(Reading time: 17 - 34 minutes)

பாரேன் முறைகிறதை  சரியான கடுவன் பூனை. எல்லா தப்பையும் இவன் செய்து விட்டு என்னை எதற்காக முறைக்கிறான். நீங்க முறைச்சா  நாங்க பயந்துருவோமா  போடா டேய்  யார் கிட்ட ம்ம் என்று மிதப்பாக  ஒரு பார்வை அவன் போன திசையில்  பார்த்து விட்டு தான் தாத்தா விடம்  திரும்பினாள் 

சரி சரி மாமா தான் போய்விட்டாங்களே  நீங்க எல்லாரும் ஏன்  முகத்தை  வைத்து கொண்டு  சோகமாக இருக்கீங்க.அதான்  உங்க ப்ளான் படி எல்லாம்  நடந்து விட்டது  தானே  அப்புறம்  என்னவாம். ஆனால்  செய்தது  தான் செய்தீங்க  என்கிட்ட சொல்லிட்டு செய்திருக்கலாம்

என்னை மன்னித்து விடு  மருமகளே எங்க ஆசையில்  உன்னை பழிகடா வா  ஆக்கிவிட்டோம்

அட என்ன மாமா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு  விடுங்க எல்லாம் நன்மைக்கே

இருந்தாலும் உனக்கும் வருத்தம் குடுத்துட்டோமே மா என்று மல்லிகா சொல்ல

அவரின் அருகில் வந்த ராஜூ எம்மாடி  மருமகளே உன் மருமகளுக்கு எந்த வருத்தமும் இல்லை அப்படி தனே கீர்த்தி  என்று சொல்லி அவளை பார்த்து கண்ணடித்தார் . அடுத்து அவர்களிடம் பேச ஆரம்பித்தார்,

இன்னும் சொல்ல போனா  அவளுடைய காதலையும் நாம தான் காப்பாத்தியிருக்கிறோம் .அதனால அவளுக்கு வருத்தம் எல்லாம் வராது  சந்தோசம் தான் படுவாள் . ஆனால் அந்த சந்தோசம் கிடைக்க கால தாமதம்  ஆகலாம் என்று சொல்லி விட்டு சில உண்மைகளை அவர்களிடம் சொன்னார்.

அனைவரும்  கீர்த்தானாவை  பார்த்து ஆ  என்று வாய் பிளந்தார்கள். அவர்களை பார்த்து ஈ  என்று இளித்து   வைத்தாள். இப்படி உண்மைய  உளறி மாட்டி விட்டாரே  என்று தன்  தாத்தாவை முறைத்தாள். சரி சமாளிப்போம் என்று முடிவு எடுத்தவள்  தன் அம்மா அப்பாவையும் மாமா அத்தையும்  பார்த்தவள் திகைத்தாள்

ஏற்கனவே ஒரே பொண்ணு  கல்யாணம் முடிந்தததில் ஆனந்த மடைந்தவர்கள் இவள் காதல் விசயம் தெரிந்து இன்னும் அதிகமாக சந்தோச  பட்டனர். அத்தை  முகமும் மாமா முகத்தையும் பார்த்தால் அவர்கள் முகத்தில் ஆனந்தம் கண்ணீராய்  வெளிப்பட்டது. ராஜாத்தி  என்று கொஞ்சினார்  மல்லிகா. நீ  நல்லா  இருக்கணும் மா என்றார் மாணிக்கவாசகம்

எல்லாரையும் சமாதான படுத்தி விட்டு அவர்கள் போன பின்பு தன்  தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தாள். ஏன்  ராஜூ இனிமே தான் இவங்க பையனோட கதையில் பல திருப்பங்களும் அடி தடிகளும்  இருக்கு.இதில் எனக்கு வேற எத்தனை பல்லு உடைய போகுதோ. அதற்குள்    இத்தனை அழுகையா இவர்களுக்கு

அவன் உன் பல்லை  உடைக்க போகிறானா  நீ  அவன் பல்லை  உடைக்காமல்  இருந்தால்  சரி தான்.

அது என்னமோ சரி தான் எதுக்கும் உங்க பேரனுக்கு ஒரு பல்  செட் தாயார் செய்து வைத்து கொள்ளுங்கள்

சரி மா எல்லாம் நல்ல படியா நடக்கும் அவன் மனமும் மாறும் எனக்கு நம்பிக்கை இருக்கு நீ  உள்ளே போ நான் வெளிய போய் விட்டு வறேன்.

எங்க போக போகிறாய்  அந்த சதா  கூட பேச போவாய் . கழுதை  கெட்டால்  குட்டி  சுவர்.

ஏய்  என் நண்பனை கழுதை என்று  சொல்ற.உன்னை இரு கார்த்தி கிட்ட  சொல்கிறேன்

ஐயோ  வேணாம் பா ஏற்கனவே  தீ பார்வை பார்த்துட்டு போய்ருக்கார் .இன்னும் வம்பிளுத்தால்  பொசிக்கிருவாரு . நான் என் தோழியிடம்  பேச போகிறேன்  நீங்களும்  போங்க.

அவர் போனதும் தான் உயிர் தோழி அபர்ணாவை   அழைத்தாள். ஆனால் அவள் அழைப்பை ஏற்க  வில்லை சரி பிறகு பேசி கொள்ளலாம் என்று  அமைதியாக அமர்ந்தவளின்  அருகில் வந்தார் மல்லிகா

என்ன அத்தை

இதில்  பண்டம்  இருக்கு கீர்த்தி இதை அவனுக்கும் குடுத்து விட்டு நீயும்  சாப்பிடு நேற்று சாப்பிட்டது  பசிக்கும். நான் போனா  சாமி ஆடிருவான்

அத்தை  இருந்தாலும் நீங்க இந்த மாதிரி செய்ய கூடாது. நீங்க தப்பித்துவிட்டு  என்னை இக்கட்டில்  மாட்டி விடுகிறீர்களே . பாறை என்று  தெரிந்தும்  முட்ட  சொல்றீங்களே, வெடிக்கும் என்று  தெரிந்தும்  பத்தவைக்க சொல்றீங்களே,சுடும்  என்று  தெரிந்தும்  தொட சொல்றீங்களே

அவள் பேசி கொண்டிருக்கும் போதே இடையில் வந்த பொன்மணி அவளை தடுத்து நிறுத்தி உன்னோட இந்த மொக்க தனமான பேச்செல்லாம்    நிறுத்தி விட்டு  கார்த்திக்கு இதை கொண்டு  போய் குடு  எப்பவும் போல ஒளிச்சு வச்சு ஒத்தையில்  சாப்பிடாத

தன்னை புகழ்ந்து தள்ளிய தன்  அன்னையை முறைத்தவள் தன்  அத்தையிடம் பண்டத்தை  வாங்கி கொண்டு சென்றாள்

என்ன மணி அவளை போய் இப்படி சொல்லுற

உங்களுக்கு தெரியாது அண்ணி சரியான திண்ணி பண்டாரம். எப்ப டா  சாப்பிட கிடைக்கும்னு நினைப்பா. சாப்பிட தான் இவள் பிறந்துருக்கா  என்று  தோன்றும் . இப்ப கூட எனக்கு நம்பிக்கை இல்லை இவள்  அதை போய் அவனுக்கு குடுக்காமல் இவள்  தான் சாப்பிடுவாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.