(Reading time: 9 - 18 minutes)

24. நிர்பயா - சகி

Nirbhaya

வரது நாடியில் குளுக்கோஸ் துளித்துளியாக ஏறிக் கொண்டிருந்தது.உயிருக்கு ஆபத்தேதும் இல்லை என்ற மருத்துவரின் வாக்கியத்தில் தான் உயிர் பிழைத்தாள் நிர்பயா.மனம் சோர்வுற்றிருந்தது.பற்றிய அவளது கரத்தை அவர் இன்னும் தியாகிக்கவில்லை.விழிகள் சோர்வுற்றிருந்தன.நடந்த நிகழ்வுகளால் தனது பணிமாற்று மின்னஞ்சலை உடனடியாக அழித்துவிட்டிருந்தாள் நிர்பயா.

எல்லாம் இந்த கபடமில்லா அன்பிற்காக!அவளது ஒட்டுமொத்த வைராக்கியத்தையும் உடைத்து எறிந்தது அந்த உன்னத பாசம்!!

"நிர்பயா!"

"என்ன பாட்டி!"

"நீ வீட்டுக்கு போம்மா!நான் இருக்கேன்!"

"வேணாம் பாட்டி!நான் இங்கேயே இருக்கேன்."

"சொன்னா கேளும்மா!நீ ரொம்ப சோர்ந்திருக்க!கொஞ்சமாவது ஓய்வெடு!!"

".............."

"அவர் எழுந்தா நிச்சயம் இந்த நிலையல உன்னை பார்க்க விரும்ப மாட்டார்!"

"பாட்டி!ஐ ஆம் ஸாரி!என்னால தான் தாத்தாக்கு இந்த நிலை!"-பார்வதி ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டார்.

"அவருக்கு ஒண்ணுமில்லை!என் மாங்கல்யத்துக்கு சக்தி அதிகம்!நான் உயிரோட இருக்குற வரைக்கும் அவருக்கு எதுவும் ஆகாது!நீ பயப்படாதே!"-அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தோன்றவில்லை.அந்தக் காதலின் மகத்துவம் சற்றே அவளது தைரியத்தை உலுக்கி பார்த்தது.

"போ!"-பார்வதியின் பேச்சுக்கு கட்டுப்பட்டவள் அங்கிருந்து கிளம்பினாள்.நடைப்பயணம் அவளதே மனதிற்கு சற்று ஆறுதல் நல்கும் என்று எண்ணி,நடந்தே சென்றாள்.

எவ்வளவு வேதனைகள்??பிறப்பிலிருந்து இன்றுவரை என்ன சுகத்தை அனுபவித்தேன்??ஏன் எனது விதி மட்டும் இப்படி எழுதப்பட வேண்டும்??தாயன்பு,தந்தையன்பு,தூய நட்பு,காதல் எதுவும் அமையவில்லை.எனக்கான ஒரு அன்பையும் மரண வாயிலில் கொண்டு விட்டேன்.

எதற்காக நான் அந்த விபத்தில் உயிர் பிழைத்தேன்??இன்னும் எனது பாவ பலன்களை தீர்க்கவில்லையா அந்த இறைவன்??இல்லை...மரணத்தை எனக்கு நல்குவதால்,நரகத்தின் புனிதத்துவம் கெடும் என்று அஞ்சுகிறாரா??நிர்பயா என்ன சாதித்தாள் இந்தப் பாரதத்தில்??அவளுக்கு விளைந்த சோகம் தனை தட்டிக்கேட்க ஒரு புண்ணிய ஆத்மாவும் இந்த ஜெகத்தினில் இல்லையா??போகட்டும்..!எனக்காக கேள்வி எழுப்ப எவரும் வேண்டியதில்லை.என்னிடம் நம்பிக்கை உள்ளது!மனவுறுதி உள்ளது!எனை எதிர்த்து சதி செய்யும் விதியை நிச்சயம் என் சரணங்களை ஸ்பரிசிக்க வைப்பேன்.என் வைராக்கியமே எனக்கு இரட்சகனாய் உருமாறும்!!மனதில் பல உறுதிகளைப் பூண்டவளின் பார்வையில் சற்று தொலைவில் பதிந்த காட்சி அவளை திடுக்கிட வைத்தது.

அவளிடமிருந்து சில அடிகள் தொலைவில் சங்கரனும்,ஜோசப்பும் நின்று ஏதோ உரையாடி கொண்டிருந்தனர்.அவர் பேச அவன் மௌனமாக தலைகுனிந்து நின்றிருந்தான்.

இதோ அடுத்த சதி செயல் என்று எண்ணியவளுக்கு வேறு உபாயமில்லை அவர்களை கடந்து தான் அக்கன்னிகை சென்றாக வேண்டும்!!எதையும் கவனிக்காததை போல் வேகமாக நடந்தாள் அவள்.அவளைக் கண்டவனது முகம் நொறுங்கி போனது.அவளது விலகல்!!இதற்காகவா வந்தேன் என்றது அவனது முகபாவனை!!

"நிர்பயா!"-உறுதியான குரல் உலுக்க,சட்டென நின்றாள் அவள்.இன்னும் அந்த அச்சம் அவள் மனதை நீங்கவில்லை.

"உன்கிட்ட பேசணும்!"

"இங்கே பேச எதுவுமில்லை!"-திரும்பாமல் பதில் கூறினாள் அவள்.சில நொடிகளில் அவள் வலுக்கட்டாயமாக யாராலோ திருப்பப்பட்டாள்.அவள் புஜங்களை பற்றி இருந்த சங்கரனின் கரத்தில் ஒரு வித மென்மை தொனித்தது.

"பேசணும்!"

"..............."

"நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?"-அவள் அவரது கரத்தை வலுகட்டாயமாக தன்னிடமிருந்து எடுத்தாள்.

"போதும் நிறுத்துங்க!"-கண்ணீரோடு சிந்திய அவளது ரௌத்திரம் இருவரையும் அதிர வைத்தது.

"இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசாதீங்க!என் வாழ்க்கையில நடந்த எல்லா வேதனைகளுக்கும் முக்கிய காரணமே நீங்க தான்!இன்னும் உங்களுக்கு ஆத்மசாந்தி கிடைக்கலையா?"

"................"

"இன்னும் என்ன வேணும்?சொல்லுங்க என்ன வேணும்?என்கிட்ட இழக்க இப்போ எதுவும் இல்லை.எல்லாத்தையும் இழந்துட்டேன்.இன்னும் இருக்கிறது எல்லாம் என் உயிர் மட்டும் தான்.அது வேணுமா?"-அக்னி வார்த்தைகள் இருவரையும் துடிக்க வைத்தன.

"அம்மூ!"

"நீ பேசாதே!பேசவே பேசாதே ஜோசப்!நீ அந்தத் தகுதியை இழந்துட்ட!என் முன்னாடி இன்னொருமுறை குரலை உயர்த்தாதே!"-நிச்சயம் இது விசித்ரம் தான்!கனவிலும் அவனை எதிர்க்க துணியாதவள்,இன்று அவனை நடுங்க செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.