(Reading time: 10 - 20 minutes)

11. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

"ம்மா!அப்பா ஏன் இன்னும் வரலை?"-பிஞ்சு குரலில் கேட்டாள் மாயா.

"வேலை இருந்திருக்கும் செல்லம்!கொஞ்ச நேரத்துல வந்துடுவார்!"-காலமும் கழிந்தது...அவர் வந்தப்பாடாய் தெரியவில்லை.

"சுப்பையா தாத்தா!இங்கே வாங்களேன்!"-தன் இல்லத்தில் பணிபுரிபவரை அழைத்தாள் மாயா.

"என்னம்மா?"

"அப்பா ஏன் இன்னும் வரலை?அவருக்கு போன் பண்ணி பாருங்களேன்!"

"இதோ பண்றேன்மா!"

"மாயா அவர் போன் பண்ணட்டும்!நீ வந்து சாப்பிடு வா"

"அப்பா வரட்டும்மா!"

"அப்பா வருவாருடா!நீ வா!டைம் ஆகுது பார்!"

"அப்பா வந்தா தான் சாப்பிடுவேன்!"

"வர வர ரொம்ப அடம் பண்ற நீ!எல்லாம் உன் அப்பா கொடுக்கிற செல்லம்!வரட்டும் இருக்கு அவருக்கு!"

-வழக்கமான அர்ச்சனைகளை தொடர்ந்தவரை தடுத்தது பதற்றமான சுப்பையாவின் குரல்!!

"மா!"

"என்னப்பா?என்னாச்சு?ஏன் பதற்றமா இருக்கீங்க?"

"ஐயாவுக்கு..."

"என்னாச்சு அவருக்கு?"

"ஐயாவுக்கு விபத்து நடந்துடுச்சாம்மா!"-விவரம் அறிந்தவர் நொறுங்கிப் போனார்.

"எ...என்ன உளர்றீங்க?"

"பொய் சொல்லலைம்மா!நிஜமா தான் சொல்றேன்!"

"இல்லை...நான் நம்ப மாட்டேன்!நீங்க பொய் சொல்றீங்க!"

"நம்புங்கம்மா!ஆஸ்பிட்டல்ல சேர்த்து வைத்திருக்காங்க!நான் போய் வண்டியை எடுக்க சொல்றேன்!"-இடிந்துப்போய் அப்படியே அமர்ந்துவிட்டார் காயத்ரி.

ஏன் காதலின் மேல் மரணம் இந்தளவு வெறுப்பினை உமிழ்கிறது??யாவரும் ஓர் நாள் உலகைவிட்டு பிரிய வேண்டியது நிர்பந்தம்!ஆனால்,ஏனோ காதலில் இணைந்தோர் ஒருவர்விட்டு ஒருவர் பிரியும் சமயம் மட்டும் மனமானது அதனை ஏற்க மறுக்கிறது!!விதியின் உதவியோடு இறைவன் ஏதேனும் சூழ்ச்சி புரிந்து அவ்வில்லறத்தை சர்வ நாசமாக்கிட ஏன் சங்கல்பம் மேற்கொள்கிறான்??

'நான் ஆண்மகனும் அல்ல!ஸ்திரியும் அல்ல!இரண்டிற்கும் நடுவானவனும் அல்ல!"-என்று முப்பாலை ஷேத்திர யுத்தத்தில் விளக்கிய இறைவனுக்கும்,ஒரு காதல் தேவைப்பட்ட காரணத்தில் தானே தன்னுள் உறைந்த சக்தியை பிரித்து தன் மனையாளாய் தன்னை தாங்க வேண்டுகிறான்!!அவ்வாறு இருக்க மனிதன் மேல் மட்டும் ஏன் இந்த வஞ்சனை அவனுக்கு??ஒருவேளை,தன்னைப்போல் அகிலத்தில் எவனும்  மனையாளை நேசிக்கலாகாது என்று பொறாமை கொண்டானோ!!

"மேடம்!பயப்பட ஒண்ணுமில்லை!ப்ளட் தான் அதிகமா லாஸ் ஆகி இருக்கு!எங்கக்கிட்ட அவர் பிளட் குரூப் இல்லை!நீங்க 'ஓ' நெகடிவ்வா??"

"இல்லை டாக்டர்!!நான் 'ஏ' பாஸிடிவ்!"

"காட்!சீக்கிரம் அவருக்கு இரத்தம் ஏற்றணுமே!"

"டாக்டர்!"-மருத்துவரின் முட்டியளவே இருந்த மாயா அவரது மேல் சட்டையை பிடித்து இழுத்தாள்.

"என்னம்மா?"

"அப்பா நான் அவருடைய இரத்தம்னு சொல்வாரு!நான் வேணும்னா இரத்தம் கொடுக்கட்டா?"-கபடமில்லா அக்கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

"மாயா!"-தன் புதல்வியை ஆரத் தழுவிக்கொண்டார் காயத்ரி.

"அழாதீங்கம்மா!அப்பாக்கு ஒண்ணும் ஆகாது!அவர் மறுபடியும் வந்து என் கூட விளையாடுவார்!"-அவள் மனவுறுதி விதியையும் உலுக்கி எடுத்திருக்கலாம்!அடுத்த ஐந்தாவது நிமிடம்,"டாக்டர்!பிளட் கிடைத்துவிட்டது!"என்ற குரல் ஒலித்தது.மனவுறுதி ஆட்டம் கண்ட நிலையில்,மாயாவின் முன் மண்டியிட்ட அம்மருத்துவர்,"யு லிட்டில் பிரிசன்ஸஸ்!உண்மையிலே நீ காட் கிப்ட் தான்!"பரபரப்பாக கூறிவிட்டு,பரபரப்பாக எழுந்து சென்றார்.

விதி இங்கு தான் பல மர்மங்களை திரித்தது.மாவீரன் ஒருவனை வீழ்த்த வேண்டுமெனில் வீரத்தினால் இயலாதல்லவா!!இளம் வயது என்றாலும்,மாவீரம் கொண்ட தீரன் ஒருவனை வதைக்க,அன்று கவுரவ சேனைக்கும் 'சக்ரவியூகம்' என்ற துரோகம் அவசியப்பட்டதல்லவா!!இங்கும் அவசியப்பட்டது.

மகேந்திரனின் உடலில் செலுத்தப்பட்ட செங்குருதியில் 'எச்.ஐ.வி.'எனப்படும் கிருமியின் தொற்று இருப்பதனை ஆராயாமல் அக்குருதியினை அவர் உடலில் உட்செலுத்த அவரும்,அவரோட சேர்த்து அக்கிருமியின் ராஜ்ஜியமும் உயிர்த்தெழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.