23. நிர்பயா - சகி

முகம் முழுதும் மலர்ச்சியோடு அந்தப் பத்திரத்தை திருப்பிக்கொண்டிருந்தார் சங்கரன்.
"என்னண்ணா சந்தோஷமா இருக்க?"
"நிர்பயாக்கிட்ட இருந்து அப்ரூவல் கிடைத்துவிட்டது!"-அதைக்கேட்டவரின் முகம் மலர்ந்தது.
பல்லவியின் மனதில் பெரும் ஏமாற்றம்!!இதுநாள் வரை இங்கு நடந்தவை அனைத்தும் இதற்காக தானா??என்றது அவர் மனம்.
"ஒரு வழியா போட்டுட்டாளா?இனி நீ எதுக்காகவும் நடிக்க தேவையில்லை!"-அவரது புருவம் சுருங்கியது.
"நடித்தேனா?"
"ம்...இதுக்காக தானே உன் மனைவியிடம் ஒற்றுமையா இருக்கிற மாதிரி நடித்த?"-அவர் முகம் இறுகியது.
"என்ன உளர்ற லட்சுமி?"-கடுமையாக கேட்டார் அவர்.
"இ..இல்லண்ணா!"
"அவ என் மனைவி!நான் அவளுக்கு தாலிக் கட்டினவன்!ஞாபகமிருக்கட்டும்!"-பல்லவியின் விழிகள் விரிந்தன.
"மனைவியா?என்ன இத்தனை நாள் இல்லாத பாசம்?"
"ஒருத்தன் தன்னோட காதலை இழந்து என் கண்ணை திறந்திருக்கான்!இப்போக்கூட அந்த பையன் அன்னிக்கு உன் மகன்கிட்ட பேசினது என் கன்னத்துல அறையுற மாதிரி இருக்கு!"
"ஓ...அதான் பொண்ணு மேலே பாசம் பொங்குதா?"
"அதனால உனக்கு எதாவது பிரச்சனை இருக்கா?"
"............."
"இருக்கா?"-மீண்டும் அவர் கடுமையாக கேட்க,லட்சுமியின் மனதில் அச்சம் குடிக் கொண்டது.
அவர் இல்லை என தலையசைத்தார்.
"அப்போ அமைதியா உன் வேலையை மட்டும் பாரு...!"
-கடுமையாக உரைத்தார்அவர்.அனைவரது விழிகளும் கேள்விக்குறிகளை தாங்கின.
"காண்பது யாவும் நிஜம் தானா?"-என்றிருந்தது பல்லவிக்கு!!
அவரது பேச்சின் இரகசியம் அவருக்கு புரியாத சமயத்திலும் அதை அறிந்துக் கொள்ள அவர் விழையவில்லை.
சங்கரனின் பார்வை குழம்பிப் போன மனையாளின் முகத்தையே கவனித்தது.
அப்பாவியான முகம்!அந்த விழிகளில் விலகாத அச்சம்!அதை எப்படியேனும் விலக்க தோன்றியது அவருக்கு!!
நிர்பயா தனது தைரியத்தையும்,பல்லவியின் எழிலையும் கலந்து செதுக்கப்பட்டவளாய் மனதில் ஒரு எண்ணம்!!
அந்த எழிலோவியத்தை தான் விலக்கி வைத்து விட்டோமே!எனது வைராக்கியத்தை வாங்கி ஜெனித்தவள்,அதை உடைத்தெறிந்து என்னை ஏற்பாளா?புதிர் போட்டது அவர் மனம்.
அதை எண்ணும் மாத்திரமே உதயமானது ஜோசப்பின் எண்ணம்!!
தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தனியே சென்றார்!
"ஹலோ விஜய்!"
"சொல்லுங்க சார்!"
"என்னாச்சு?"
"நீங்க சொன்ன மாதிரியே அவரை ஊருக்கு போகாம பண்ணிட்டேன் சார்!10 நாள் தான் அவகாசம் இருக்கு!அவர் மறுபடியும் முயற்சி பண்ணா,எல்லாம் முடிந்துவிடும்!"
"நான் பார்த்துக்கிறேன்!தேங்க்யூ!"
"நோ மென்ஷன் சார்!"-இணைப்பை துண்டித்தார் சங்கரன்.
அவர் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
"உன்னால எங்கேயும் போக முடியாது மை பாய்!நிர்பயாக்காக முதல் முறையா நான் கொடுக்க போற கிப்ட் நீ தான்!இத்தனை வருடம் என் மனைவியால்,மகளால் செய்ய முடியாததை நீ செய்துட்ட!சுலபமா என் மனசுல இடம் பிடித்துட்ட!இனி அந்த ஆண்டவனே நினைத்தாலும் நிர்பயாவையும்,உன்னையும் பிரிக்க முடியாது!நானும் விட மாட்டேன்!"-மனதுள் எண்ணினார் அவர்.
மனதை அமைதியான முறையில் அரசாட்சி செய்துக்கொண்டிருந்தாள் உதகையின் இயற்கை நாயகி!!மனம் முழுதும் நிர்மலமான நிலையில் அமைதியாக பாய்ந்தோடும் நதியினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிர்பயா.
ஒருகாலத்தில் நடந்த பழம் நினைவு அவளது இதயத்தை வியாபித்தது!!
"எங்கே கூட்டிட்டு போறீங்க?"
"வா!"
"சொல்லுங்க!"
"அமைதியா வர மாட்ட?உன்னை எதுவும் பண்ணிட மாட்டேன் வா!"-அந்த மலையின் உச்சத்தில் அவளை நிற்க வைத்தவன்,மூடியிருந்த அவளது நேத்திரங்களை சுற்றி இருந்த வஸ்திரத்தை திறந்தான்.