(Reading time: 10 - 20 minutes)

"ப்பா!மனுஷனா நீங்க?காட்டுவாசி மாதிரி பேசுறீங்க?"

"ஏன் காட்டுவாசி எல்லாம் மனுஷன் இல்லையா?"

"உங்கக்கிட்ட போய் கேட்டேனே!"

"கேட்காதே!"

"கூட கூட பேசுறீங்க!"

"என்ன கூட கூட பேசுறீங்க?"

"ஈஸ்வரா!"

"என்ன ஈஸ்வரா?"-ஆத்திரத்தில் அவன் கழுத்தை நெரிக்க வந்தவள்,பின்,அவன் தலையில் 'நங்'கென்று குட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

"அடிப்பாவி!எங்கேயாவது மரியாதை இருக்குதான்னு பாரேன்!ஆனாடி,உன்னை கட்டிக்க போகிறவன் ரொம்ப பாவம்டி!ரொம்ப பாவம்!"

"எல்லாம் எங்களுக்கு தெரியும்!நீங்க இப்போ கீழே வரலைன்னா டிபன் கிடையாது!"

"எங்களுக்கு தெரியுமா?ஒருவேளை பார்த்து வைத்துவிட்டாளோ!நாம தான் அப்பாவியா இருக்கோம் போலிருக்கு!கீழே வரலைன்னா டிபன் கிடையாதுன்னு வேற சொல்லிட்டா!ம்...நாம வேற பசி தாங்க மாட்டோமே!நோ!ஈகோ நெக்ஸ்ட்!ஃப்ர்ஸ்ட் சாப்பாடு தான்!"-என்று ஒரு முடிவிற்கு வந்தவன் கீழிறங்கி சென்றான்.

"ஓய்!என்னடி டிபன் இன்னிக்கு?"

"உப்புமா!"

"உப்புமா?"-மெல்லிய குரலில் அதிர்ந்தவன்,

"நான் வெளியே சாப்பிட்டுக்கிறேன் செல்லம்!டைம் ஆயிடுச்சு!"-என்று நகர பார்த்தான்.

"உதை!"

"எது?"

"சாப்பிட்டு கிளம்புங்க!"

"எனக்கு பசிக்கலை!"

"பரவாயில்லை சாப்பிடுங்க!"

"விடமாட்டா போலிருக்கே!"-தலையெழுத்தே என்று அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

"பசிக்கலைன்னு சொன்னீங்க?"

"வேணாம்!வாய்ல நல்லா வருது எதாவது சொல்லிட போறேன்!"-என்று தண்ணீரை குடித்துவிட்டு கிளம்பினான்.

மனம் விரும்பிய பாடல் ஒன்றை முணுமுணுத்தப்படி வந்தவனுக்காக கார் கதவை திறந்தான் அவன் ஓட்டுநர்.

"நானே போய்கிறேன்!பர்ஸ்னல் வேலை இருக்கு!"-என்று தனித்துப் புறப்பட்டான்.தன் பாதையில் விழி எதிரே விரிந்த மாற்றத்தினை அனுபவிக்க தனிமையில் ஒரு பயணத்தை தொடங்கினான் ருத்ரா.

'மகேந்திரா ஹோம் ஆப் சில்ட்ரன்ஸ்!"-உலகியலின் பார்வையில் ஆதரவற்றோர் என்று பெரிய மனதோடு முத்திரைக் குத்தப்பட்ட இறைவனின் திவ்ய சொரூபங்கள் ஆயிரக்கணக்கானோர் சமூகத்தின் சாடல்கள் இன்றி,எவரது கொச்சை சொற்களுமின்றி,தங்களை அவமானமாய் கருதி தனித்து விடுத்த சில நன்மனம் கொண்டவர்களுக்கு சாட்டையடி கொடுக்க தங்களை தாங்களே செதுக்கிக் கொண்டிருந்தனர் அவர்கள்!!

"பசங்க எல்லாருக்கும் தேவையான பொருட்கள் எல்லாம் வந்துடுச்சா?"

-அக்காப்பகத்தின் பாதுகாவலரிடம் வினவினாள் மாயா.

"வந்துடுச்சு மேடம்!ஆனா,நீங்க சாக்லெட் சாப்பிட பசங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கீங்க! நான் ஏன் கேட்கிறேனா நீங்க எப்போதும் அதை ஊக்குவிக்க மாட்டீங்களே!"-அவள் சிறிது மௌனம் காத்தாள்.

"சும்மா தான்!எதாவது பிரச்சனையா?"

"நோ மேடம்!"

"குட்!நான் கொஞ்சம் தனியா இருக்கணும்!"

"நான் கிளம்புறேன்!"-மெதுவாக நழுவிக்கொண்டார் அவர்.

அமைதியான அச்சூழலில் கேட்டவை எல்லாம் குழந்தைகளின் ஆரவாரம் தான்!!சாய்வு நாற்காலியில் அமர்ந்தவண்ணம் அப்பிஞ்சு பாலகர்களின் குறும்புகளை இரசித்துக் கொண்டிருந்தாள் மாயா.

"ஹர்ஷா!எங்கே போற?"-காண வந்த யாரோ ஒருவரின் அழைப்பை உதாசீனம் செய்து மாயாவின் அருகே வந்தாள் ஒரு சிறுமி ஹரினி!!

"வரேன்!"-குரல் கொடுத்துவிட்டு மாயாவின் அருகே வந்தாள் அச்சிறுமி!!அவளது வருகையை கண்டவள் எழுந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

நேராக மாயாவிடம் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

"தேங்க்யூ மாயா!"

"தேங்க்ஸா எதுக்கு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.