(Reading time: 14 - 28 minutes)

'மாயா!உனக்கு என் மேலே வருத்தம் இருக்கும்னு தெரியும்!என்னோட டைரியை உன்னை படிக்க நான் அனுமதித்ததே இல்லை!மன்னிச்சிடும்மா!அது கட்டாயம்!நான் உயிரோட இருக்கிற வரை என் நினைவுகளை உன்னால படிக்க முடியாது!இருண்டுப் போன என் வாழ்க்கையில எனக்கு கிடைத்த சூரிய ஔி நீ!உனக்கு தெரிந்தது எல்லாம் காயத்ரியோட விலகல் மட்டும் தான்.ஆனால்,உண்மையிலே பல வேதனைகளை சந்திக்கப் போறது காயத்ரி தான்!நான் சொல்ல வருவது புரியலைன்னு தெரியும்!ஒருநாள் மன குழப்பத்துல நீ தத்தளிக்கிற நேரம் நிச்சயம் இந்த டைரி உன்னிடம் கிடைக்கும் செல்லம்!அன்னிக்கு இதுக்கூட இருக்கிற பென்டிரவ்வை போட்டு பாரு!'-என்று முடிந்தது அந்த பக்கம்.

ஒவ்வொரு வாக்கியத்திலும் இருந்த மர்மங்கள் ஏதோ தவறு நடந்திருப்பதை தெளிவாய் அவனுக்கு விளக்கியது.

சிந்திக்காமல் மேசை மீதிருந்த பென்டிரவ்வை தனது அறையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியோடு இணைத்தான்.அதில் இருந்தது எல்லாம் ஒரே ஒரு காணொளி காட்சி மட்டுமே!சில நிமிடங்கள் கடந்ததும் அதில் மகேந்திரனின் பிம்பம் தெரிந்தது.தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் விளைந்திருந்த கம்பீரம் எவரையும் அசைத்துப் பார்க்கும் தன்மையுடையதாய் தோன்றியது ராணாவிற்கு!!அச்சூழலிலும் இதழோரம் மலர்ந்திருந்த கர்வப்புன்னகை அது  அவரது தனித்துவமாய் இருக்கலாம்!!!

'என்னடா அப்பா எப்போதும் மனசுவிட்டு பேசுவாரே இன்னிக்கு இப்படி பேசுகிறாரேன்னு யோசிக்கிறீயா மாயா?நான் முதலிலே சொல்லி இருந்தேன்,இது உன் கையில கிடைக்கும்போது நான் இருக்க மாட்டேன்னு!அப்படி என்ன நான் உன்கிட்ட பகிர்ந்துக்கொள்ள தயங்குற அளவு ஒரு விஷயம் இருக்குன்னு யோசிக்கிறீயா?ஒரு விஷயம் இருக்கு!அதை நான் மறைத்தன் காரணம் உன் கோபம்!என்னால நிறைய துன்பம் அனுபவித்திருக்க!நிறைய வேதனைகளை ரொம்ப சின்ன வயசுலே கடந்து வந்திருக்க!நிகழ்ந்த எல்லாத்துக்கும் முழு பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்!"

"வாழ்க்கையே முடிந்தப்பிறகும் வைராக்கியத்தோட உன்னை நான் வளர்த்த காரணம் இரண்டு!முதல் காரணம்,நீ என் இரத்தம்!என்னோட மாயா!என் ஆதி,அந்தம் எல்லாமே நீ தான்!யாராலும் அடக்க முடியாத என்னை அடக்கி ஆண்டவள் நீ!என் பிரதி பிம்பம் நீ!இரண்டாவது காரணம்,காயத்ரி!"-குழப்பத்தோடு கவனித்த ருத்ராவின் முகம் இளகியது.

"எங்க காதலோட ஒரே சாட்சி நீ!எனக்கு தெரியும் நீ உன் பல சந்தோஷங்களை இழந்து பழி வாங்க துணிந்த காரணம் காயத்ரி மேலிருக்கிற பகை!ஒரு விஷயம் புரிந்துக்கொள்..நடந்த தவறு எதிலும் காயத்ரிக்கு பங்கில்லை!அவ குழந்தை மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்வாள்!அடம் பிடிப்பாள்!ஆனால்,யாரையும் அவளுக்கு வெறுக்க தெரியாது!நடந்த எல்லாத்துக்கு நான் கவனிக்காம விட்ட ஒரே விஷயம் தான் காரணம்!உன் தாத்தா காயத்ரி பெயரில் எழுதி வைத்த ஆஸ்தி!"

"ஆமாம்டா!தன்னோட ஒட்டுமொத்த பாரம்பரிய ஆஸ்தியையும் காயத்ரி பெயரில் அவர் எழுதி வைத்திருந்தார்.அவரோட முதல் பொண்ணுக்காக அவர் எதையும் செய்யலை!அதுதான் இதற்கு முக்கிய காரணம்!ரகுராம்,அவனோட அண்ணன் இரண்டு பேரும் நல்லவங்க இல்லை!அதிலும்..ரகுராமுக்கு காயத்ரி முக்கியமில்லை.அவளோட அந்தஸ்து முக்கியமா இருந்தது!அதற்கு நான் தடையா வந்தேன்.அவளை கூட்டிட்டு வரும்போது இந்த உண்மை தெரிந்திருந்தா மொத்த சொத்தையும் திருப்பி கொடுத்துட்டு வர சொல்லிருப்பேன்!இந்த உண்மை ரொம்ப தாமதமாக தான் எனக்கு தெரிந்தது.நான் வணங்குற ஈசனோட அருளால என்னமோ ரகுராமோட அண்ணாவே கொஞ்ச காலத்துக்கு முன்னாடி என்னை சந்தித்து இந்த உண்மை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்டார்.மன்னிப்பு எதுக்குன்னு யோசிக்கிறீயா?இன்னிக்கு உன் அப்பா இந்த நிலைக்கு மாற காரணம் ரகுராமோட சதி!அடிப்பட்ட நாகம்,பழிவாங்க காத்திருந்தது!அதற்கான சமயம் எனக்கு தற்செயலா நடந்த விபத்துல கைக்கூடியது!என் உடம்புல செலுத்தப்பட்ட இரத்தம் திட்டுமிட்டு செலுத்தப்பட்டது!அந்த உண்மை புரிந்துக்காமல் தான் அம்மா நம்மைவிட்டு போனா!"

"காயத்ரிக்கு நடந்த கல்யாணமும் வற்புறுத்தலால் தான் நடந்திருக்கு!இவ்வளவு காலம் கழித்து எதுக்காக இந்த உண்மையை உன்கிட்ட சொல்றேன் தெரியுமா?என்னோட ஒரே நம்பிக்கை நீதான்!காயத்ரி அங்கே தினம் சித்ரவதையை அனுபவிக்கிறாள்!அவளை காப்பாற்ற உன்னை தவிர யாராலும் முடியாது!போதும்!சாந்தமாகிவிடு!நீ காட்டின கோபம் எல்லாம் போதும்!என் காதல் இன்னும் சாகலை!அதை ஆதாரமாக்கி நான் உன்னை வேண்டி கேட்கிறேன்!இதற்கு மேலும் இந்தத் தாண்டவம் வேண்டாம்!"-இரு கரம் கூப்பி அவர் வணங்க,அதைக் கண்டவனின் கர்வம் தரைமட்டமாகி,ஒரு துளி நீரை அவன் விழி சிந்தியது.

"நான் போக வேண்டிய காலம் வந்துவிட்டது!ஒரு அப்பாவா உனக்கு செய்ய வேண்டிய ஒரு கடமையை செய்யாமல் போறேன்!அது என்னன்னு உனக்கு தெரிந்திருக்கும்!கவலைப்படாதே!எந்தச் சூழ்நிலையிலும் உன் வாழ்க்கையில முடிவு எடுக்குற அதிகாரம் எனக்குண்டு!என்னை மீறி எதுவும் உன் வாழ்க்கையில நடக்காது!தைரியமா இரு!இங்கே நாம வந்தது ஏதோ ஒரு கடமைக்காக தான்,அந்தக் கடமை பூர்த்தியானதும் இந்த வாழ்க்கையில இருந்து நாம விடுப்பட தான் ஆகணும்!என் கடமை மாயாங்கிற மகாசக்தியை பெண்ணென்ற ரூபத்துல இந்த உலகத்துக்கு கொடுக்கிறது!நான் அதை செய்து முடித்துட்டேன்.நீ சுயமாக வாழுற காலம் வந்துவிட்டது!"

"இனி,காலம் உள்ளவரை உன் கூட தான் நான் இருப்பேன்!ஆனா,உன் பார்வைக்கு தெரிய மாட்டேன்!என்னடா அப்பா இப்படி பேசுறாரே தற்கொலை பண்ணிக்க போறாரான்னு நினைக்காதே!என் முடிவு நெருங்கினது எனக்கு தெரிந்துவிட்டது அவ்வளவுதான்!நான் சொன்னதை மறந்துவிடாதே!காயத்ரி மேலே எந்தத் தப்புமில்லை!"-என்ற வசனத்தோடு அக்காணொளி காட்சி முடிவுக்கு வந்தது.

சோர்ந்துபோய் அப்படியே சாய்ந்துவிட்டான் ருத்ரா.அவன் மனம் ஏதேதோ சிந்திக்க தொடங்கியது!அது ஒரு ஆழ்ந்த சிந்தனை!!!மிக ஆழமான சிந்தனை!!

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.