(Reading time: 9 - 17 minutes)

25. நிர்பயா - சகி

Nirbhaya

"ஜோசப்பை யாருக்காகவும் இழந்துடாதே!"-சங்கரனின் கூற்று மீண்டும் மீண்டும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"அவர் கூறியது அனைத்தும் உண்மையாக இருக்குமா?"-மனம் ஒரு ஐயம் எழுந்தது அவளுக்கு!!

"உனக்கு யாரு நிர்பயான்னு பெயர் வைத்தாங்க?"

"ஏன் கேட்கிறீங்க?"

"பெயருக்கும்,உனக்கும் சம்பந்தமே இல்லை! இப்படி பயப்படுற?"-பள்ளிப் பருவ நினைவுகள் அவள் மனக்கண்ணில் உதயமாகின.

"சரி...நான் கிளம்புறேன்!"

"ஏ..அம்மூ!"-அவள் விலகாமல் அவளை கரம் பற்றி தடுத்தான் ஜோசப்

அவள் மனதில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

"கையை விடுங்க!யாராவது பார்த்துவிட போறாங்க!"

"ஏ...உஷ்!"-என்றவன் அவள் அறியாவண்ணம் அவளது செவிக்கு அருகே பறந்துக் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியை மென்மையாக பிடித்தான்.

"ஐயே..!என்ன ரொமான்ஸ் பண்ண வந்தேன்னு நினைத்தாயா?ஏன் என்னைப் பற்றி எப்போதும் தப்பாவே உன் புத்தி யோசிக்குது?"-என்றவன் அந்த வண்ணத்துப்பூச்சியை அவள் முன் நீட்டினான்.அதைக் கண்டவள்,துடித்துப் போனாள்.

"ஏ..என்னாச்சு?"

"என்னங்க!ப்ளீஸ்..!அதை விட்டுவிடுங்க!"

"ஏன் உனக்கு பிடிக்காதா?"

"இல்லை....பாவம்!அதுக்கு வலிக்கும்!ப்ளீஸ்..!எனக்காக அதை விட்டுவிடுங்க!"-அழகிய சிறு ஜீவனை காணும் மாத்திரத்தில் ரசனை என்ற பெயரில் அதை அடித்து,பிடித்து,கசக்கி எறியும் சில பெண்டிரின் மத்தியில்,அவளது ஜீவகாருண்யம் அவனை வெகுவாக வீழ்த்தியது.

அவன் புன்னகைத்தப்படி,தனது மற்றொரு கரத்தில் அதை வைக்க,அது நிர்பயாவின் கன்னத்தை தீண்டிவிட்டு பறந்து சென்றது.

"துரோகி!"-பறந்துச் சென்ற அப்பூச்சியை பார்த்து கூறினான் ஜோசப்.

"ம்??"

"ம்ஹூம்! உனக்கு டைம் ஆயிடுச்சு!நீ கிளம்பு!"

"ம்!"-மனம் விரும்பாமல் விடையளித்தான் அவன்.இப்பொழுது எண்ணி பார்த்தாலும் மனம் துடிக்கிறது!!எப்படி அவன் மாறினான்??

எனை பழி வாங்கவே இங்கு வந்தானா??ஆனால்,எதற்காக??பின்,ஏன் மரணத்தருவாயில் நான் நின்ற சமயம் அவன் துடித்துப் போக வேண்டும்??விவாஹத்தை நிறுத்த நான் பரிந்துரைத்த சமயம்,என் கண்களை உற்று நோக்கி அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாக புலப்படவில்லை.உண்மையில், எதற்காக அவன் இவற்றை செய்தான்??

அவன் முழு விளக்கம் கொடுக்கும் சமயம் அவனை தடுத்தது தவறாகிப் போனதா??அவன் பேச்சிற்கு செவிமடுத்திருக்கலாமோ??

குழம்பிப் போனாள் அவள்!!!

அவளது கைப்பேசி,அக்குழப்பத்திற்கு தீர்வாக அலறியது.

"ஹலோ!"

"அண்ணி!நான் எட்வர்ட் பேசுறேன்!"-பதற்றமாக ஒலித்தது அவன் குரல்.

"சொல்லு எட்வர்ட்!என்னாச்சு?ஏன் பதற்றமா இருக்க?"

"அண்ணி!அண்ணா,மும்பைக்கு கிளம்புறார் அண்ணி!"

"என்ன?"

"ஆமா அண்ணி!கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவுட் ஹவுஸ் வந்தாரு!சொத்து மொத்தமும் என் பெயரில் மாற்றி எழுதிய டாக்குமண்ட்டை என்கிட்ட கொடுத்து,மன்னிப்பு கேட்டு போறார்.நான் எவ்வளவு தடுத்தும் நிற்கலை!எனக்கு பயமா இருக்கு அண்ணி!நீங்க இல்லாம,அவர் இருந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு நான் பார்த்திருக்கேன்!ப்ளீஸ் அண்ணி!அவரை தடுக்க உங்களால தான் முடியும்!போங்கண்ணி!ப்ளீஸ்..."-என்ன செய்வாள் அவள்??எதையும் சிந்திக்கவில்லை...கைப்பேசியை நழுவ விட்டவள் விரைந்து ஓடினாள்.அவனது காதல் அவளை இழுத்து சென்றது!!அவளுக்கு,அவன் குறித்த மதிப்பீடு அவசியமாகவில்லை!அவளுக்கு தேவை அவன் மட்டும் தான்!அவன் ஒருவன் மட்டும் தான்!!

தகையை விட்டு விரைந்து புறப்படுவதே அவனது எண்ணமாக இருந்திருக்கலாம்!அவனது கார் காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது.

காலமெல்லாம் கானலாகிய ஒரு உணர்வு மனதுள்ளே!!

"என்ன நடந்தாலும் சரி,யார் என்ன சொன்னாலும் சரி,உலகமே எதிர்த்தாலும் சரி,எதைப் பற்றியும் கவலைப்படாம உன்னை பாதுகாக்க வேண்டியது என்னோட பொறுப்பு!"-அன்று அவன் அளித்த வாக்கை உடைத்து,இன்று சென்றுக் கொண்டிருக்கிறான்.

"என்னை போன்ற கல்மனம் அகிலத்தில் எந்த ஆண்மகனுக்கும் இராது!"-தன்னை தானே பழித்துக் கொண்டிருந்தவன்,எதிரில்,நின்ற வேறொரு வாகனத்தால்,தடுத்து நிறுத்தப்பட்டான்.

விழிகள் நிச்சயம் ஸ்தம்பித்து போயின!அது அவள் தான்!!ஆனால்,இதுவும் பிரமையா??என்றது மனம்...அதே கேள்வியோடு சிலையாக இறங்கியவன்,அவளை நோக்க இரு அடிகள் எடுத்து வைத்தான்.அதற்கு மேல் செல்ல ஏதோ தடுத்தது!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.