(Reading time: 14 - 28 minutes)

12. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

காதலின் சுவடுகள்...மனித வாழ்வினில் அழிக்க இயலா தடங்களை பதித்து நகர்கின்றன...

எண்ணற்ற இன்பங்கள்,வேதனைகள்,காயங்கள், வலிகள்,உரிமைகள்,அக்கறைகள்,வாக்குகள் இவற்றை மனித இருதயத்தில் மிக ஆழமாக பதித்து செல்கின்றன...

எவ்வளவு சர்வாதிகாரம் கொண்ட ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ ஒருவர் இருந்தாலும் அவர்களை சிறு பாலகர்களாய் உருமாற்றும் வலிமை இருவருக்கு உரியது!ஒன்று வெறும் சதை பிண்டத்திற்குள் ஒரு ஆன்மாவை உட்புகுத்தி உயிரளிக்கும் தாயவளுக்கு!மற்றொன்று ஈரைந்து மாதம் சுமந்து பெற்ற சிசுவை நம்பிக்கையோடு ஒரு தாய் ஒப்படைக்கும் காதலுக்கு!!

என்ன இருக்கிறது இக்காதலில்?அழியப்போகும் வாழ்வினில் இல்லறம் எதற்கு?என்று வினவுபவர்களும் சிலர் உண்டு!!அது மெய்யெனில் அழியப் போகும் மனிதனுக்கு வாழ்க்கை எதற்கு??காரணமின்றி யாதொன்றும் நிகழவில்லை இங்கு!!இருப்பது ஓர் வாழ்க்கை!அதிகப்பட்சம் 100 ஆண்டுகள் அவகாசம் கொண்ட வாழ்க்கை!இதிலும் வளர்ந்து தேயும் சந்திரன் போல் எண்ணற்ற இடர்பாடுகள்!!இருக்கும் ஒரு வாழ்க்கை சந்திரன் என்றால்,அதற்கு ஔி நல்கும் ஆதவன் அன்பன்றோ!!

"நைட் லேட்டா வருவீங்களா?"-வெறுப்போடு கேட்டாள் மித்ரா.

"ஆமா!இன்னிக்கு ஒரு பார்ட்டி!"

"என்ன பார்ட்டி?"

"இந்தியாவுல இருக்கிற லீடிங் பிஸ்னஸ் மேக்னட்ஸ் எல்லாருக்கும் ஒரு சின்ன வார்ம் அப்!"

"நீங்க ஏன் போகணும்?"

"அடிப்பாவி..நான் எல்லாம் டாப்-டென் லிட்ஸ்ல ஒருத்தன்!"

"சரி...போனோமா!கொஞ்ச நேரம் இருந்தோம்மான்னு வந்துடுங்க!குடிக்க கூடாது!"-உறுதியாக கூறினாள் மித்ரா.

"ஓ.கே. குடிக்க மாட்டேன்!"

"சத்தியமா?"

"சத்தியமா!"-வாக்களித்துவிட்டு வெளியேறினான் ராணா.

"எங்கேயோ தப்பு நடக்குது!மாமா எப்படி நான் சொன்ன உடனே சரின்னு சொல்லிட்டார்?"-அவன் நடவடிக்கையில் தெரிந்த திடீர் மாற்றம் எதையோ அவளுக்கு உணர்த்தாமல் உணர்த்தியது.

ஆம்..!அவனிடம் பெரும் மாற்றம் உருவாகியுள்ளது!அவன் நடவடிக்கைகள் அதை உரக்க உரைக்கின்றன..அதன் காரணம் என்ன?எது?யார்?என்பதெல்லாம் அவன் மட்டுமே அறிந்திருந்தான்.அதிலும்,குறிப்பாக அவன் மனம் மட்டுமே அறிந்திருந்தது.

ன்றிரவு...

அந்த பிரம்மாண்ட விடுதி நவீனமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பாரதத்தின் முக்கிய பிரமுகர்கள் அங்கு குழுமி இருந்தனர்.ஆண்கள்,பெண்கள் என யாவரும் அங்கு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அர்ஜூன் வராது போகவே,அங்கு தனித்து வர மாயாவிற்கு கட்டாயமாகிப் போனது!!இயல்பாக அவள் ஆரவாரத்தை வெறுத்து ஒதுக்குபவள்.அங்கு நடக்கும் நாடகம் அவள் தலையில் பாரத்தை சேகரித்து கொண்டே சென்றது.அங்கிருந்து வெளியேறவும் இயலாது!!வேறு உபாயமின்றி அதிக நேரம் செலவிடாமல் அதுநாள் வரை உடன் வைத்திருந்த கைப்பேசியில் கவனம் பதித்திருந்தாள்.

"ஏ...மாயா!இங்கே ஏன் தனியா இருக்க?கம் ஜாயின் வித் அஸ் பேபி!"-ஒரு நடுத்தர வயது எம்.என்.சி.உரிமையாளர் பரிந்துரைத்தார்.

"நோ..நோ தேங்க்ஸ்!நான் இங்கேயே இருக்கேன்!"-நாகரிகமாய் மறுத்தாள் அவள்.

"ஓ..பேபி!"-என்று அவளருகே அமர்ந்தார் அவர்.

"யு லுக் கார்ஜேரியஸ் பேபி!"

"தேங்க்ஸ்!"-மனதின் வெறுப்பை உமிழாமல் கூறினாள் அவள்.

"ஜஸ்ட் எ மினிட்!"-என்றவர் மேலும் சிலரை அழைத்தார்.

"இவங்க என் ப்ரண்ட்ஸ்!ஷி இஸ் காம்பிலி!"-என்று ஒவ்வொருவராய் அறிமுகம் செய்தார்.

"அண்ட் இது என் சன் ஸ்டீவ்!"-ஆங்கிலேயனை போன்ற ஜாடை கொண்ட ஒருவனை மகனென்னு அறிமுகம் செய்தார்.அவனது பார்வை மாயாவிடமே நிலைப்பெற்று இருந்தது.

"ஹாய்!"-என்று மாயாவை அணைக்க வந்தான் அவன்.நிலையின் விபரீதம் உணர்ந்தவள் சட்டென விலகினாள்.

"ஓ..ஸ்டீவ்!மாயா கலாச்சாரம் வேற!இதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது!"-அவர் நிலையை விளக்க முயன்றார்.அதே சூழலில் அங்கு நடப்பவற்றை இரு கண்கள் சிவந்தப்படி கவனித்துக் கொண்டிருந்தன.

தன்னிடம் உரையாடிக் கொண்டிருந்தவர்களை கவனிக்காமல் கையில் மதுக் கோப்பையுடன் மாயாவையே கவனித்துக் கொண்டிருந்தான் ருத்ரா.

"கம் ஆன் மாயா!"-என்று மதுபானத்தை ஒரு குவளையில் ஊற்றி அவளுக்கு அளித்தனர்.

"இல்லை..பழக்கமில்லை!"

"வாட்?இதுக்கூட பழக்கமில்லையா?"

"............"

"நோ பிராப்ளம்!கூல்டிரிங்க்ஸ் குடிக்கிறீயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.