(Reading time: 17 - 34 minutes)

ல்லா விசயமும் கேள்வி பட்டதால் வினோத் அவர்களை அழைக்க கால் டாக்ஸி  பிடித்து கொண்டு பேருந்து நிலையம் வந்து விட்டான் கார்த்திக்கின் நண்பன் 

வாங்க அம்மா அப்பா தாத்தா அத்தை  மாமா எல்லாரும்  நல்லா  இருக்கீங்களா என்றவனை  முறைத்தவள் உனக்கு என்னை மட்டும் கண்ணுக்கு   தெரியாதே  என்றாள்.

அவளை முறைத்தவன் எதுக்கு மா காலையிலே  உன்கிட்ட வாயை  குடுத்து என் உடம்பை புன்ணாக்க சொல்றியா

அது அந்த பயம் இருக்கட்டும்

எல்லாரையும் வண்டியில் அமர சொல்லிவிட்டு பின் தங்கியவன் தன்  நண்பனின் அருகில் வந்து பரிதாபமாக பார்த்தான் அவன் பார்வையில்  எரிச்சலாகிய  கார்த்திக் என்ன டா  என்றான்

போயும் போயும்  உன் தலை எழுத்து இப்படியா அமையனும்

வீட்டுக்கு வா வச்சுக்குறேன் கச்சேரியை என்று முறைத்து விட்டு சென்று விட்டான்

அவளிடம் காட்ட மாட்டான் வீரத்தை நான் தானே இளிச்ச வாய் என்ற படியே  பின்னே நடந்தான்.

வீடு அனைவருக்கும் பிடித்தமானதாக  இருந்தது. ஆனால் சமையல்  செய்ய ஏதுவான  எந்த பொருளும் இல்லாததால் அடுத்த நாள் வாங்கலாம் என்று முடிவு செய்தனர்.

எல்லாரும் வீட்டை பற்றியும் என்ன வாங்கலாம் என்றும் யோசித்து கொண்டிருக்க அவள் மட்டும் அவளுக்கு அளித்திருந்த அறையை நோட்டம் விட்டு கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டில் இருந்த வேப்ப மரம் இவர்கள் வீட்டுக்கும் நிழல் தந்தது. அதில் இருந்து வரும் காற்றை ஜன்னல் வழியே அனுபவித்தாள் கீர்த்தி.

அறையை விட்டு வெளியே வந்தவள் அவனை தேடினாள்.  அந்த குரங்கு கூட போய் இருப்பான் என்று நினைத்து விட்டு பெரியவர்களை பார்த்தாள்.

இரவு உணவை கடையில்  இருந்து வாங்கி வந்தான் அடுத்து எல்லாரும் உண்டு விட்டு பேசி கொண்டிருந்தனர்.

கீர்த்தி

என்னமா

ஒரு பேப்பர் பேனா  எடுத்துட்டு வா நாளைக்கு என்ன வாங்கணும் என்று  லிஸ்ட் போடணும்

சரி மா என்று சொல்லி விட்டு எடுத்து வந்து  அமர்ந்தவளிடம்  பாத்திரம் மிக்ஸீ  கிரைன்டர்  என்று சொல்லி  கொண்டிருக்க எழுதுவதை நிறுத்தி  விட்டு எதுக்கு இதெல்லாம்  வாங்குரீங்க  அது தான் அத்தை  வீட்டிலும்  இருக்கு நம்ம வீட்டிலும்  இருக்குதே  என்றாள்

அவள் கேள்வியில் அணைவரின்   கவனமும் அவள் புறம் திரும்பியது.

இது ஊருக்கு  கொண்டு போக இல்லமா  இங்க உங்களுக்கு என்ற தந்தையை பார்த்தாள்

லூசா ப்பா  நீ

அவள் கேள்வியில் வினோத் சிரிப்பை வெளியிட்டான் அதை பார்த்து கார்த்திக் முறைத்தான். அவனுக்கும் அவள் கேள்வி சுவாரசியத்தை உண்டு  பண்ணியது . பாவமாக பார்த்து கொண்டிருந்த மாமாவை பார்த்தான்

உன்னை  மாதிரி ஒரு பொண்ணை  பெற்ற  நான் லூசா இல்லாமல் அறிவாளியாகவா இருப்பேன்.

அதை  விடுங்க ப்பா  ஆனால்  எனக்கு தான் சமையல்  தெரியாதே.அதை நான் தொட்டு கூட பார்க்க போறது இல்லை அப்புறம் எதற்கு  தெண்ட  செலவு என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் முறைப்பை  பதிலாய்  வாங்கினாள்.

அதை பார்த்து நாம தான் ஏதோ லூசு தனமா உளறிவிட்டோம்  போல என்று நினைத்து விட்டு ஒரு வேலை கார்த்திக் சமையல்  செய்வான் போல என்று வாயை மூடி கொண்டாள்

அன்று இரவு தனது அறைக்குள் வந்து படுத்தவள்  மனது நிம்மதியில்  நிறைந்திருந்தது. விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து அவன் தான் உலகம் என்று  வாழ்ந்து இன்று அவனுக்கே மனைவியாகி விட்டாள்  இது ஒன்று போதும் என்று நினைத்து  நிம்மதியாக  தூங்கினாள் கீர்த்தி

அடுத்து வந்த நாள்கள் வீட்டுக்கு பொருள் வாங்குவதிலும் அதை வீட்டில் ஒழுங்கு படுத்துவதிலும் சென்றது. ஞாயிறு அன்று பெரியவர்கள் கிளம்பி செல்ல வீடே அமைதியாக இருந்தது.

வினோத்தும்  கார்த்திக்கும் மட்டும் கீழே  வினோத் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அவள் அமைதியாக  மேலே அவள் அறையில் இருந்தாள்

எதுக்கு டா  அம்மா அப்பா இப்படி செய்தார்கள்  இத்தனை அவசரமாக  கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் தான் என்ன

எனக்கே தெரிய வில்லை  டா  சொல்ல  மாட்டிகிறாங்க . ஆனால்  பெரியதா  ஏதோ காரணம் இருக்கிறது. இப்ப அவங்க முகத்தில்  நிலவும்  சந்தோசம் நிம்மதி  அதுக்காக என்ன வேணும் என்றாலும்  செய்யலாம் டா. என்ன எங்க வீட்டு பெருசு தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்குமோ என்று  சந்தேகம்

ராஜூ தாத்தா நல்லவர் டா

அவர்  நல்லவர் இல்லை என்று  நான் எப்போது  சொன்னேன். அவங்க சந்தோசம் தான் எனக்கும் முக்கியம் அப்போது  பெரியதா  கோபம் வந்தது ஆனால்  இப்போது  அப்படி இல்லை .ஆனால்  இவளை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தான் பயமாக இருக்கிறது வினோத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.