(Reading time: 17 - 34 minutes)

து கொஞ்சம் கடினமான  வேலை தான் டா  என்று சிரித்த நண்பனை முறைத்தான் கார்த்திக்.

அப்போது வீட்டு பெல் சத்தம் கேக்க இந்த நேரத்துக்கு யாரா  இருக்கும் என்று சிந்தனையொடு கதவை திறந்த வினோத் அங்கு சிந்தனையொடு புது இடம் என்ற பயத்தோடு நின்றிருந்தவளை விழுங்கி விடுவது போல பார்த்தான்.

அவனுக்கு தெரிந்தது வெண்ணிற சுடிதாரில் தேவதை போல இருந்தவளின் கண்ணாடி தான். முகம் எத்தனை  அழகு  தேவதை மாதிரி இருக்கிறது   ஆனால் மாட்டியிருக்கும் கண்ணாடியை பாரு சோடா புட்டி  மாதிரி.அவன் பார்வையில் முகம் சிவந்தவள்

எப்படி முகத்துக்கு நேர்  பார்க்கிறான் பாரு  கொல்லி கண்ணு கொல்லி கண்ணு என்று திட்டினாள்

இருவரின் யோசனையை கலைத்தது யாருடா வந்திருக்கிறது என்ற கார்த்திக்கின்  குரல்

 இங்க கார்த்திக் யாரு

நான் தான் நீங்க யாரு உங்களை  எனக்கு தெரியாதே.

அண்ணா  நான் அபர்ணா கீர்த்தியை  பார்க்க  வந்தேன் அவள்  தான் அட்ரெஸ் குடுத்தாள் . கல்யாணத்துக்கு வாழ்த்துகள் அண்ணா .

அண்ணா  என்ற அழைப்பில் அவளை ஒரு முறை பாசத்துடன் பார்த்தவன் உள்ள வா மா அவள்  மேல இருக்கா  போய் பாரு என்று அனுப்பி  வைத்தான். போகும் முன் வினோத்தை  முறைத்து விட்டு தான் சென்றாள்.

உன் பொண்டாட்டி தான் லூசுணு பார்த்தா  அவ தோழியும்  அப்படியே இருக்கா  டா

ஏன்  அவளுக்கு என்ன கண்ணாடியை பாரு சரியான சோடா புட்டி 

அதில் உனக்கு வருத்தம் ஏனோ 

அடுத்து அவர்கள் அங்கு பேசி கொண்டிருக்க மேலே தன்  தோழியை பார்த்து கட்டி கொண்டாள். வழக்கம் போல இருவரும் அரட்டையில் இறங்கினார்.

அப்புறம்  டீ  கல்யாணம் முடிந்து  இத்தனை நாள் ஆகிவிட்டது  லைஃப் ரொமன்ஸ்  தேன் நிலவு  எல்லாம் எப்படி போகிறது  என்று சீண்டினாள்  அபர்ணா.

சீ  போடீ  எனக்கு வெக்கமா  வருது .

அட பாவி  வெக்கமா  பொங்கல் லீவ்க்கு  ஊருக்கு  போகிறேனு  சொன்னவ  ரெண்டு நாள் கழிச்சு கல்யாணம் முடிந்து விட்டது என்று  சொல்ற. அழுது வடிஞ்சி இருப்ப என்று  நினைத்தேன் ஆனால் உனக்கு வெக்கம் எல்லாம் வருது.  என்ன விசயம் ம்ம் என்றாள்

இருவருக்குள்ளும் ஒழிவு மறைவு என்பதே கிடையாது என்பதால் அவளும் பேச துடங்கினாள். கல்யாணம் முடிந்த  பிறகு மாமா கோபமா தான் டி இருந்தாங்க ஆனா நைட் நைட்...

நீ  ஆயில் போட்டு விளக்காமல்  சேன்சார்  போட்டு  சொல்லு பார்ப்போம்.

ஏண்டி  சின்ன பிள்ளை என்கிட்ட போய் இந்த கதை எல்லாம் கேக்குற. எனக்கு வெக்கமா  வருது

யாரு நீ  சின்ன பிள்ளையா. நம்பும் படியா பொய்  சொல்லணும் சரியா.

அவங்களும் இதே தாண்டி சொன்னாங்க

என்ன என்று

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அம்மா அப்பா எல்லாரும் போன பிறகு என்கிட்ட வந்து நான் வினோத் கிட்ட பேசிட்டு வறேன் நீ  இரு என்று  சொன்னாங்க. நான் சின்ன பிள்ளைய  தனிய விட்டுட்டு போகாதீங்க மாமா என்று சொன்னேன் அதுக்கு யாரு  நீ  சின்ன பிள்ளையா உன்னை விட்டா  உலகத்தையே விற்று விட்டு வந்து விடுவ என்று சொல்லி விட்டு போனாங்க

சரியா தான சொல்லி இருக்காங்க  சரி சரி அந்த விசயத்துக்கு வா.

இரு டீ  சொல்கிறேன்  என் கதையை  கேக்க உனக்கு இத்தனை ஆர்வமா.சிரிக்காத  என்ன. 

சரி சிரிக்க மாட்டேன் சொல்லு 

பக்கத்துல வந்தாங்க  எனக்கு பட  பட என்று  வந்துது.என் கையை  பிடித்து  கிஸ் பண்ணிட்டு முகம்  பக்கத்தில் வந்தாங்க.  எனக்கு  வெக்கமா  இருந்தது .சரி சரி இன்று இது போதும் படுத்துக்கோ என்று சொல்லி விட்டு தூங்கிட்டாங்க

அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு வந்து அவள் முகத்தில் சோபாவில் இருந்த தலையனையை  தூக்கி எறிந்தான்.

அபர்ணா மேலே போனதும் ஏதும் சாப்பிட வாங்கிட்டு வரவா என்று கேக்க வந்தவன் அவள்  வெக்கமா  வருது  என்று சொன்ன வார்த்தையில் அப்படியே நின்றான்.

இவளுக்கு வெக்கமா  என்ன டா இது  அதிசயம் என்று சரி என்ன என்று கேட்போம்  என்று அமைதியாக நின்று கொண்டான். அவள் சொல்ல சொல்ல இவனுக்கு  பீ பீ அதிகமாகியது .  இவளுக்கு நான் முத்தம் குடுத்தேனா இன்னைக்கு செத்த டீ நீ என்று  மனதில்  திட்டி கொண்டு உள்ளே   நுழைந்தான். எதையாவது தூக்கி எறிய கிடைக்குதா என்று தேடியவனின்  கண்களில் சிக்கியது தலையணை மட்டுமே

ஐஐயோ  கேட்டு விட்டான் என்று இருவருமே திரு திரு என விழித்தனர்.

சுவடுகள் பதியும்....

Episode # 02

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.