கிராமத்து கட்டு திட்டடோடு இருந்தாலும் ஒரே பேத்தியான மலரின் மேல் சுந்தரத்திற்கு பாசம் அதிகம்.. அதனால் தான் தன் மருமகளுக்கு கொடுக்காத சில சுதந்திரங்களை பேத்திக்கு கொடுத்து இருந்தார். அவரின் எண்ணம் எல்லாம் பொம்பளை பிள்ளை வீட்டோடு இருந்து வீட்டு நிர்வாகத்தை பார்த்துக்கணும் என்பதுதான்.
அதனால் தான் அவரின் மருமகள் வள்ளி அந்த காலத்திலே டிகிரி படித்து இருந்தாலும் , வெளி வேலைகளுக்கு எல்லாம் அனுப்ப மாட்டார். கடைகளுக்கு செல்வது கூட அவரின் மகன் வேலனோடு தான் செல்ல வேண்டும்.
தன் பேத்தி டீச்சர் வேலைக்கு செல்ல விருப்பபடுகிறாள் என்பதால் மட்டுமே அவளை படிக்கவும், வேலைக்கு செல்லவும் அனுமதித்தார். அவரை பொறுத்தவரை lecturer உம டீச்சர் வேலை. மற்ற வேலைகளுக்கு அனுப்பி இருப்பாரா என்பது சந்தேகம்தான்.
மலர்விழி மாநிறமாக இருந்தாலும் களையான முகம். வீட்டில் கவனிக்கும் விதத்தில் தற்போது உள்ள ஜீரோ சைஸ் என இல்லாமல், உயரத்திற்கேற்ற உடல் வனப்பு கொண்டவள். ஒற்றை பிள்ளையாக வளர்ந்தவள் என்பதால் குறும்பு, வாய் எல்லாமே அதிகம். அதிலும் அவளின் விழிகள் காட்டும் பாவங்கள் பார்ப்பவர் மனதை கொள்ளை அடிக்கும்.
அன்றைக்கு மிகவும் உற்சாகமான மன நிலையில் வீட்டிற்கு வந்தவனை செழியன் பெற்றோர் ஏறிட்டு பார்த்தனர், அவன் வாய் தன்னை போல் சீட்டி அடித்துக் கொண்டு இருந்தது.
விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..
இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே.
ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..
வந்து போன தேவதை... நெஞ்சை அள்ளிப் போனதே..
நெஞ்சை அள்ளிப் போனதே..
இந்த பாடலே மனதில் ஓடிக் கொண்டு இருக்க, அதுவே விசிலாக வந்தது.
“என்னாலே விசில் எல்லாம் பலமா இருக்கு ?” என்று அவன் அப்பா வினவ”
“ஒன்னும் இல்லை பா.. சும்மா தான்..” என்றபடி
“அம்மா.. நான் முகம் கை கால் கழுவிட்டு வரேன்.. நீங்க டிபன் வைங்க?” என்று நழுவி தன அறைக்கு சென்று விட்டான்.
செழியனின் வீட்டில் அவன் அப்பா சிவஞானம் அம்மா பார்வதி மட்டுமே. அவன் அப்பா சிட்டியில் இருந்தாலும், கிராமத்து நடை முறை பின்பற்றுபவர்.. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கிராமம்தான். திருச்சியில் சாதாரண மளிகை கடை ஆரம்பித்து இன்று மிகபெரிய departmental ஸ்டோர் வைத்து இருக்கிறார்,, பார்க்க சாதாரணமாக இருந்தாலும் குரலிலே கிராமத்து வாடை வீச பேசும்போது எதிரில் உள்ளவர்களுக்கு ஒரு பயம் கொடுக்கும். சொந்த ஊரில் நிலம் எல்லாம் இருந்தாலும், உறவுகளிடம் பார்த்துக் கொள்ள சொல்லுபவர் . வருடத்திற்கு ஒரு முறை ஊர் பக்கம் சென்று வந்தாலும் அடிக்கடி வந்து செல்ல முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு உண்டு.
செழியன் உரிய வயது வரும்போது அவனிடம் கடைகளை ஒப்படைத்து விட்டு , தங்கள் ஊருக்கு சென்று விட எண்ணி இருந்தார். ஆனால் அவன் proffessor ஆகவும் இங்கே இருக்கிறார். அந்த வருத்தம் அப்போ அப்போ அவரின் பேச்சில் இருக்கும். செழியன் அது மாதிரி பேசும்போது எதுவும் பதில் பேசாமல் நைசாக நழுவி விடுவான்.
செழியன் அவன் வேலை காரணமாக சற்று பொறுப்பாகவும் , கவனத்துடனும் இருப்பான். தான் மாணவர்களுக்கு ஒரு மோசமான உதாரணமாகி விடக் கூடாது என்று எண்ணுபவன். தன் வாழ்க்கை பற்றிய எண்ணங்களும் , கற்பனைகளும் உண்டு.
இன்று காலையில் மலர் அவன் எதிரில் வந்து நின்று பேசும்போது , அவளின் வார்த்தைகளை விட கண்களின் பாவனைகளில் தன்னை தொலைத்தான்.
அவன் மனதில் “ப்பா.. என்னா கண்ணுடா இது? “ என்ற வரிகள் தான் தோன்றியது.
இரவு வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்த செழியன் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து விட்டான். முதலில் மலரின் கண்கள் அவனை இம்சை செய்ய, பிறகு அவளின் குழந்தை தனமான முகம் அவனை இம்சித்தது. இந்த உணர்வு அவனுக்கு புதிதாக இருந்தது.
செழியனின் பொழுது போக்கு வரைவது. அவனின் மனதை ஆக்கிரமித்த மலரின் கண்களை தனியாகவும், பிறகு அவளின் மலர் முகத்தையும் அங்கே இருந்த சார்ட்டில் வரைந்தான். வெகு நேரம் அதை ரசித்தவன், பிறகு தூங்க சென்றான்.
தொடரும்!
{kunena_discuss:1126}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.