(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 03 - தேவி

vizhikalile kadhal vizha

ஹாய் friends..

ஒரு பிக் சாரி.. லாஸ்ட் வீக் அப்டேட் கொடுக்க முடியாததுக்கு.. கோவில் functionக்காக native போனேன்..& அங்கிருந்து அப்டேட் அனுப்ப முடியல.. அதோட அங்கியே வேற ரெண்டு functionஉம கலந்துக்கிற மாதிரி ஆயிடுச்சு... நேத்திக்கு வந்தவுடன் அப்டேட் அனுப்பிட்டேன்..

ஒரு சின்ன correction .. லாஸ்ட் எபிசொட்லே... நம்ம மலர் டீச்சர் ஓட qulaification குடுக்கும்போது MA public admin ன்னு சொல்லிருந்தேன்.. அத MSC Geology ஆ assume பண்ணிகோங்க.. கதை developலே அது ஏன்னு உங்களுக்கு புரிய வரும்..

தேங்க்ஸ் & கமெண்ட்ஸ்க்காக காத்து இருக்கிறேன்..

செழியன் மற்ற கிளாஸ்க்கும் மலரை அறிமுகபடுத்தி விட்டு , தங்கள் staff ரூம்க்கு மலரை அழைத்து சென்றான்..

அங்கே அதற்குள் ஒரு டேபிள் chair புதிதாக போடப்பட்டு , அருகே ஒரு சின்ன அலமாரியும் கொடுக்கப்பட்டு இருந்தது.

“வாங்க .. மிஸ்..மலர் விழி.. இது உங்கள் இடம்.. இனிமேல் நீங்களும் எங்களில் ஒருவர்.. உங்களுக்கு department சம்பந்தமாக எந்த விவரங்கள் வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்.. “

“ரெண்டு தேங்க்ஸ் செழியன் சார்..”

“அது என்ன ரெண்டு தேங்க்ஸ்?”

“முதல் தேங்க்ஸ் ..காலையில் அந்த பசங்களிடம் இருந்து என்னை விடுவித்ததற்கு.. “

“நோ.. மலர் மேடம்.. நீங்களே தான் அவங்கள புரிஞ்சிகிட்டீங்களே.. அப்புறம் என்ன?”\

“இருந்தாலும் கொஞ்சம் டென்ஷன் ஆனது உண்மை.. first டே காலேஜ்.. students ஆ இருந்த காலத்தில் தான் லேட் attendence அடிக்கடி வாங்கிருக்கிறேன்.. lecturer ஆனா பின்பும் அப்படி என்றால் அதுவும் முதல் நாளே என்றால் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.. அதில் இருந்து என்னை காப்பாத்திடீங்க... சோ அதுக்கு தான் தேங்க்ஸ்”

“இட்ஸ் ஓகே.. பட் இந்த லேட் attendence இனியும் தொடருமா?”

“நோ.. நோ.. அப்படி எல்லாம் இல்லை சார்.. இனிமேல் கவனமாக இருக்கிறேன்”

“வெல் .. ரெண்டாவது தேங்க்ஸ் எதுக்கு?”

“இவ்ளோ நேரம் அசராம என்னோட மொக்கையை தாங்குறதுக்கு..” என, செழியன் சிரித்து விட்டான்.

“ஹ்ம்ம்.. நல்லா பேசறீங்க..”

“சார்.. நம்ம தலைவர் சொல்ற மாதிரி நாம எல்லோரும் இந்தியன்ஸ்.. இது கூட இல்லாட்டால் எப்படி ? “

“எந்த தலைவர்? பேசறதுக்கும் இந்தியன்ஸ்க்கும் என்ன சம்பந்தம்..?”

“நம்ம தலைவர்.. என்னிக்கும் சூப்பர் ஸ்டார்.. தான்.. அவர் பாட்ஷா படத்திலே சொல்ற மாதிரி.. இந்தியன்ஸ் எல்லோரும் பேசலைன்னா தான் செத்துருவோம்.. அப்படின்னு.. நீங்க அந்த படம் பார்க்கலையா?

“பார்த்துருக்கேன் மேடம்.. ஆனால் உங்கள மாதிரி எங்க பஞ்ச் வச்சு பேசுறதுன்னு எனக்கு தான் தெரியல..”

“விடுங்க சார்.. இது எல்லாம் தனி திறமை.. “

“சப்பா... உங்ககிட்ட படிக்க போற students நினைச்சா பாவம் தான்..”

“இருந்தாலும் என்னை நீங்க இவ்ளோ புகழ கூடாது சார்..”

“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான் மேடம்..”

“சார்.. மேடம் எல்லாம் வேண்டாமே.. மலர் என்றே கூப்பிடுங்க..”

“நோ.. நோ.. காலேஜ்குள்ளே மேடம் நே இருக்கட்டும்.. “

“சரி சார்..”

“ஓகே.. இது நம்ம காலேஜ் syllabus.. நீங்க BSc Geology first இயர் incharge ஆகவும், மற்ற கிளாஸ்க்கு பார்ட் டைம் lecturer ஆகவும் இருங்கள்.. உங்கள் டைம் டேபிள் இன்று வந்து விடும்... இன்றைக்கு உங்கள் கிளாஸ்க்கு மட்டும் சென்று ஒரு ரெப்ரெஷ் கிளாஸ் முடித்துக் கொள்ளுங்கள்..”

“ஓகே. சார்..”

“நம்ம department lecturer குறைவு தான்.. அதனாலே நமக்கு அல்மோஸ்ட் ப்ரீ hours கிடைக்காது.. & பீல்ட் studiesஉம இருக்கும்.. நீங்க அது எல்லாமே மற்ற lecturer ஓட discuss பண்ணிக்கலாம்.”

“சரி சார்..”

செழியன் கூறியபடி அவளின் கிளாஸ்க்கு சென்று எல்லா students உம தனி தனியாக இன்ட்ரோ பார்த்து விட்டு, பின் பேருக்கு geology studies பற்றிய முன்னோட்டத்தை பாடம் எடுத்தாள்.

அன்றைய மதிய இடைவேளையில் மற்ற ஆசிரியர்களோடு கான்டீன் சென்று சாப்பிட்டு வந்தாள், மீதி பொழுது அவளின் டைம் டேபிள், syllabus பற்றிய குறிப்புகள் எடுப்பதில் கழிந்தது.

மாலையில் சற்று கூட்டம் குறையவும் தன் வண்டியை எடுக்க வந்தாள். செழியனும் அப்போதுதான் வீட்டிற்கு கிளம்ப பார்கிங் பகுதிக்கு வந்தான்..

செழியன் வரும்போது மலர் தன் கவச குண்டலங்களான புல் ஹன்ட் ஷர்ட் ஹெல்மெட் சகிதம் காட்சி அளித்தாள்.

செழியன் சிரிப்போடு “மலர் மேடம்.. இது என்ன ? எகிப்தியன் மம்மி மாதிரி கண்ணு மட்டும் விட்டுட்டு எல்லா பக்கமும் மறைச்சு இருக்கீங்க ?”

“வெயில் + pollution க்கு பயந்துதான் சார்..”

“ஏன் மேடம்.. திருச்சி லே இருந்துட்டு pollution ன்னு சொல்றீங்க.. அப்போ சென்னை எல்லாம் போனால் என்ன சொல்வீங்க?”

“ஐயோ ... அங்கே எல்லாம் ஒரு வாரம் இருந்தாலே பெரிய விஷயம்.. இங்கே தான் peacefull லைப்,, இதுதான் வேணும்.. “

“அதுவும் சரிதான்” என, பிறகு இருவரும் கிளம்பினார்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.