(Reading time: 14 - 27 minutes)

09. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

னிதே காலை  பொழுது விடிந்தது......... எங்கிருந்தோ குயில் கூவும் ஓசை கேட்டது.  பூர்வி கண் விழித்த பொழுது கண் இமைகளை பிரிப்பதே கடினமாக இருந்தது. இரவு முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைத்து தூக்கத்தை தொலைத்திருந்தாள் பூர்வி........

எழுந்து போய் குளியல் அறையில் பார்த்த பொழுது ரெசார்டில் இருப்பது போன்று புதிய டிஸ்போசபிள் பிரஷ், பேஸ்ட் இருந்தது. பல் விளக்கி, முகம் கழுவி அறையை விட்டு வெளிய வந்த பொழுது, ஸ்ருதியும், ஹெலனாவும் அவளுக்காக ஹாலில் காத்திருந்தனர்.

“என்ன பூர்வி , நீ தான் முதலில் வந்து எங்களுக்காக காத்திருப்ப, என்று நினைத்தேன். நீ என்னவோ உன் மாமியார் வீடு மாதிரி மெதுவா எழுந்து வர்ற? என ஸ்ருதி அவளை கேலி செய்தாள்.

பூர்விக்கு வந்த கோபத்தில், ஸ்ருதி என்று ஆரம்பிக்கும் முன் .........

“யாரோட மாமியார் வீடுமா? என்று கேட்டவாறு சம்யுக்தா உள்ளே நுழைந்தார் முகத்தில் மென் புன்னகையுடன் ........  அவர் பின்னால் அவர்கள் வீட்டு சமையல் பெண்ணும், கையில் காபி கோப்பைகளுடன்.

பூர்விக்கு தர்ம சங்கடமாக இருந்தது.  ஸ்ருதியை பார்த்து முறைத்து கொண்டே என்ன சொல்லுவது என் யோசிக்கையில்..........

“சாரி ஆன்டி, நான் சொன்னதை வாபஸ் வாங்கிகறேன்.” என ஸ்ருதி தடாலடியாக பின் வாங்கினாள். அப்பாடா என்று இருந்தது பூர்விக்கு....

“ஏம்மா? என சம்யுக்தா கேட்டதற்கு.......

“பின்ன என்ன ஆன்டி? எந்த மாமியார் வீட்டில், இப்படி மாமியாரே வந்து காலையில் பெட் காபி கொடுப்பார்கள்?

“இந்த மாமியார் கொடுப்பேன்மா”..........

“போச்சு, என்னோட சான்ஸ் எல்லாம் போச்சு”  என ஸ்ருதி புலம்ப......

“என்ன சான்ஸ்மா? என புன்னகையுடன் தெரிந்து கொண்டே கேட்டார் சம்யுக்தா........

“வேற என்ன ஆன்டி, எனக்கு இப்படி கல்யாணம் நிச்சயம் ஆன பின் இவ்வளவு நல்ல மாமியார் எல்லாம் கண்ணுக்கு தெரியராங்கலே”..........

 “அதனால் என்னம்மா, நீ நல்ல மருமகளா இருக்கலாம் இல்ல”........

“அது கஷ்டம் ஆன்டி, உங்கள மாதிரி எல்லாம், என்னால இருக்க முடியாது.....  உங்களுக்கு வரபோற மருமகள் ரொம்ப லக்கி ஆன்டி, இவ்வளவு ஹன்ட்சம் ஹஸ்பன்ட் , இவ்வளவு நல்ல மாமியார்........

“நல்ல மாமியாரா இருக்க நான் ரெடி, ஆனா மருமகளை கொண்டு வர என் பையன் ரெடியா இல்லையே?”

“ஏன் ஆன்டி? என ஆர்ச்சரியமாய் ஹெலனா வினவினாள்.

“அவன் படிச்சு முடிச்சு வந்த முதல் இரண்டு வருஷம், பிசினஸ், பிசினஸ்ன்னு பிசியா இருந்தான். நானும் போன ஒரு வருஷமா, பொண்ணு பார்க்கறேன், கொஞ்சம் கூட ரியாக்ட் செய்ய மாட்டேன் என்கிறான்” என ஹெலனாவிர்க்கு பதில் சொல்லி கொண்டே பூர்வியின் முகத்தை பார்த்து கொண்டிருந்தார் சம்யுக்தா........

“யாரையாவது விரும்பராரான்னு கேடீங்களா ஆன்டி? என மிக உரிமையாக ஸ்ருதி கேட்டாள்.........

 “சாரி ஆன்டி, நீங்க தப்ப எடுத்துக்காதிங்க, அவ எப்பவும் இப்படிதான் கொஞ்சம் துடுக்கா பேசுவா” என பூர்வி சமாளித்தாள்.

சம்யுக்தா சிரித்து கொண்டே “எனக்கும் இப்படி பேசினா தான் பிடிக்கும். அதனால் தப்பா எடுத்துக்க ஒன்னும் இல்லைடா....... சரி காபி எடுத்துக்கோங்க........ காபி குடிச்சுட்டு வாக் போகணும்னு நினைச்சிங்கன்ன 10வது மாடியில் ஜிம்மில், ட்ரட் மில்  இருக்கு, அதில் வாக் பண்ணுங்க..........  அதற்குள் காலை சிற்றுண்டி தயாராகிடும்.

“நானும், பூர்வியும் தினமும் வாக் பண்ணுவோம், எங்களுக்கு வசதி, ஆனா ஹெலனா தினமும் ஸ்விம் தான் பண்ணுவா, அவளுக்கு தான் கஷ்டம்,” என ஸ்ருதி, ஹெலனாவை வெருப்பேற்றினாள்.

“10 வது மாடியில், பாதி தளத்தில் ஜிம்மும், மீதி பாதியில் நீச்சல் குளமும் இருக்கு, அதனால் ஹெலனாவும் அவளது பயிற்சியை செய்யாலாம்” என  சம்யுக்தா, ஹெலனாவிர்க்கு பரிந்து பதில் அளித்தார்.........

அதானே, பத்து மாடி கட்டி வைத்து இருக்காங்க, அதில் நீச்சல் குளம் இல்லாமல் போகுமா என எண்ணி தன்னையே குட்டி கொண்டாள் ஸ்ருதி........

“இல்லை இருக்கட்டும் ஆன்டி, எங்க போட் எப்போன்னு தெரிந்தா நாங்க கிளம்பி ரேசார்ட்டில் போய் பார்த்து கொள்கிறோம்”. என பூர்வி ஆட்சேபித்தாள்.

“நான், சரி சொன்னாலும் உங்க அங்கிள் உங்களை, சாப்பிட வைக்காம அனுப்ப மாட்டார்.  நீங்க ரிலாக்ஸ் பண்ணுங்க, நான் போய் டிபன் ரெடியான்னு பார்க்கறேன்” என கூறி சென்றார் சம்யுக்தா........

வர் சென்ற சிறிது நேரத்தில், இந்தர் அங்கு வந்தான்.  

“உங்களுக்கு போட் ஒன்பது மணிக்கு தான் அதனால் நீங்க எல்லோரும் இங்க டிபன் சாப்பிட்டே கிளம்பலாம். ஸ்ருதி, அம்மா உங்களிடம் டேபிள் செட் செய்ய சில டிப்ஸ் கேட்கனும்னு சொன்னாங்க. நீங்க அவங்களுக்கு உதவ முடியுமா ப்ளீஸ்? உங்களுக்காக டைனிங் ஹாலில் வெய்ட் செய்யறாங்க.” என கூறி அவளை கிளப்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.