(Reading time: 8 - 15 minutes)

மூங்கில் குழலானதே – 25 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

ந்தோஷம்! மனிதன் அனைத்தையும் அறிந்தவன் போல தன்னைக் காட்டிக் கொண்டாலும் சந்தோஷத்தை அடையும் சூட்சமத்தை மட்டும் அறிந்ததே இல்லை. எங்கே என் சந்தோஷம் என்று அனுதினமும் தேடி அலைபவன், தன் ஆழ்மனதை மட்டும் தட்டி திறந்து பார்ப்பதே இல்லை.

மனதின் எண்ணங்கள் தானே நமக்கு திருப்தியை தரும் தேடல்கள். அந்த தேடல்களை நிவர்த்தி செய்வதுதானே நமது செயல்? செயல்களின் இறுதி பலனாகத் தானே சந்தோஷத்தை பெருகிறோம்? எனில் நமது சந்தோஷத்தை உருவாக்குவதே மனம் அல்லவா?

அந்த மனதின் நிலையில் நிதானமாக்கி, தீய எண்ணங்களை வெளியில் கொட்டிவிட்டு நல்ல எண்ணங்களை விதைத்து கொண்டிருந்தால் சந்தோஷம் மழையென பொழியும் என்பதை மனிதன் என்றறிவான்? சிந்திக்கிறேன் சகிதீபன்.

கௌதம்.. கௌதம்.. ஓடாதே நில்லு! டேய்” மூச்சிரைக்க அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள் சதீரஞ்சனி. தன் மனைவியின் கைகளில் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தான் கௌதம். (மனைவியா? அட ஆமாங்க.. நாம சம்மர் வெகேஷன் போட்டு வர்ற கேப்ல இங்க மூணு மாசம் சொயிங்னு ஓடி போச்சு.. ஒரு வாரத்திற்கு முன்பு மிகவும் எளிய முறையில் தன் தந்தையின் ஆசியோடு சதிரஞ்சனிக்கு திருமாங்கல்யம் அணிவித்திருந்தான் கௌதம். வாழ்த்துக்கள் பாஸ்)

அப்பா அவனை புடிங்கப்பா.. எப்போ பார்த்தாலும் ஒரே சேட்டை.. இன்னைகு விட மாட்டேன் பாருங்க!” என்று கௌதமின் தந்தையை உதவிக்கு அழைத்தபடி ஓடினாள் ரஞ்சனி. மகன் மற்றும் மருமகளுடன் கழியும் நிமிடங்களை ரசித்தார் மணி.

“டேய் மகனே நில்லுடா.. பாவம்டா என் பொண்ணு..அவளை ஓட விடாதே” என்றார் அவர்.

“ ஆமாபொண்ணாம் பொண்ணு..கல்யாணம் ஆன ஒரே வாரத்துல பன்னு சைஸ்ல இருக்கா” என்று கௌதம் வாரவும்,கடுப்பாகினாள் சதீரஞ்சனி.

“டேய் குரங்கு மூஞ்சி, ஏதோ பாவம்னு உனக்கு வாழ்க்கை கொடுத்தால் என்னையே கலாய்க்கிறியா?” என்று அவனை அடிக்க வரவும்,

“மச்சி நீ எப்ப இருந்து இப்படி டிப்பிக்கல் வைஃப் மாதிரி ஆகின?” என்று மீண்டும் வாரினான் கௌதம். என்னத்தான் சலித்து கொள்வது போலவே நடித்தாலும் அவனுக்கும் இந்த நிலை பிடித்தே போனது.

அவன் தோழியான காணும் வேளையில் அவள் காதலியென தோன்றினாள்.

அவளை காதலியென கொஞ்சினால் உடனே தோழியென கண் சிமிட்டினாள். சதீரஞ்சனியுடன் பகிரும் ஒவ்வொரு நொடியுமே அவனுக்கு தித்திப்பாக மாறி போனது.

ன்றும் இல்லா திருநாளாக சகிதீபனைத் தேடி வந்தாள் விஷ்வானிகா. இந்த மூன்று மாத இடைவெளியில் அவள் அறிந்த்தெல்லாம் வருண்.. வருண்.. வருண்! இத்தனை நாட்களாய் பிரிந்திருந்த நாட்களாய் சேர்ந்திருந்து கடன் தீர்ப்பது போலவே அவளைப் பிரியாது இருந்தான் அவன்.

“இன்னைக்கு சர்ஜரி நல்லா முடிஞ்சது!

புது பைக் வாங்கணும்,ஷோரூமுக்கு வா!

ஒரு ஹைகூ கவிதை கேட்குறீயா?

இன்னைக்கு என்ன லன்ச் சாப்பிடலாம்?

ப்ரண்டோட கல்யாணத்துக்கு கூட வர்றியா?” இப்படி அவளிடம் பேச்சை வளர்க்க ஆயிரம் காரணங்களை தேடீ வைத்திருந்தான். வெளிச்சம் அருகில் வரவும், நிழல் தூரமாய் மண்ணில் விழுவதைப் போலவே வருண் தந்த மகிழ்ச்சி அவள் மனதில் இருந்த கவலைகளை தூரம் விலக்கி போட்டன.

அந்த சந்தோஷத்தை வாழ்நாள் முழுதும் பெரும் ஆசை அவளுக்கும் வந்துவிட்டதை வருணின் மூலமாய் சகிதீபன் தெரிந்து வைத்திருந்தாலும், தங்கையின் மனமாற்றத்தை அவளே சொல்லட்டும் என்றே காத்திருந்தான்!

“சகிண்ணா!” இப்போதெல்லாம் அவனை அப்படித்தான் அழைக்கின்றாளவள். அவனும் தடுக்கவில்லை.அதேநேரம் தனது முகமுடியையும் அவிழ்க்கவில்லை!

“சொல்லு வினி! என்னை தேடி வந்துருக்க?என்ன விஷயம்?”

“ உன்கிட்ட பேசணும்ணா”

“தெரியுது… அதான் என்னன்னுகேட்குறேன்!”

“அது வந்து.., வருண்…” என்றவளின் முகத்தின் நாணம்படர்ந்தது.

“ஆஹா மச்சான், நீ மாப்பிள்ளை ஆகும் நேரம் வந்துருச்சு போலடா” என்று வாய்க்குள் முணுமுணுத்தான் சகிதீபன்.

அதை கவனிக்காத விஷ்வானிகாவோ,

“உனக்கு கௌதமை தெரியுமா?” என்று கேட்டு வைத்தாள். அவனைப் பற்றி வருண் மூலமாகவும் அருண் தாத்தாவின் மூலமாகவும்தெரிந்தே வைத்திருந்தான் அவன்,  மேலும் சென்ற வாரம் தான் கௌதம் சதீரஞ்சனியுடன் தங்கள் வீட்டிற்கே வந்து விஷ்வாவை திருமணத்திற்கு அழைத்திருந்தான்.

அவனது பேச்சு இப்போது எதற்காம்? விழியாலேயே வினவினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.