(Reading time: 9 - 18 minutes)

"அன்னிக்கு நீங்க என் உயிரை காப்பாற்றுனீங்க!அதுக்கு நன்றிக்கடனா தான் சங்கர் ப்ராப்பர்டிஸ்க்கு அப்ரூவல் கொடுத்துட்டேன்.அதோட முடிந்துப்போச்சு!இனி,என் மேலே எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை."-சங்கரனின் விழிகள் துளிர்க்க தொடங்கின.

"நான் ஒரு கலெக்டர்.அது ஞாபகமிருக்கட்டும்!!இதுவே கடைசி முறையா இருக்கட்டும்!இனி,என்னை அதிகாரம் செய்ய நினைத்தால்,ஒட்டுமொத்தமா அழித்துவிடுவேன்.புரிந்துக்கொண்டால் உங்களுக்கு நல்லது!"-என்றவள்,அவர்களை திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

மனம் முழுதும் வேதனையோடு இல்லத்தை அடைந்தவர்,தனதறையில் சென்று எதையோ தேடினார்.எண்ணிய வேண்டுதல் கரத்தில் சிக்கியது.ஆம்..!அது அந்தக் கோப்பு தான்!நிர்பயாவின் கையொப்பம் பதிந்த அந்தக் கோப்பு!அதை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தவர்,எதையும் எரித்து பஸ்பமாக்கும் சக்திக் கொண்ட அக்னியின் உதவியோடு அதை எரித்தார்.தீ ஜூவாலையில் அது மொத்தமாய் எரிந்து பஸ்பமானது!!

"ஐயோ அண்ணா!என்னண்ணா பண்ற?இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டோம்?"

"ஏ...போயிடு!பேசாம போயிடு!எனக்கு இருக்கிற கோபத்துக்கு பலி ஆகிடாதே!"-அந்த ரௌத்திரம்!!இதுவரையில் காணாத ரௌத்திரம்,லட்சுமியை அதிர வைத்தது.ஏதும் பேசாமல் தனதறைக்கு சென்றார் சங்கர்.

"இன்னும் இருக்கிறது என் உயிர் மட்டும் தான்.அது வேணுமா?"-நிர்பயாவின் வார்த்தைகள் அவர் வலிகளை தூண்ட,எதையும் சிந்திக்காமல் அனைத்தையும் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.

பிரியமாக வாங்கி எதுவும் அவருக்கு தெரயவில்லை.அனைத்தையும் உடைக்க ஆரம்பித்தார்!சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்தார் பல்லவி.அவரது விழிகளுக்கு மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்ந்திருக்கும் தன் கணவனின் பிம்பம் தென்பட்டது.

கேள்வி எழுப்பலாமா?என்ற அச்சமும் மனதை வியாபித்தது.மன தைரியத்தை கடன் வாங்கி,பேசினார்.

"ஏங்க..!"-மெதுவாக அவரது அருகில் சென்று மண்டியிட்டார் பல்லவி.

"எ..என்ன...என்னங்க ஆச்சு?"

"............."

"ஏங்க..!"-அவர் கூறியது தான் தாமதம்!உடனடியாக,இறுக்கமான சங்கரனின் அணைப்பினுள் கவர்ந்திழுக்கப்பட்டார் பல்லவி.

மனம் ஏறியது தடுமாற்றம்!!முதல்முறையாக கிட்டிய ஏக்க ஸ்பரிசம்!!அவரால்,விலக இயலவில்லை.

"தப்பு பண்ணிட்டேன்.ரொம்ப பாவத்தை பண்ணிட்டேன்.இன்னிக்கு என்னால என் பொண்ணு எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறா!"-வார்த்தைகள் எதையும் செவி கேட்கவில்லை.'என் பொண்ணு!'என்ற மொழியை தவிர!

"அவ இன்னிக்கு பேசினது எல்லாம் கன்னத்துல அறையுற மாதிரி இருந்தது.ரொம்ப கஷ்டப்பட்டுட்டா பல்லவி!இன்னிக்கு அவ அனுபவிக்கிற வேதனை எல்லாத்துக்கு நான் மட்டும் தான் காரணம்!"-சங்கரன் கூற கூற மனம் குளிர்ந்துப்போனது பல்லவிக்கு!

"இல்லைங்க..அப்படியெல்லாம் பேசாதீங்க!"

"இல்லைம்மா!நடந்த எல்லா தப்புக்கும் காரணம் நான் தான்!என்னோட ஆணவத்தால எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்.என்ன சுகத்தை கண்டேன் அதனால??என் மகளோட வாழ்க்கையே சீரழித்துட்டேன்!"

"ஏன் இப்படி பேசுறீங்க?"

"இல்லை...இனி அவ வாழ்க்கையில எந்தக் கஷ்டமும் வர விட மாட்டேன்.எல்லா பிரச்சனையும் ஆரம்பித்தது நான் தான்!நானே எல்லாத்தையும் முடிக்கிறேன்!"-அதன் பொருள் பல்லவியின் புத்திக்கு எட்ட மறுக்கவே செய்தது.

வாரம் ஒன்று கடந்தது...

"தாத்தா!இந்தா ஜூஸ் குடி!"-நிர்பயா எடுத்து வந்த பழச்சாற்றை நாளிதழை படித்தப்படி வாங்கி அருந்தினார் வைத்தியநாதன்.ஒருமுறை விழுங்கி இருப்பார்,அவரது முகம் அஷ்டகோணலாய் மாறியது.

"என்ன ஜூஸ்ம்மா இது?"

"அருகம்புல் ஜூஸ்!"

"என்ன புல்லு?"

"ரிப்போர்ட்டை படித்து பார்த்தேன்,சுகர் லெவல் அதிகமா இருக்கு!இனி தினமும் இதான் உனக்கு!நோ ஸ்வீட்ஸ்,கூல் டிரிங்க்ஸ்,ஜங்க் புட்ஸ்!"

"ஐயயோ!அப்படின்னா..."

"இனி வெஜ் புட்ஸ் தான்!அதுவும் வீட்டில செய்யுறது தான்!"

"உன் பாட்டி சமையலா?தெய்வமே..!"

"ஏன்?என் பாட்டி சமையலுக்கு என்ன குறை?"

"ம்...அவ காரத்தையே கண்ணுல காட்ட மாட்டாளே!50 வருஷமா அவ சமையலை சாப்பிட்டு நாக்கு செத்துப்போச்சு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.