(Reading time: 4 - 7 minutes)

49. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

ல யுகங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து சட்டென வெளிவந்தார் தட்சேஷ்வர்…

தன் எதிரே இன்னமும் அந்த ஆதி காலம் தெரிய,

“இல்லை………..” என உரக்க கத்தினார் அவர்…

அவரின் சத்தம் அனைவரையும் நனவுலகுக்கு இழுத்து வர, ஒரு அதிர்விலிருந்து வெளிவந்ததை போல் உணர்ந்தனர் அனைவரும்…

“என்னங்க என்னாச்சு?...”

பிரசுதி வேகமாக கணவனின் அருகே வர,

பிரசுதியைக் கண்டவரின் விழிகளில் பிரசுதியின் முன் ஜென்ம தோற்றமே வந்து செல்ல, அவரின் விழிகள் விரிந்தது…

“நான் பார்க்குறது எதுவுமே நிஜமில்லை… எல்லாமே பொய்….”

அவர் வெறுப்போடு ஆத்திரத்துடன் கூற,

“எதை நீ பொய் என்று கூறுகிறாய் தட்சா?...”

பிரம்மரிஷி சட்டென தன் மகனிடம் கேட்க,

“எல்லாமே பொய்…” என்றார் அவரும் தகப்பனையே பார்த்துக்கொண்டு…

ஜெய்யும், சதியும் தங்களது முன் ஜென்ம நிகழ்வுகளை சரி வர அறியாது, அவர்களுக்குள் இருந்த பந்தத்தினை உணர முற்பட்ட வேளை, தட்சேஷ்வரின் குரல் அவர்களை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள செய்தது…

“சிவனும் சதியும் வேறு வேறு இல்லை தட்சா…. இருவருமே ஒருவர் தான்… நீ கண்ட காட்சிகள் சொற்பமே… இன்னும் அவர்களுக்குள் நடந்த நிகழ்வுகள் ஏராளம்… அதனைக் காணாமலே பொய் என்று நீ பிதற்றுவது உனக்கு நாடகமாக தெரியவில்லையா?...”

“தெரியலைப்பா… என்னை நீங்க ஏதோ பிரம்மையில் ஆழ்த்தி இதுமாதிரி காட்சிகளை எனக்கு உண்டுபண்ணுறீங்கன்னு தான் தோணுது… நீங்க தான் நாடகம் பண்ணுறீங்கப்பா…”

தட்சேஷ்வரின் வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்தார் பிரம்மரிஷி…

“உன் கண்களை சற்றே அகலத்திரிந்து அங்கே பார்….”

அவர் கூறிவிட்டு ஜெய்யினையும் சதியினையும் கைகாட்ட, இருவருமே ஒருவரின் விழிகளில் இன்னொருவர் கரைந்து போய்க்கொண்டிருந்தனர்…

“இவர்களின் விழிகளில் தென்படுவது உனக்கு நாடகமாக தெரிகிறதென்றால், பிழை உன் பார்வை மீது மட்டுமல்ல தட்சா உன் மீதும் தான்….”

“ஆமாப்பா… அப்படியே சொல்லிக்கோங்க… எனக்கு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை…”

“உண்மைதான்… தட்சா… கவலை உனக்கு ஏதுமில்லை… ஆனால் எனக்கு இருக்கிறது…”

பிரம்மரிஷி சொல்லிக்கொண்டே, ஜெய்யின் அருகில் சென்றார்…

அவனது மோன நிலையை கலைக்கும் விதமாய், அவனது தோள்களில் அவர் கைவைத்திட, சட்டென ஸ்பரிசம் உணர்ந்து அவரைப் பார்த்தான் அவன்…

“சொல்லுங்க தாத்தா….”

“சிவா… இதைப் பிடி….”

புன்னகையுடன் அவர் அந்த மங்கல நாணை அவனிடம் கொடுக்க, அதை தன் கைகளில் பூவாய் தாங்கிக்கொண்டான் அவன்…

“என் மகனான தட்சனுக்கு உண்மையை புரிந்து கொள்ளவும் மனமில்லை… உணர்வுகளை புரிந்து கொள்ளவும் மனமில்லை… அதனால் இனி பொறுமை காப்பது தவறு…”

அவரின் வார்த்தைகள், அனைவரிடத்திலும், ஒரு கேள்வியை உண்டாக்க,

“சதியின் கழுத்தில் இதனை அணிவித்து அவளை உன் மனைவியாக ஏற்றுக்கொள் சிவா….”

அவர் பொறுமையாக கூற,

“அப்பா………………………………” என அதிர்ந்து போனார் தட்சேஷ்வர்…

“என்ன தட்சா?...”

“இந்த கல்யாணத்துக்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்…”

“உன் சம்மதத்தினை நான் கேட்கவில்லை தட்சா…”

“அப்பா… சதி என் மகள்….”

“அது உனக்கு நினைவிருந்தால், நீ உன் மகளின் நலனைப் பற்றி சிந்தித்திருப்பாய்… சிவாவிற்கே அவளை மணமுடித்தும் கொடுத்திருப்பாய்….”

“என் மகளுக்கு எது நல்லது என்று பெற்றவனாகிய எனக்குத் தெரியும் அப்பா…”

“உனக்கு தெரியவில்லை என்பது தானே இப்போது பிரச்சினையே…..”

“என் சதிக்கு தெரியும்… அவளது தகப்பனான இந்த தட்சேஷ்வர் அவளுக்கு நல்லதை மட்டுமே செய்வேன் என என் மகளுக்கு தெரியும்…”

அவரது பார்வை தீர்க்கமாக சதியின் மீது விழ, அவளோ தகப்பனையேப் பார்த்திருந்தாள் அந்நொடி…

“நீ அவளை சங்கடத்திற்கு உள்ளாக்காதே தட்சா….”

“இது சங்கடம் இல்லப்பா… என் மகளின் மீது எனக்கு இருக்கும் பாசம்….”

“எனில், நான் உனக்கு தகப்பன் என்பது உண்மையென்றால், நீ மறுப்பு தெரிவிக்காது, இந்த திருமணத்திற்கு சம்மதித்திட வேண்டும்…”

பிரம்மரிஷி தெளிவாக கூற, தட்சேஷ்வர் மறுப்பு தெரிவிக்கும் முன்னர்,

“வேண்டாம் தாத்தா…. நான் சதியைக் கல்யாணம் பண்ணிக்கலை….” என்றான் ஜெய்….

பிரம்மரிஷி, இஷான், தைஜூ, பிரசுதி, சோமநாதன், சிதம்பரம், காதம்பரி அனைவரின் விழிகளிலும் அதிர்ச்சி அப்பட்டமாக தென்பட, தட்சேஷ்வரரோ அமைதியாக நிற்க,

சதியின் விழிகளிலோ நீர் நிறைந்து நின்றது இப்பவோ அப்பவோ என கன்னம் தொட முனைந்தவாறு…

தொடரும்...!

Episode 48

Episode 50

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.