(Reading time: 9 - 18 minutes)

"நாக்கு செத்தப்போனதுனால தான் நீ நல்லப்படியா இருக்க!எனக்கு தெரியாது!நீ டயட்டை ஃப்பாலோ பண்ணணும்!"

"ஹனி!"

"ஐஸ் வைக்கிற வேலை வேணாம்!நான் சொன்னா சொன்னது தான்!இதை குடி!"-ஆணையிட்டாள் அவள்.

வைத்தியநாதன் அதை மடமடவென்று குடித்தார்.

"கடவுளே..!"

"எனக்கே உன் நிலைமை பாவமா தான் இருக்கு!என்ன பண்றது?"-என்றவள் கலகலவென்று சிரித்தாள்.

"என்னங்க?"-அச்சமயம் பதற்றமாக அங்கு வந்தார் பார்வதி.

"உனக்கு என்ன?"

"ப..பல்லவி வந்திருக்காங்க!"-இருவரும் திடுக்கிட்டுப் போயினர்.

"ஏன் வந்தா?"

"என்னங்க...கொஞ்சம்!"

"வந்த வழியா திரும்பி போக சொல்லு!"

"தாத்தா!கொஞ்சம் அமைதியா இரு!"-சமாதானம் செய்தாள் நிர்பயா.

"வர சொல்லுங்க பாட்டி!"

"நிர்பயா!கூட...உங்கப்பாவும் வந்திருக்காரு!"-இது அனைவருக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சியே!!

"என்ன?"

"ஆமாம்மா!"-சில நொடிகள் மௌனம் சாதித்தாள் அவள்.

"என்னன்னு போய் பாரு தாத்தா!"

"ஹனி..!"

"வீடு தேடி வந்தவங்களை அவமானப்படுத்தி அனுப்புறது நல்லதில்லை!நீ போய் பாரு!"-சில நொடிகள் அமைதி காத்தவர்,பின் எழுந்து சென்றார்.நிர்பயாவின் இதயத்துள் ஆயிரமாயிரம் வினாக்கள்!!

துன்பங்கள் யாவும் ஓய்வுப்பெற்று வாரம் ஒன்று மட்டும் கடந்த நிலை தன்னில் இங்கு என்ன புது குழப்பம் என்ற வினா அவளுக்குள்!!!

அரை மணி நேரம் கடந்திருக்கலாம்!ஏதோ உறுதியான காலடி ஓசையை உணர்ந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள்.

அதே ஆணவம்,கர்வம்,மிடுக்கு குறையாமல் அவள் எதிரே வந்து நின்றார் சங்கரன்.

சட்டென மனதில் ஒரு அச்சம் பரவியது அவளுக்கு!!தன்னிச்சையாக எழுந்து நின்றாள்.

"உன்கிட்ட பேசணும்!"

"நான் எதையும் கேட்க தயாரா இல்லை!"

"நீ கேட்டு தான் ஆகணும்!"

"நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு தெரிந்து பேசுங்க!நான் நினைத்தால் இப்போவே..."

"என்ன பண்ணுவ?அரெஸ்ட் பண்ணுவியா?இல்லை..கொலை பண்ணுவியா?"-சாதாரணமாய் கேட்டார் அவர்.

"இந்தா போலீஸ்க்கு போன் பண்ணு!"-என்று தன் கைப்பேசியை அவளிடம் தந்தார்.அவள் விழிகளில் ஆயிரமாயிரம் வினாக்கள் படையெடுத்தன..

"உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது!அதனால உனக்கு வேற விதி இல்லை!நான் என்ன சொல்ல வரேனோ அதை நீ கேட்டு தான் ஆகணும்!"

".............."

"ஜோசப் பற்றி பேச வந்திருக்கேன்!"

"..............."

"உண்மையிலே நடந்தது என்னன்னா!"-அவர் அனைத்து விவரங்களையும் கூற,அவள் வாய்விட்டு சிரித்தாள்.

"புது அரங்கேற்றமா?இந்த சதி எதுக்காக?கதை நல்லா இருந்தது!ஆனா,நம்புற அளவுக்கு பைத்தியக்காரி இந்த நிர்பயா இல்லை!பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!"-அதைக் கேட்டவர் தானும் வாய்விட்டு சிரித்தார்.

"நீ புத்திசாலின்னு நினைத்தேன்!இவ்வளவு முட்டாளா இருப்பேன்னு எதிர்ப்பார்க்கலை.நான் வில்லன் தான் இருந்தாலும் உண்மை எது,பொய் எதுன்னு என்னால சுலபமா கண்டுப்பிடிக்க முடியும்!என் இரத்தமா இருந்துட்டு நீ எப்படி இவ்வளவு முட்டாளா இருக்க?"-அவர் கூறிய 'என் இரத்தம்' என்ற வார்த்தை கண நேரத்தில் அவள் இருதயத்தை பலமிழக்க வைத்தது.

"உண்மையிலே ஜோசப்பை நீ விலகுனா,இத்தனை வருஷமா நீ இழந்ததை விட பெரிய இழப்பு அது தான்!"

"..............."

"இதுநாள் வரை உனக்காக நான் எதுவும் செய்ததில்லை!காலம் ரொம்ப கடந்துப்போச்சு!இனி,நான் செய்தா நீ ஏற்றுக்கொள்வீயான்னு தெரியலை!எனக்கு என் கௌரவம் முக்கியம்!அதனால,என்னால உன்கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது!ஒரு விஷயத்தை சொல்ல விரும்புறேன்,இத்தனை வருடம் என் அம்மா,பல்லவி,யாரும் செய்ய முடியாததை நீ செய்திட்ட!யு ஹேவ் ரியல் கரேஜ்!"-அவள் ஸ்தம்பித்துப் போனாள்.

"ஜோசப்பை யாருக்காகவும் இழந்துடாதே!அவனால மட்டும் தான் இனி உனக்கு நிம்மதியை கொடுக்க முடியும்!அவனுக்கு நீ வேணும்!இனியாவது,நீ சந்தோஷப்படுறதை பார்க்க ஆசைப்படுறேன்!"

"............."

"கிளம்புறேன்!"-என்றவர் வேறு ஏதும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

பெரும் தாக்கத்தை அவள் மனதில் பதிய வைத்தன அவரது வாக்கியங்கள்!!

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.