் எனக்கு காலேஜ்லே வச்சு தெரியலே.. கன்க்ராட்ஸ் மலர்.. இதே மாதிரி என்னிக்கும் சந்தோஷம்மா இருக்கணும்.. “ என்று வாழ்த்தினான்..

அவனுக்கு நன்றி கூறினாள் மலர்.

“சரி எனக்கு எல்லாம் ட்ரீட் கிடையாதா” என ,

மலரின் அப்பாவே “நீங்களும் எங்களோட join பண்ணிக்குங்க செழியன் “ என்று அழைப்பு விடுத்தார்..

“இல்லை அங்கிள்.. இது உங்க பாமிலி டைம்.. உங்கள disturb பண்ண விரும்பல.. நீங்க continu பண்ணுங்க”

“இருக்கட்டும் செழியன்.. இதோ ஸ்வீட் வந்து இருக்கு .. அது மட்டுமாவது எடுத்துக்கோங்க..” என

செழியனும் அவர்களோடு அமர்ந்து ஸ்வீட் சாப்பிட்டு கிளம்பினான்..

“கிளம்பறேன் அங்கிள்... வரேன் பாட்டி.. “ என்றவன் “தேங்க்ஸ் for திஸ் ட்ரீட் மலர்.. have எ nice டே “ என்று வாழ்த்தி விட்டு கிளம்பினான்.

அவன் கிளம்பவும் வேலனும், வள்ளியும் “நல்ல பையனா இருக்கார்.. மரியாதையா பழகுறார்...” என்று பேசிக் கொள்ள, பாட்டியின் முகம் மட்டும் ஏதோ யோசனையாக இருந்தது..

ஹலோ friends... சாரி.. இந்த கதை ஆரம்பித்து அப்டேட் ரெகுலரா கொடுக்க முடியல... vacation டைம் என்பதால் .. நினைச்ச மாதிரி டைப் பண்ண உட்கார முடியல.. ஜூன் மாசத்துலேர்ந்து ரெகுலர் அப்டேட் + கதைக்குள்ளே இன்னும் கொஞ்சம் டீப்பா கொடுக்க ஆரம்பிக்கிறேன்.. ப்ளீஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மக்களே..

தொடரும்!

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.