(Reading time: 17 - 34 minutes)

ன்  அன்னை தன்னை பற்றி புகழ்ந்து தள்ளி கொண்டிருப்பார்கள் என்று தெரியும். இன்னைக்காவது  அவங்க பேச்சை கேட்போம்  என்று  நினைத்தாள்  எடுத்து அவன் கையில் தருவோம் என்று நினைத்து மாமா என்று அழைத்து கொண்டு அதை திறந்தவள் அதில் இருந்த கார பணியாரத்தையும் கருப்பட்டி சேவையும் கண்டு வாயை மூடி கொண்டாள்.

எதற்கு அழைத்தாள் என்று அவளை பார்த்து கொண்டிருந்தவனை கண்டு கொள்ளாது அங்கு இருந்த நாற்காலியில்  அமர்ந்து அதை உண்ண ஆரம்பித்து விட்டாள்

ஏற்கனவே பசியில் இருந்தவன் இவளை பார்த்து பசி அதிகமாகியதை  உணர்ந்தான். அவளிடம் பதில் வராது  என்பதை முடிவு செய்த பின்னர் இப்ப எதுக்கு கூப்பிட்ட  என்று கேட்டான்

மாமா உங்களை  அத்தை  சாப்பிட ஏதாவது வேணும் என்றாள்  கீழே  வந்து சாப்பிட சொன்னாங்க.

அவனுக்கு கொலை வெறியே ஆகி விட்டது. அதை கொடுத்து அனுப்புனா  என்னவாம் என்று மனதில்  பொருமி கொண்டு கீழே  சென்று கத்தினான். உங்க ஆசை படி  தான் கல்யாணம் நடந்து விட்டதே அப்புறம் என்ன பசியோடு  இருப்பென் என்று தெரியும் தானே எதையாவது  குடுத்து அனுப்ப வேண்டி தானே

குடுத்து அனுப்பியது அவன் கைக்கு போய் சேர வில்லை என்பதை உணர்ந்து அவன் அம்மா  குழந்தை போல் விழித்து கொண்டு இருந்தார்.

நான் சொல்லலை  இப்படி தான் செய்வாள்  என்று அங்கு வந்தார் பொன்மணி. தன்  அண்ணியை விட்டு கொடுக்க முடியாதவராய்  அந்த திண்ணி பண்டாரத்துக்கிட்ட உனக்கு தான் அண்ணி குடுத்து விட்டாங்க  கார்த்திக் உனக்கு  குடுக்காமல்  அவல் மட்டும்  மொக்கிகிட்டு  இருக்கிறாள்  என்றார்.

அவர் பதிலில் ஒரு நொடி சிரித்தவன் தன்  அன்னையின் முகத்தை பார்த்தான். அதில் இருந்த சந்தோசம் மனதில்  நிம்மதியை  தர இதுக்காக தானே  இந்த கல்யாணத்துக்கு ஒத்து கொண்டேன் என்று நினைத்து கொண்டு பசிக்குது என்றான்.

சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றவனை  வர வெற்றது அதே நிலையில் அமர்ந்திருந்த அவளும் அவள் கையில் இருந்த வெற்று  தட்டும் தான்

அதை பார்த்து சிரிப்பு தான் வந்தது.ஆனால் அதை நீடிக்க விடாமல் செய்தது  அவள் பேச்சு. பண்டம்  நல்லா  இருந்தது  மாமா உங்களுக்கு வேணுமா.

இதை முன்னாடியே கேட்காமல்  வெற்று  தட்டை  வைத்து கொண்டு கேட்பதை  பார் சரியான லூசு என்று நினைத்து கொண்டு அவளை முறைத்த  படி  சென்று விட்டான்

ரவு சாப்பிட வந்து அமர்ந்த அனைவரிடமும் அறிவித்தான் நான் சென்னைக்கு போகிறேன்  நாளைக்கு என்று

ஏன்  பா ஒரு வாரம் கழித்து செல்லலாமே என்ற தன்  தந்தையை ஒரே பார்வையில் தடுத்து நிறுத்தினான் 

பவித்ரன்  தான் பேசினார் கார்த்திக் கீர்த்திக்கு திங்கள்  தான் காலேஜ் ஆரம்பிக்குது . அவளோட ஹாஸ்டலில்  இருந்து பொருள்  எல்லாம் வீட்டுக்கு எடுத்து விட்டு வரணும் . நீ வீடு மாறி  விட்டாயா

இல்லை மாமா அதே வீடு தான்

அங்க உன் நண்பன்  வினோத்தும்  இருந்தானே

ஹ்ம்ம்  கீழே  தான் ரெண்டு பெரும் இருந்தோம். மாடி  போர்சன்  சும்மா தான் இருக்குது அதையே  பேசி விட்டேன்

அப்ப  சரி தான் . இவளுக்கு காலேஜ் பக்கம் தானே 

அதெல்லாம்  பக்கம் தான் 10 நிமிடம் தான் ஆகும் 

தன்னை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாமல் தட்டில்  இருந்த இட்லியில்  கவனமாய் இருந்தவளை பார்த்து பொன்மணி கவலையுடன் பார்க்க மல்லிகாவுக்கு  சிரிப்பு வந்து விட்டது.

இவளை வைத்து  கார்த்திக் என்ன தான் செய்ய போறானோ அண்ணி

கவலை  படாத மணி அவனுக்கு இந்த மாதிரி பொண்ணு தான் சரி வருவா

கீர்த்தி நாளைக்கு கிளம்பணுமாம்  எல்லாம் எடுத்து வைத்து விட்டாயா

என்னை  பார்த்தால்  உங்களுக்கு லூசு மாதிரி இருக்காமா

இதில் சந்தேகம் வேறயா

அம்மா என்று பல்லை கடித்தவள்  ஒரு வாரம் பொங்கல் லீவ்க்கு  நான் நாலு ட்ரெஸ் எடுத்துட்டு வந்தேன் வந்த இடத்துல கமுக்கமா எனக்கே தெரியாம கல்யாணத்தை முடித்து வைத்து விட்டு எடுத்து வைத்துவிட்டாயா என்று கேக்குறீர்கள் எடுத்து வைக்க என்ன இருக்கு. இந்த ராஜூவையும் இருக்கும்  பீரோ  மிக்ஸீ  எல்லாவற்றையும்  தான் எடுத்து வைக்கணும்

என்னை எதுக்கு இப்ப வம்புக்கு இழுக்குற நீ

ஆமா நீ தானே  எல்லாத்துக்கும் காரணம் தாத்தா

சரி விடு. நீ  எல்லாவற்றையும்  எடுத்துட்டு போ என்னை மட்டும் விட்டு விடு. உன்கூட வந்து என்னால் குப்பை கொட்ட முடியாது.

அப்ப  நான் மட்டும் இளிச்சவாயன் என்ற கேள்வியை கண்களில் தாங்கி கொண்டு தான் தாத்தாவை முறைத்தான் கார்த்திக்

தான் மட்டும் கிளம்ப போவதாய்  சொன்னவன் உடன் மொத்த குடும்பமே படை எடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.