(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 02 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

ல்யாணத்தை பற்றி சிறிது கூட யோசிக்காதவன்  பெற்றோர்களுக்காக திருமணம் செய்து கொண்டான். இன்னும் யார் மேலயும் உள்ள கோபம் போகவே இல்லை. அப்படி இருக்கும் போது அவனை போய் என்ன வார்த்தை சொல்லி விட்டாள் . முதல்இரவில்  என் அருகில் வந்து எனக்கு முத்தம் குடுத்தான்  என்று அவள் சொன்னால்  எப்படி இருக்கும் அதுவும் அவன் முன்னிலையிலே சரியான ராணி ரங்கம்மா . என்னமாய் உடான்ஸ்  விடுகிறது பாரேன். இதில் வெக்கம்  வேற. அப்படி என்றால்  கிலோ என்ன விலை என்று கேட்பாள்.

சரியான கூமுட்டை  அவள் தோழி தான் என்றாலும் எதை பற்றி  எல்லாம் பேசுகிறாள் பாரு. சிறு வயதிலே நல்ல விளஞ்சிருக்காயா . இவளை வச்சு நான் எப்படி தான் கரை சேர போறேனோ. அந்த பிள்ளை பாசமா அண்ணனு சொல்லுச்சு  என்ன பற்றி  என்ன நினைக்கும். உண்மையில்  நடந்திருந்தால் இந்த எருமை சொல்லி இருக்காதோ

ஆனாலும்  என்ன ஒரு பொய்  சரியான  கேடி டீ நீ.  இரு வரேன்  என்று மனதினுள்  சொல்லி கொண்டு வந்தவனின் கைகளில் மாட்டியது தலையணை தான். அவள் முகத்தில் விசிறி அடித்தான் அதை. கொலை வெறியோடு வந்தவனின் கோபம் கொஞ்சம்  தணிந்தது அருகில் நனைந்த கோழி குஞ்சாய் பயந்து போய் இருந்த அபர்ணாவை  பார்த்ததினால்

ஆனால் கீர்த்தானா  அதை கிரிக்கெட்  பந்தை போல்  காட்ச்  பிடித்து விட்டு அசடு வழிய சிரித்து  கொண்டிருந்தாள்

அவன் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்த அபர்ணா கீர்த்தியை பாவமாய்  பார்த்தாள்  பின் நாளைக்கு கல்லூரியில்  பார்ப்போம் கீர்த்தி நான் கிளம்புறேன் வரேன்  அண்ணா  என்று சொல்லி விட்டு விட்டால் போதும் என்று ஓடி  விட்டாள் .

அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் இதயம் எம்பி குதித்தது. ஐயொ  கீர்த்தானா  பாவம் திட்டு  வாங்க போகிறாள். அண்ணனுக்கு அவங்களுக்குள் நடந்த அந்தரங்கமான விசயத்தை என்னிடம் சொன்னததுனால தான் கோபம் போல. நான் கேக்காமல்  இருந்துருக்கணும் .

திட்டுவாங்க  போல. அவள் எண்ணம் இதுவாக தான் இருந்தது. அவள் பொய்  சொல்கிறளோ என்று ஒரு நிமிடம் கூட யோசிக்க முடிய  வில்லை.

குழப்பத்துடன் கீழே  வந்தவள் கண்களுக்கு தென்பட்டான்  வினோத். அவன் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான் போகும் போது   முறைத்து விட்டு போனாள் . இப்ப பாப்பா பம்மிக்கிட்டு வருதே என்ன ஆச்சோ  தெரியலையே  என்று நினைத்தான்.

நெற்றி முழுவதும் வியர்வை பூக்க சோடா பொட்டி  கண்ணாடிக்குள் உள்ள கண்கள் கலங்கிய நிலையில் கீழே  வந்த அபர்ணாவை  பார்த்த வினோத் எதையாவது பாத்து பயந்திருப்பாளோ  என்று யோசித்து அவள் அருகில் வந்தான்.

என்ன நினைத்தாளோ அவன் அருகில் வந்தவள் ஸார்  ஒரு பேப்ப்பரும்  பேனாவும் தாங்களேன் ப்லீஸ் என்றாள்.ஸார் என்ற அழைப்பில் அவன்  முகம் விளக்கென்னை குடித்ததை  போல் ஆகி விட்டது. ஆனால் அவள் கலக்கம் கண்ணில் பட  பொறுமையாக அவளுக்கு எடுத்து குடுத்தான் 

அதில் எதையோ எழுதியவள் ஸார் இது என்னோட நம்பர். 

என்னடா பச்சி  தன்னாலே  நம்பர்  குடுக்குது என்று நினைத்து அவளையே ஊன்றி பார்த்தான்.

நைட் 10 மணிக்கு மேல எனக்கு கால்  பண்ணி... அவள் பேசும் போதே குறுக்கிட்டு ஹெலோ மேடம்  நான் அந்த மாதிரி பையன் கிடையாது. உன்  கூட கடலை போட நான் தான் கிடைத்தேனா  அதுக்கு வேற ஆள  பாருங்க ஓகே  என்றான்.

வெலக்கமாறு  பிஞ்சிரும் என்றாள் அவள்

என்னது  என்று அவன் விழிக்கும் போது அபர்ணா திட்ட  துவங்கி விட்டாள்

என்ன பார்த்தா  உனக்கு அப்படி தெரியுதோ அப்படியேகடலை போட்டாலும் போயும் போயும் உன்கிட்ட போயா  கடலை போட போறேன். மூஞ்ச பாரு சரியான குரங்கு. இப்ப எனக்கு உன்கிட்ட உதவி தேவை அதனால தான் பொறுமையா இருக்கேன் இல்லா  விட்டால்  கொன்று விடுவேன்  என்றாள்

அப்போதும் எனக்கு என்ன குறைச்சசலாம் எதுக்கு என்கிட்ட பேச மாட்டாளாம் என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து முறைத்தவன் என்ன ஹெல்ப் என்றான்.

மேல கீர்த்திக்கும் அண்ணனுக்கும்  சண்டை   வரும் என்று  தோன்றுகிறது  காரணமெல்லாம் கேக்காதீங்க ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு போய் நீங்க  அவங்களை  சமாதானம் பண்றீங்களா  ப்லீஸ் அப்றம் நைட் எனக்கு என்ன ஆச்சு  அவங்க கோபம் குறைந்தததா இல்லையா என்று  சொல்றீங்களா

என்ன சண்டை

அதை  தான்  சொன்னேன் கேக்க கூடாது என்று  சரி நீங்க  சொலுங்க நான் கிளம்புறேன் போன் செய்வீங்க தானே

ஹ்ம்ம்ம். ஆனால் தனியா  போய்ருவியா

அதெல்லாம் எனக்கு போக தெரியும்.

போன பிறகும் அபர்ணாவை  பற்றி தான் யோசித்து கொண்டிருந்தான். சோடா புட்டி  போட்டிருகா  பார்த்தா  தயிர் சாதம்  மாதிரி மென்மையா   இருக்கா  ஆனால்  என்ன மிரட்டு  மிரட்டுறா  என்று சிரித்து  கொண்டான் அடுத்து அவள் சொன்ன  விவகாரம் ஞாபகம் வர மெதுவாக மேலே  சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.