(Reading time: 10 - 20 minutes)

லர் வீட்டிற்குள் செல்லும்போதே வீட்டில் எல்லோரும் இருந்தனர்.

முதலில் அவளின் பாட்டி “எம்பிள்ள.. பேச்சி .. காலேசு முதல் நாளு போயிருக்கியே... ஒன்னும் சடைவு இல்லமா இருந்ததா கண்ணு.. “ என,

“ஆச்சி.. என்னை பேச்சின்னு கூப்பிடதீகன்னு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் ? “

“நான் அப்படிதான் தாயி கூப்பிடுவேன்.. நீ நல்ல படியா பொறக்கணும்நு அந்த பேச்சியம்மனுக்கு நேர்ந்துகிட்டேன் .. அதான் அந்த ஆத்தா பேரே உனக்கு வச்சேன்.. உன் அம்மா தான் நாள பின்ன இஸ்கூலிலே எல்லாரும் கேலி பண்ணுவாகன்னு இப்படி பேர் வச்சா.. அதுக்காக நானும் அப்படி கூப்பிட முடியுமா? “

“என்னை இழுக்கலேன்னா உங்களுக்கு தூக்கமே வராதா அத்தை..”

“நான் இழுத்துட்டாலும்... எல்லாம் மீனாச்சி ராஜியமாவுள்ள இருக்கு இங்கன... இல்லாட்டா என்புள்ள என் பேத்திக்கு கண்ணாலம் கட்டி குடுக்காம , சோலிக்கு அனுப்புவனா?”

“ஆச்சி .. நான் யார் என்ன சொன்னாலும் ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு தான் கல்யாணம் கட்டிக்குவேன்.. இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்... காலேஜ் எப்படி இருந்துதுன்னு தான.. நான் என்ன படிக்கவா போறேன் ? சொல்லிக் குடுக்கற வாத்தியாரம்மாவா போறேன்.. பொறவு என்ன கஷ்டம் ?” என்றாள்.

அவளின் அப்பாவோ “... கண்ணு அலைஞ்சுட்டு வாறது ஒண்ணும் தொந்தரவு இல்லமா இருக்கா .. இல்லாட்டா அப்பா கார்லே கொண்டந்து விடறேன்.”

“ஒன்னும் பிரச்சினை இல்லைப்பா.. ரொம்ப தொலைவு இல்லைதானே.. “

அவளின் அம்மா .. “மலரு .. சாப்பாடு எல்லாம் கிடைச்சுதா...நான் கட்டி தரேன் சொன்னேன் வேண்டாம்நு சொல்லிட்டியே .. தங்கம் .

“காலேஜ்லே எல்லாம் கிடைக்கும்மா.. இருந்தாலும் உங்களுக்கு முடியரப்போ கட்டி கொடுங்க... இல்லாட்டா நான் அங்கேயே சாப்ட்டுக்கறேன்..

“சரிம்மா.. கை கால் கழுவிட்டு வா.. காபி சாப்பிடலாம்..”

மலர் வரவும் வள்ளி காபி கூட அவளுக்கு மிகவும் பிடித்த கைமுறுக்கும் வைத்து கொடுத்தார். அவரை தன்னருகே அமர்த்திக் கொண்டு,

“அம்மா .. இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா?” என,

“என்ன டா...?”

“என்னை நியூ ஸ்டுடென்ட் நினைச்சு சீனியர் பசங்க எல்லாம் ராகிங் பண்ண ஆரம்பிச்டாங்க?’ என்று நடந்ததை சொன்னாள்.

“ஐயோ.. ஒன்னும் பிரச்சினை இல்லையே மலரு.. ?’

“ஒன்னும் இல்லைமா... முதலில் ஒருமாதிரி தான் பேசினாங்க.. அப்புறம் அவங்களே மாத்தி சொல்ல சொல்லிடாங்க.. சரின்னு நான் பக்கத்திலே போய் சொல்லபோனா.. அவர் இறங்கி வந்து பசங்கள ஒரு பார்வை தான் பார்த்தாரு.. தானா வண்டி சாவிய கொடுத்துட்டாங்க...”

“அவர் யாரு ?.. ஒன்னும் உன்னை தப்பா நினைக்கலியே...?”

“ அப்புறம் தான் தெரிஞ்சிது .. அவர் proffessor ன்னு.. அதுவும் எங்க department.. & நான் அவர் கீழே தான் வரேன்னு.. அப்புறம் எல்லா கிளாஸ்க்கும் அழைச்சுட்டு போய் அறிமுகபடுத்தி வச்சாரு.. என்னை ராகிங் பண்ண பசங்களும் எங்க department தான்.. என்னை பார்த்ததும் சாரி கேட்டாங்க.. “ என்றவள் மேலும் நடந்ததை சொன்னாள்.

“நல்லவேளை அந்த சார் சமயத்துலே தலையிட்டு யாருக்கும் பிரச்சினை இல்லாமல் முடிச்சார். இல்லாட்ட நீ பாட்டுக்கு கோவத்திலே நேரா பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருப்ப..  அந்த பசங்களுக்கு அது ப்ளக் மார்க் ஆகிருக்கும்..”

“ஹ்ம்ம். நான் என்ன அவ்ளோ கோவக்காரியா?” என்று சிணுங்க,

“உன்னை பத்தி எனக்கு தெரியாதா? கோவம் வந்தா மாரியாத்தா மாதிரி சாமி ஆடுவ.. அப்புறம் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு வேஷம் போடுவ... போ போ.. அப்புறம் .. உங்க ஆச்சி காதுலே இந்த ராகிங் விவகாரம் எல்லாம் தெரியாம பார்த்துக்கோ.. இல்லாட்டா ஊர்லேர்ந்து பஞ்சாயத்து பண்ண ஆள் கூட்டிட்டு வந்து உன் காலேஜ் முன்னாடி நிற்கும்... ஜாக்கிரதை..”

“அம்மா... நான் உன்னை தவிர யார்கிட்ட சொல்லுவேன்?” என்று கோபபட

“எனக்கு தெரியாதா தங்கம்,.. இருந்தாலும் நீ வேலைக்கு போகணும்னு நினைச்சினா சில பல விஷயங்கள் எல்லாம் ரகசியமா வச்சிக்கோ.. “

“சரிம்மா” என்றபடி தன் வேலையை தொடர்ந்தாள்.. அதாங்க கை முறுக்கோடு காபி குடிக்கும் வேலையை செவ்வனே செய்தாள்.

இதுதான் அவள் வீட்டினர்.. மலர் அவள் அப்பா வேலன், அம்மா வள்ளி இருவருக்கும் ஒரே பெண்.. அவளின் தாத்தா இறந்த பின்னர் ஆச்சி சுந்தரவடிவு பிள்ளையோடு தங்கி விட்டவர்.. வேலன் registrar... அவர் டிகிரி முடிக்கும் போதே அரசு வேலைக்கு விண்ணப்பித்து பணியில் அமர்ந்தவர். இதனை வருடங்களில் registrar ஆக பதவி உயர்வு பெற்றவர்.

வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் சொந்த ஊர் சென்று வருவார்கள். இப்போ சில வருடங்களாக மலரின் படிப்பு, வேலனின் வேலை இவை எல்லாம் ஒத்து வரதாதால்  சுந்தரம் மட்டுமே ஊருக்கு சென்று வருகின்றார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.